nalaeram_logo.jpg

(504)

தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியையும் தொழுதேன்

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.

பதவுரை

அனங்கதேவா

-

காமதேவனே!

தைஒரு திங்களும்

-

தைமாதம் முழுதும்

தரை விளக்கி

-

நீ எழுந்தருளவேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக

தண் மண்டலம் இட்டு

-

குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு

மாசிமுன் நாள்

-

மாசிமாதத்தின் முதற்பக்ஷத்தில்

ஐய நுண்மணல் கொண்டு

-

அழகிய சிறிய மணல்களினால்

தெரு

-

(நீ எழுந்தருளும்) வீதிகளை

அழகினுக்கு அணிந்து அலங்கரித்து

-

அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து

உய்யவும் ஆம் கொலோ என்று சொல்லி

-

(காமனைத் தொழுதால் நாம்) உஜ்ஜீவிக்கலாமோ? எனக்கருதி

உன்னையும்

-

(காமனாகிய) உன்னையும்

உம்பியையும்

-

உன் தம்பியான சாமனையும்

தொழுதேன்

-

வணங்காநின்றேன்

வெய்யது

-

(ப்ரதிகூலர் பக்கலில்) உக்கிரமானதும்

தழல் உமிழ்

-

நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான

ஓர் சக்கரம்

-

ஒப்பற்ற திரு வழியாழ்வானை

கை

-

திருக்கையில் அணிந்துள்ள

வேங்கடவற்கு

-

திருவேங்கட முடையானுக்கு

என்னை

-

என்னை

விதிக்கிற்றி

-

கைங்கரியம்பண்ணும்படி கல்பிக்கவேணும்

(ஏ-ஈற்றசை)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணபிரானோட்டைக் கலவி யைக் கணிசித்துத் திருபாவையில் நோன்புநோற்ற ஆண்டாள் அவ்வளவிலும் அவன் வந்து கலக்கக்காணாமை யாலே ஆற்றாமை மிகப்பெற்று, ‘இனி நாம் வெறுமனிருந்தாலாகாது’ பிரிந்தாரைச் சேர்ப்பிக்கவல்லவன் மன்மதனென்று கேளாநின்றோம்; அவனது காலில் விழுந்தாவது கண்ணபிரானோடு கூடப்பெறுவோம்’ எனக்கருதி, அங்ஙனமே அந்த மன்மதனைத் தன் காரியஞ்செய்யும்படிக்கு ஈடாக ஆராதிக்க நினைத்து, அவன் வரவேண்டிய இடங்களையும் தெருக்களையும் பரிஷ்கரித்து அழகிய சிறு மணல்களால் அலங்கரித்து அழகுபெறுவித்து (மண்டல பூஜைக்காக) மண்டலாகாரமான மேடையிட்டு அவனையும் அவன் தம்பியையும் வணங்குவதாகக் கூறும் பாசுரம், இது.

“உய்யவுமாங்கொலோ!” என்று ஐயப்படுவதற்குக் காரணம் யாதெனில், ஸ்வரூபநாசத்தை விளைவிக்கவல்ல தேவதையைப் பற்றினமையால் இப்பற்று உஜ்ஜீவநஹேதுவாமோ? அன்றி, கீழ்விழுகைக்கு ஹேதுவாமோ? என்று நெஞ்சு தளும்புகிறபடி,

திங்கள் - சந்திரன்:  அமாவசைக்கு அமாவசை ஒருமாதமெனக் கொண்டு சந்திர சம்பந்தத்தாற் காலத்தை வரையறுக்கும் சாந்திரமானரீதிபற்றி, ‘திங்கள்’ என்று மாதத்திற்குப் பெயர்; வழங்கலாயிற்று: மதி என்பதும் இது; இலக்கணை.

தரை - பூமிக்குவாநகமான் ‘யாரோ’ என்ற வடசொல் தரையெனத்திரியும். விளக்கி-விளங்கச்செய்து என்றபடி. மண்டலமிடுகையாவது மண்டலபூஜையென்கிற ஒரு ஆராதரத்தைச் செய்வதற்காக மண்டலவடிவமான காலைக்கொண்டு நடக்குமிடத்தில் பெரிய மணல்களிருந்தால் காலில் உறுத்துமென்று நொய் மணல்களாக ஆராய்ந்து அலங்கரித்தபடி.

அணிந்து- என்று சொல்லி வைத்து, மீண்டும் “அழகினுக்கு அலங்கரித்து” என்றது புநருக்தமாகாதோ எனில்: ஆகாது ‘தெருவை அலங்கரித்து’ என்றவாறே வேறொரு பிரயோஜனத்தை உத்தேசித்து அலங்கரித்தபடியோ, அழகு பெறுவித்தலையே ப்ரயோஜனமாகக்கொண்டு அலங்கரித்தபடியோ? என்று சங்கையை ஏறிட்டுக்கொண்டு, ‘அழகினுக்கலங்கரித்து’ என்றதென்க. மீமிசைச் சொல்லுமாம்: ‘தொழுதிறைஞ்சி, ஏத்தித்துதித்து’ என்பன போல.

அனங்கதேவா! - இது வடமொழிவிளி. அனங்கன் - உடம்பில்லாதவன்: காமன் உடலிழந்தவரலாறு:- முன்னொருகாலத்திற் கைலாஸமலையிற் பரமசிவன், ஸநகர்; முதலிய நால்வாக்கு யோகநிலையை உணர்த்துதற்காகத் தான் யோகஞ்செய்து கொண்டிருக்கையில், பிரமனது ஏவலால் மலரம்புகளை எய்து தனது தவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச் சினந்து நெற்றிக் கண்ணைவிழித்து அதன் நெருப்புக்கு இரையாய் உடலெரிந்து சாம்பலாய்ப் போம்படி செய்தனனென்பதாம். மன்மதனுக்குப் பல பெயர்களிலிருக்க, அவற்றைவிட்டு ‘அனங்க தேவா!’ என்றழைத்தமையால், ‘நீ உன் உடம்பை இழந்தும் பிரிந்தாரைக் கூட்டுமவனல்லையோ’ என்னுங் கருத்துத் தோற்றுமாறு காண்க.

“என்று சொல்லி” எனறவிது - வார்த்தைப்பாடு: “என்று சொல்லி” என்றவிது - வார்த்தைப்பாடு’ ‘என்று நினைத்து’ என்பது அதன்பொருள். ‘நீ இங்கிருப்பாயென்று சொல்லி நான் வந்தேன்’ என்றால் ‘நீ இங்கிருப்பாயென்று நினைத்து நான் வந்தேன்’ எனப்பொருளாகக் கடவதிறே:

(உன்னையும் இத்யாதி.) மனமதனை மாத்திரம் தொழுதாற் போராதோ? கூட அவன் தம்பிக்கும் வந்த வாழ்ணுவு என்? எனில்;  ஆண்டாள் திருப்பாவையில் கண்ணபிரானைப் பற்றும் போது நம்பிமூத்தபிரான் முன்னாகப் பற்றினளாதலால், அந்த வாஸனையாலே இங்கும் மன்மதனை உடன் பிறந்தானோடு கூட உபாஸிக்கிறபடி.

உம்பி - ‘உன்தம்பி’ என்பதன் மரூஉ. “காமன் தம்பி சாமன்” என்று பெரியவாச்சான் பிள்ளை உரைத்தருளினார்’ அதன் விவரணம்’ கண்ணபிரானுக்குத் தேவிமார் பலர் உளரென்றும், அவர்களுள் ருக்மிணிப் பிராட்டியிடத்தில் மனமதாம்சமாக ப்ரத்யும்நன் பிறந்தனன் என்றும். ஜாம்பவதி தேவியினிடத்தில் ‘ஸாம்பன்’ என்பவன் பிறந்தனன் என்றும், ஸ்ரீபாகவதத்திற்கூறியுள்ளதனாலும், இங்குச் சாமன் என்பது ஸாம்பனையேயாகையாலும் காமனுக்குச் சாமன் தம்பியாயினனென்க. (வேற்று வயிற்றுத்தம்பி.)

மன்மதனைத் தொழுகைக்கு ப்ரயோஜநஞ் சொல்லுகிறது-நான்காமடி. ஸ்ரீ வைகுண்டத்தில் அயர்வறுமரர்கட்குக் காட்சிக்கொடுத்துத் தன் செருக்குத் தோற்ற வீற்றிருக்குமவன் ‘ஸம்ஸாரிகளும் இப்பேற்றைப்பெற்று வாழவேணும்’ என்று அங்குநின்றும் போந்து முதற்பயணமெடுத்துவிட்டு, அடியாருடைய விரோதிகளை ஒழிக்கு மியல்வின்னான திருவாழியாழ்வானைக் கையிலுடையனாய்க் கொண்டு திருமலையில்வந்து நிற்கிறவனோடே என்னைக் கூட்ட வேணுமென்கிறாள்.

(விதிக்கிற்றி) விதிக்க + கிற்றி, விதிக்கிற்றி’ விகாரப்புணர்ச்சி. இனி, கிற்றியே’ என்றவிடத்துள்ள ஏ என்பதை அசையாகக்கொள்ளாமல் வினாக்குறிப்பாகக்கொண்டு, எம்பெருமானோடு என்னை நீ கூட்டவல்லையோ? என வினவியதாகவும் உரைப்பர்.

English Translation

In the months of early spring, seeking the elevation of spirit, I sweep the Earth, deck the street, and spread the beautiful Mandela. O Bodiless god of love, I worship you and your brother Syama. Direct me to the Lord of the radiant discus, Lord of Venkatam hills.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain