nalaeram_logo.jpg

எட்டாந் திருமொழி

(1818)

முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடுதடு மாறல்

அந்தர மேழும் அலைகட லேழும் ஆயவெம் மடிகள்தம் கோயில்,

சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவிவந் தருவிகள் நிரந்து,

வந்திழி சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1819)

இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்

அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர்முடிக் கடவுள்தம் கோயில்

விண்டலர் தூளி வேய்வளர் புறவில் விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்

வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1820)

பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் பெருநிலம் அருளின்முன் அருளி

அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்தவெம் மடிகள்தம் கோயில்

கணிவளர் வேங்கை நெடுநில மதனில் குறவர்தம் கவணிடைத் துரந்த

மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1821)

சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் சுடுசரம் அடுசிலைத் துரந்து

நீர்மையி லாத தாடகை மாள நினைந்தவர் மனம்கொண்ட கோயில்

கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்

வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1822)

வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய மணிமுடி ஒருபதும் புரள

அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட அமர்ச்செய்த அடிகள்தம் கோயில்

பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் பிரசம்வந் திழிதர பெருந்தேன்

மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1823)

விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக் கிளங்கன்று விசிறி,

குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த கூத்தவெம் மடிகள்தம் கோயில்

தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து

மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1824)

தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி யுதிர தானுகந்

தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,

வானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து,

மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1825)

புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் பொருகடல் அரவணைத் துயின்று,

பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனிமுகில் வண்ணர்தம் கோயில்,

கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள்வழிக் களிவண்டு பருக,

மதமிகு சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1826)

புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு,

எந்தைபெம் மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,

சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும்,

மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.

விளக்க உரை

(1827)

வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை மாமணி வண்ணரை வணங்கும்,

தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் சூழ்வயல் ஆலிநன் னாடன்

கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் கலியன்வா யொலிசெய்த பனுவல்,

கொண்டிவை பாடும் தவமுடை யார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே.

விளக்க உரை

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain