ஐந்தாந் திருமொழி

(1388)

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால்,

மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்

உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட

திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே.

விளக்க உரை

(1389)

கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான்,

விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ? என்னும், மெய்ய

மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச்

சிலையாளன், என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே .

விளக்க உரை

(1390)

மானாய மென்னோக்கி வாநெடுங் கண்ணீர்மல்கும் வளையும் சோரும்,

தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின்,

கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற

ஆனாயன், என் மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே. .

விளக்க உரை

(1391)

தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை

யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,

பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய்,

மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கி லேனே.

விளக்க உரை

(1392)

பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள்,

ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்,

நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,

ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே,

விளக்க உரை

(1393)

தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,

யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல்

மாதாளன் குடமாடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற

தூதாளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லுகேனே.

விளக்க உரை

(1394)

வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள்,எண்ணில்

பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான்,

தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன்,

என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே.

விளக்க உரை

(1395)

உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால்,

மறவாதே யெப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின் றளால்,

பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்

அறவாளன், என்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே.

விளக்க உரை

(1396)

பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,

வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,

சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,

அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே,

விளக்க உரை

(1397)

சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த,

நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை, நேரார்

காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,

மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain