nalaeram_logo.jpg
(336)

மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்

திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்

எண்ணற் கரியதோ ரேனமாகி இருநிலம் புக்கிடந்து

வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்.

பதவுரை

மண்ணும்

-

பூமியையும்

மலையும்

-

மலைகளையும்

மறி

-

அலையெறியா நின்றுள்ள

கடல்களும்

-

கடல்களையும்

மற்றும் யாவும் எல்லாம்

-

மற்றுமுண்டான எல்லாப் பொருள்களையும்

திண்ணம்

-

நிச்சயமாக

விழுங்கி

-

(ப்ரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து நோக்கி

(பின்பு ப்ரளயங்கழிந்தவாறே)

உமிழ்ந்த

-

(அவற்றை வெளி.....காண) உமிழ்ந்து

தேவனை

-

எம்பெருமானை

சிக்கன

-

ஊற்றத்துடனே

நாடுதிர் ஏன்

-

தேடுகிறீர்களாகில், (இதனைக் கேளுங்கள்.)

எண்ணற்கு அரியது

-

நினைக்க முடியாத (பெருமையையுடைய)

ஓர்

-

ஒப்பற்ற

ரேனமாகி

-

............................ அவதரித்து

புக்கு

-

ப்ரளய வெள்ளத்தில் புகுந்தது

இருநிலம்

-

பெரிய பூமியை

இடந்து

-

அண்டைபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து (அவ்வளவிலே பூமிப்பிராட்டி தன்னை வந்து அணைக்க,)

வண்ணம்

-

அழகியதும்

கரு

-

கறுத்ததுமான

குழல்

-

குந்தலையுடைய

மாதரோடு (அந்த) பூமிப்பிராட்டியோடு

மணந்தானை

-

ஸமச்லேஷித்தருளினவனை கண்டார் உளர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பண்டொருகால் மஹாப்ரளயம் நேர்ந்தபோது உலகங்கள் யாவும் அதற்கு இரையாகப் புக, அப்போது எம்பெருமான் போருள்கொண்டு உலகங்களனைத்தையும் தனது திருவயிற்றில் வைத்து நோக்கினமை, முன்னடிகளில் கூறிய வரலாறு. இதனைத் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் “மைந்நின்ற கருங்கடலாய்” என்ற திருமொழியிற் பாக்க அருளிச் செய்தருளினர். திண்ணம் விழுங்கி- இந்திரஜாலஞ் செய்வாரைப்போல் விழுங்கினதாகக் காட்டுகையன்றியே, மெய்யே விழுங்கி என்றவாறு. சிக்கன நாடுதிரேல்-’ காணப்படுவனாகில் காண்போம்; இல்லையாகில் மிள்வோம்’ என்று மேலெழத் தேடுகையன்றியே, கண்டே விடவேணுமென்ற ஆதரத்துடன் தேடுகிறீர்களாகில் என்றபடி (எண்ணற்கரியது இத்யாதி.) ஹிரண்யாக்ஷனென்ற அஸுரன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால், திருமால், நெஞ்சினால் நினைத்து அளவிட வொண்ணாத வீறுபாட்டையுடைய மஹாவராஹ ரூபமாகத் திருவலதரித்துக் கடலினுட்புக்க அவ்வஸுரனை நாடிக்கண்டு பொருது கோட்டினாற் குத்திக்கொன்று, பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியை அங்கு நின்று கோட்டினாற் குத்தியெடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருள, அந்த மகிழ்ச்சியினால் ஸ்ரீபூமிபிராட்டி வந்தணைக்க, திருமால் அவளது அழகைக்கண்டு மயங்கி அவளோடு ஸம்ச்லேஷித்தபோது கண்டாருளர் என்கிறது. (அந்த ஸ்ம்ச்லேஷத்தில்தான் நரகாஸுரன் பிறந்தானென்றும், அஸமயத்திற் புணர்ந்து பிறந்தபடியினால் அஸுரத்தன்மை பூண்டவனாயினன் என்றும் புராணங் கூறும்.) இருநிலம்- பெரியபூமி; இரண்டு நிலமென்று பொருளன்று; இருமை- பெருமை; பண்புத்தொகை. ‘மாதர்’ என்கிறவிது பன்மைப்பாலன்று; “மாதர்காதல்” (தொல்காப்பியம்- சொல்லதிகாரம்- உரிச்சொல்லியல் கூறு) என்றபடி இது உரிச்சொல்லாதலால் ‘மண்மாதர் விண்வாய்” என்றதும் “மாதாம” மண்மடந்தை பொருட்டு” என்றதுங்காண்க. மாத- விரும்பப்படும் அழகுடையவள்.

English Translation

Are you surely looking for the Lord who swallows the Earth, the mountains, the oceans, and all else in one gulp and brings them out again? There are many who saw the lord who comes as a bear, beyond one’s imagination, then lifted the Earth and married the beautiful dark-haired Dame Earth.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain