nalaeram_logo.jpg
(334)

வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்துகையன்

உள்ள விடம்வினவில் உமக்குஇறை வம்மின் சுவடுரைக்கேன்

வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று

கள்ளப் படைத்துணை யாகிப்பாரதம் கைசெய்யக் கண்டாருளர்

பதவுரை

வெள்ளை

-

வெண்மை நிறமுடையதும்

விளி

-

(அநுபவ கைங்கரியங்களில் ருசியுடையீர்! வாருங்கள் என்று, தன்த்வநியால்) அழைப்பது போன்றுள்ளதுமான

சங்கு

-

ஸ்ரீபாஞ்சஜந்த்தையும்

வெம் சுடர்

-

தீக்ஷ்ணமான ஜ்யோதிஸ்ஸையுடைய

திருசக்கர்

-

திருவாழியாழ்வாளையும்

எந்துகையன்

-

தரியாநின்றுள்ள திருக்கைகளையுடைய எம்பெருமான்

உள்ள இடம்

-

எழுத்தருளியிருக்குமிடத்தை

வினவில்

-

கேட்கிறீர்களாகில்

உமக்கு

-

(கேட்கிற) உங்களுக்கு

இறை சுவடு உரைக்கேன்

-

சிறிது அடையாளம் சொல்லுகிறேன்,

வம்மின்

-

வாருங்கள்;

வெள்ளைப் புரவி

-

வெள்ளைக் குதிரகைள் பூண்டிருப்பதும்

குரங்குகொடி

-

குரங்காகிற வெற்றிக் கொடியை உடையதுமான

தேர்மிசை

-

(அர்ஜுனனுடைய) தேரின் மேலே

முன்பு நின்று (ஸாரதியாய்) முன்னே நின்று

படை

-

ஸைந்யத்துக்கு

கள்ளம் துணை ஆகி

-

க்ருத்ரிமத்  துணையாயிருந்து

பாரதம்

-

பாரத யுத்தத்தை

கைசெய்ய

-

அணிவகுத்து நடத்தும்போது

கண்டார் உளர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாழி திருச்சங்குங் கையுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடத்தைத் தேடுகின்றமை முன்னடிகளில் தோன்றும். (வெள்ளை இத்யாதி.) துஷ்டர்களை யெல்லாம் ஸம்ஹரித்துப் பூமியின் சுமையைப் போக்குதற்பொருட்டுத் திருவவதரித்த கண்ணபிரான் அதற்கு உபயோகமாகப் பாண்டவர்க்குத் துணைநின்று பலபடியாக உதவிப் பாரதயுத்தத்தை ஆதியோந்தமாக நடத்தி முடிந்தமை, மஹாபாரதத்தில் விரியும். சூதுபோரில் இழந்த ராஜ்யத்தை மீளவும் மோதுபோர்செய்து பெறுவதில் தர்மபுத்திரனுக்கு உபேக்ஷையுண்டான பொழுதெல்லாம் அங்ஙனம் வெறுப்புக் கொள்ளாத வண்ணம் பலவாறு போதித்துப் போர் தொடங்கும்படி தூண்டியும், பின்பு போர்த் தொடக்கத்தில் “உற்றாரையெல்லாம் முடன்கொன் றரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்” என்று சொல்லிப் பேரொழிந்த அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப் போர்புரிய உடன்படுத்தியும் கண்ணபிரானே பாரதப்போரை மூட்டியவனாதல் காண்க. கள்ளப்படைத் துணையாகி- படைக்குக் கள்ளத் துணையாகி; அதாவது- தான் ஸேனைக்குத் துணையாகிறபோது இரண்டு தலைக்கும் பொதுத்துணையாயிருக்கையன்றியே, பகலை இரவாக்கியும், ‘ஆயுதமெடுப்பதில்லை’ என்று சொல்லிவைத்து ஆயுதமெடுத்தும், எதிரியுடைய உயிர்நிலையைக்காட்டிக் கொடுத்தும் போந்தமையாம். இவற்றுள் அமுதல்க்ருத்ரிமம் மேலிற்பாட்டிற் கூறப்படும். (குரக்கு வெல் கொடி) பெருமாளுக்குப் பெரிய திருவடி த்வஜமானதுபோல, அர்ஜுனனுக்குச் சிறிய திருவடித்வஜமாயினன் என்க.

English Translation

Are you a search of the abode of the Lord who bears the white conch and the fierce radiant discus? Come, I shall offer a small clue. There are many who saw him on a chariot driven by white horses bearing the Hanuman banner, stealthily guiding the army in the Bharat war.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain