ஏழாந் திருமொழி

(1708)

வியமுடை விடையினம் உடைதர மடமகள்,

குயமிடை தடவரை யகலம துடையவர்,

நயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,

கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே.

விளக்க உரை


(1709)

இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து

துணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,

மணமலி விழவினொ டடியவர் அளவிய,

கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1710)

புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,

மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,

முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,

கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1711)

ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய்

போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர்

கோதிய மதுகரம் குலவிய மலர்மகள்

காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1712)

தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ

அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து

விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ

கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1713)

மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,

தழுவிய உருவினர் திருமகள் மருவிய

கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்

எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1714)

பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம்

எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர்

சுருதியொ டருமறை முறைசொலு மடியவர்

கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1715)

படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு

கொடிபுல்கு தடவரை அகலம துடையவர்

முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்

கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1716)

புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய

நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்

வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை

கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே.

விளக்க உரை


(1717)

மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை

வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்

கலியன தமிழிவை விழுமிய இசையினொடு

ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain