(507)

சுவரில் புராணநின் பேரேழுதிச் சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்

கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே

 

பதவுரை

புராண

-

நெடுநாளாக எனக்கு உபகரிக்கு மவனே!

காமதேவா

-

மன்மதனே!

சுவரில்

-

சுவரிலே

நின்போ;

-

உனது பெயர்களை

எழுதி

-

எழுதி

சுறவம் நல்கொடிகளும்

-

மீன்களாகிற நல்ல த்வஜங்களையும்

துரங்கங்களும்

-

குதிரைகளையும்

கவரி பிணாக்களும்

-

சாமரம் வீசுகின்ற பெண்களையும்

கரும்பு வில்லும்

-

கரும்பாகிற தநுஸ்ஸையும்

காட்டித் தந்தேன் கண்டாய்

-

உனக்கு உரியனதாகக் காட்டிக் கொடுத்தேன

அவரைப் பிராயம் தொடங்கி

-

இளம்பருவமே தொடங்கி

என்றும் ஆதரித்து

-

(அக்கண்ணபிரானையே) எப்போதும் விரும்பி

எழுந்த

-

கிளர்ந்த

என்தடம் முலைகள்

-

எனது பருத்த முலைகளை

துவரைப் பிரானுக்கே

-

த்வாரகைக்குத் தலைவனான அக்கண்ணபிரானுக்கே

சங்கற்பித்து

-

(அநுபவிக்கத்தக்கவை என்று) ஸங்கல்பித்து

தொழுது வைத்தேன்

-

(உன்னை) தண்டனிடா நின்றேன்

(இந்த மநோரதத்தை)

ஒல்லை விதிக்கிற்றி

-

(நீ) சீக்கிரமாகத் தலைக் கட்டுவிக்கவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானைக் காணவேணுமென்ற ஆவலுடைய ஆண்டாள் அவனைக் கண்டால் பின்பு காமதேவனை மறக்க்க்கூடுமாதலால், அங்ஙனம் மறதி நேரிடாமைக்காக, அந்த மன்மதனைப் பாரிஜந பாரிவாரங்களுடன் சுவரில் எழுதி வைக்கும்படியைக் கூறுவன, முன்னடிகள். புராண - பிரிந்தவர்களைக் கூட்ட வல்லவனாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளனவனே! என்றுங் கூறுவர். சுறவம் மத்ஸ்யவிசேஷம். காமன் மீனைக் கொடியாகவுடையவனாதல் அறிக, துரங்கம் வடசொல். கவரி - கஸாP என்ற வடசொல் விகாரம். பிணா - பெண்பொதுப்பெயர் கரும்பு+வில். கருப்புவில்’ காமனுக்கு ‘இக்ஷுதந்வா’ என்று வடமொழியிற் பெயர் வழங்குமாற்றிக.

பின்னடிகளில், கண்ணபிரானை யன்றி மற்றொருதேவதையை அநுபவிக்கத் தனக்கு ருசியில்லாமையும், அந்த ருசியைப் பயன்பெறுவிக்கவேண்டுமென்பதையும் கூறுகின்றனள்.

(அவரைப் பிராயம் இத்யாதி,) “பிராயந்தொடங்கி அவரை ஆதரித்து” என்று உரைப்பார் உளரேனும் அது இகழத்தக்க உரையாம்’ ‘கவர’ என்ற வடசொல் இங்கு அவரை என்று திரிந்ததென்னலாம்.

துவரை - ?????? என்ற வடசொற்சிதைவு. ஆண்டாளுடைய கொங்கைகளோடே ஆடல்கொடுக்கைக்குப் பதினாறாயிரம் பெண்களுக்கும் முன்னோட்டுக் கொடுத்த கண்ணபிரான் வேணுமாய்த்து என்று ரஸோக்தியாக உரைப்பர்.

(தொழுது வைத்தேன்) இத்தொழுகையைக் காமனிடத்து அந்வயிப்பியாமல் முலைகளிடத்தே அந்வயிப்பித்துப் பொருள் கொள்ளதலும் மிகச் சிறக்கும். அதாவது - கண்ணபிரானிடத்தில் ஆதாரமே எருவாக வளர்ந்த இம்முலைகள் அவனுக்கே யென்று ஸங்கல்பித்துக் கொண்டு, இம்முலைகளைத் தொழாநின்றே னென்கை’ அவற்றைத் தொழுவானென் எனில்’ எம்பெருமானுடைய விபூதி களையெல்லாம் வணங்குங்குடியிலே பிறந்தவளாதலால், அவனுக்கென்று ஸங்கல்பிக்கப்பட்ட தன் முலைகளையும் பகவத்விபூதித்வ ப்ரதிபத்தியாலே தொழலாமிறே. “அவனுக்கென்று ஸங்கல்பித்தால் பின்னை அவன் குணங்களோபாதி உபாஸ்யமாமித்தனையிறே” என்பது பொரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல்.

ஒல்லை - இம் முலைகளின் செவ்வி அழிவதற்கு முன்னமே என்று கருத்து.

 

English Translation

I write your name on the walls. O Fabled god of love! I draw stallions, banners with fish emblem, bows of sugarcane and whisk waving maidens. My amorous breasts have swelled and grown mature precociously. Pray make haste and deliver them to Krishna, Lord of Dvaraka.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain