பத்தாந் திருமொழி

(1638)

பெரும்பு றக்கட லையட லேற்றினைப் பெண்ணை யாணை,எண்ணில் முனிவர்க்

கருள் தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் பத்த ராவியை நித்திலத் தொத்தினை,

அரும்பி னையல ரையடி யேன்மனத் தாசை யை அமு தம்பொதி யின்சுவைக்

கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1639)

மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும் மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,

மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,

நென்ன லைப்பக லையிற்றை நாளினை நாளை யாய்வரும் திங்களை யாண்டினை,

கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1640)

எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை வாச வார்குழ லாள்மலை மங்கைதன்

பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப் பான்மை யைப்பனி மாமதி யம்தவழ்

மங்கு லைச்,சுட ரைவட மாமலை உச்சியை,நச்சி நாம்வணங் கப்படும்

கங்குலை,பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1641)

பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத் தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,

மாய னைமதிள் கோவலி டைகழி மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் ஈசனை,

இலங் கும்சுடர்ச் சோதியை எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை

காசி னைமணி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1642)

ஏற்றி னையிம யத்துளெம் மீசனை இம்மை யைமறு மைக்கு மருந்தினை,

ஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும் ஐய னைக்கையி லாழியொன் றேந்திய

கூற்றி னை,குரு மாமணிக் குன்றினைநின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,

காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1643)

துப்ப னைத்துரங் கம்படச் சீறிய தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்

செப்பி னை,திரு மங்கைம ணாளனைத் தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி

ஒப்னை,உல கேழினை யூழியை ஆழி யேந்திய கையனை அந்தணர்

கற்பினை,கழு நீர்மல ரும்வயல் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1644)

திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய

விருத்தனை,விளங் கும்சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய

அருத்த னை,அரி யைப்பரி கீறிய அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற

கருத்த னை,களி வண்டறை யும்பொழில் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1645)

வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக் கன்று வீசிய ஈசனை, பேய்மகள்

துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய

நஞ்சி னை,அமு தத்தினை நாதனை நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,

கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1646)

பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற

விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை வேள்வி யைவிளக் கினொளி தன்னை,

மண்ணி னைமலை யையலை நீரினை மாலை மாமதி யைமறை யோர்தங்கள்

கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

விளக்க உரை


(1647)

கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன்என்று காத லால்கலி கன்றியு ரைசெய்த,

வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்

விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர் மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய

கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில் கற்க லாம்கவி யின்பொருள் தானே.

விளக்க உரை


 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain