nalaeram_logo.jpg
(505)

வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து

முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா

கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி

புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே

பதவுரை

காமதேவா

-

மன்மததேவனே!

வெள்ளை நுண்மணல் கொண்டு

-

வெளுத்த சிறிய மணல்களைக் கொண்டு

முள்ளும் இல்லா சுள்ளி

-

(எறும்பு முதலியவை இல்லாதவளவேயன்றியே) முள்ளுமில்லாத சுள்ளிகளை

எரி மடுத்து

-

நெருப்பிலிட்டு

முயன்று

-

(இவ்வாறான) ப்ரயத்நங்களைச் செய்து

உன்னை தோற்கின்றேன்

-

நோன்பு நோற்கா நின்றேன்’

(ஆன பின்பு,)

கள் அவிழ்

-

தேன் பெருகாநின்றுள்ள

பூ  புஷ்பங்களாகிற கணை

-

அம்புகளை

தெரு அணிந்து

-

வீதிகளை அலங்கரித்து,

வெள் வரைப் பதன்முன்னம்

-

கிழக்கு வெளுப்பதற்கு முன்னமே

துறை படிந்து

-

நீர்த்துறைகறில் முழுகி,

தொடுத்துக்

-

கொண்டு (வில்லில்) தொடுத்துக் கொண்டு

கடல் வண்ணன் என்பது ஓர் போ; எழுதி

-

கண்ணபிரானுடைய கடல்வண்ணனென்கிற ஒரு நாமத்தை

(அம்பிலே) எழுதிக்கொண்டு

புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில்

-

‘பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவன், என்னும் ஓர் குறியா

(கிற அக்கடல்வண்ணன் பக்கலில்

புக

-

(நான்) சென்று சேரும்படி என்னை என்னை

எய்கிற்றி (நீ) சேர்ப்பிக்கவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிறிய வெண்மணல்களைக் கொண்டு வீதிகளை அலங்கரித்தலும், நாட்காலே நீராடுதலும், ஸமித்துக்களை நெருப்பிலிட்டுத் தீவளர்த்தலும் இங்குக் காமநோன்புக்கு உறுப்பாகச் செய்யுமவை யென்க. சுள்ளி ஸ்ரீ இளவிறகு. முயன்று ஸ்ரீ எம்பெருமான்றானே வந்து நம்மை ஸ்வீகரிக்க நிற்றல் ஸ்வரூபாநு ரூபம் என்று அறுதியிட்டு நிற்கக் கடவளான நான், இப்போது அவனைப் பெறுகைக்குச் செய்யும் முயற்சி இது காணாய் என்கை.

இம்முயற்சிக்கு ப்ரயோஜநங் கூறுவன, பின்னடிகள். கள்ளவிழ்பூங்கணை- அரவிந்தம், அசோகம், மா, நவமல்லிகை, கருநெய்தல் ஆகிய இவ்வைந்து மலர்களும் மன்மதனுக்கு அம்புகளாம். (கடல்வண்ணன் இத்யாதி.) ‘எழுதி’ என்றது - அம்பிலே எழுதி என்றனவாறுமாம்’ நெஞ்சிலே எழுதிக் கொண்டு என்றவாறுமாம்’ நெஞ்சிலே எழுதிக்கொண்டு என்றவாறுமாம்’ ‘அம்பிலே எழுதிக் கொண்டு’ என்ற பக்ஷத்தில் ‘ச்ரமஹரமான வடிவையுடைய உன்னை ஆண்டாள் ஆசைப்பட்டாள்’ என்று அம்பிலே எழுதி எய்து அவ்வழியாலே அவனுக்கு என்மீது ஆசையை உண்டாக்கிப் பின்னே அவனோடு என்னைச் சேர்க்கவேணுமென வேண்டுவதாகக் கருத்து உணரத்தக்கது’ இனி ‘நெஞ்சிலே எழுதிக்கொண்டு’ என்ற பக்ஷத்தில், இன்னானோடு இவளைச் சேர்ப்பிக்கவேணுமென்று ஸங்கல்பித்துக் கொண்டு என்றபடி.

“வெள்வரைப்பதன் முன்னம்” என்றது ‘வரைவெளுப்பதன் முன்னம்’ என்றபடியாய்’ உதயகிரி வெளுப்பதற்குமுன்னே எனப்பொருள்படுமென்பர்.

புள்ளினைவாய் பிளந்த வரலாறு:- ஒரு காலத்தில் கண்ணபிரான் பலராமனோடும் இடைப்பிள்ளைகளோடுங் கன்றுகளை மேய்த்துக்கொண்டு யமுநாநதியைச் சேர்ந்து, யாவருங் கட்டுச்சோறு தின்று யமுனையிலிறங்கி நீர்குடித்துக் கன்றுகளையும் நீரூட்டிக் கரையேறுகையில், தன்னை நலிவதற்காகக் கம்ஸனால் ஏவப்பட்டுக் கொக்கின் வடிவங்கொண்டுவந்த பகாஸுரனைக் கண்டு பலராமன் முதலியார் கூப்பாடுபோட, அதுகண்டு ஸ்ரீகிருஷ்ணன், இது வெறும் பட்சியே யென்று ஸாமாந்யமாக நினைப்பவன் போலப் புன்முறுவல் செய்துநிற்க, அப்போது அவ்வசுரன் கண்ணனை விழுங்கிவிட, பலராமன் முதலியோர் சொல்ல முடியாத வளவு துக்கத்தையடைந்து கதற, அவ்வசுரனுடைய நெஞ்சில் ஸ்ரீ கிருஷ்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமுடியாமல் கண்ணனை வெளியே உமிழந்து மூக்கினால்; குத்த நினைக்கையில், கண்ணபிரான் அவனது வாயல்குகளைத் தனது இருக்கைகளினாலும் பற்றி விரைவாகக் கிழித்திட்டனன் என்பதாம். இலக்கு - ஆண்டாள் தன்னுடைய ஆசை சென்று சேரும்படியான குறிப்பிடம். எய்கிற்றியே? - சேர் ப்பிக்கவல்லையே? என்றுமாம். என்னை என்பதை உருபுமயக்கமாகக்கொண்டு, ‘எனக்காக’ எனப் பொருள்கொண்டு, எய்கிற்றி - புஷ்பபாணங்களைக் கண்ணபிரான் மீது பிரயோகிக்கவேணும் என்றவாறாகவு முரைக்க இடமுண்டு.

English Translation

I decorate the streets with fine sand, and bathe before dawn, then feed the fire with thorn less faggots and invoke you. O God of love! Brace your bow with nectared flowers, and think of the name “Ocean hued Lord”, then aim your mark to unite me with the Lord who ripped the bird’s beak.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain