எட்டாந் திருமொழி

(1418)

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து

மாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து

தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,

ஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.

விளக்க உரை


(1419)

வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று

கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்

ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.

விளக்க உரை


(1420)

கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்,

முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப

கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்

அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

விளக்க உரை


(1421)

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா

நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து

வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுளஅதற் கடியேன்

அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

விளக்க உரை


(1422)

மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன்,

தோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமை யிலத்தவிங் கொழிந்து

போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்

ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

விளக்க உரை


(1423)

மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்

தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா

பின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்

அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

விளக்க உரை


(1424)

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,

காத லென்மகன் புகலிடங் காணேன், கண்டு நீதரு வாயெனக் கென்று,

கோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

விளக்க உரை


(1425)

வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி,

காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப

ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

விளக்க உரை


(1426)

துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு

உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப,

வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து, உலகம்

அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.

விளக்க உரை


(1427)

மாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,

ஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,

நீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த,

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.

விளக்க உரை


 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain