ஆறாந் திருமொழி

(1298)

தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,

நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய்,

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,

காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே.

விளக்க உரை

(1299)

மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,

விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்

துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,

கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1300)

உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,

கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய்,

பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்

கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1301)

முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்

கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,

சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,

கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1302)

படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,

மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,

தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,

கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1303)

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,

பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,

நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,

கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1304)

மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,

மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,

பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்

காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1305)

ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,

காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,

பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,

காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே.

விளக்க உரை

(1306)

சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,

அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,

மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,

கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.

விளக்க உரை

(1307)

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்

காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,

பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,

கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain