நான்காந் திருமொழி

(1778)

காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்

ஏவாயி னூடியங்கும் எஃகில் கொடிதாலோ

பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன்

பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே.

விளக்க உரை


(1779)

முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,

மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்

பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி

அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே.

விளக்க உரை


(1780)

வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம்

செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள்

பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்

தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே.

விளக்க உரை


(1781)

பரிய இரணியன் தாகம் அணியுகிரால்

அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு

பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்

அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே.

விளக்க உரை


(1782)

வில்லால் இலங்கை மலங்கச் சரந்fதுரந்த

வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்,

எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும்,

புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே.

விளக்க உரை


(1783)

சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்

அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்

செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்

இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே.

விளக்க உரை


(1784)

கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்

தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ புனையார்

மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்

வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே.

விளக்க உரை


(1785)

தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த

பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு

பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்

தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே.

விளக்க உரை


(1786)

வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,

ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,

போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,

ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே.

விளக்க உரை


(1787)

பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை

மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை

கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்

மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே.

விளக்க உரை


 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain