nalaeram_logo.jpg

.........    ..........    ................  .........  மற்றிவைதான்

என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என்னுரைக்கேன்,

மன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா          (2750)

மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,

அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்,

பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,

தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்

கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்           (2751)

மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,

தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,

கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,

அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?,

பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-                         (2752)

பதவுரை

ஏழைகள்

-

அவிவேகிகளை!

மற்று இவை தான் என்னாலே கேட்டீரே

-

இன்னும் இப்படிப்பட்ட உதாஹரணங்களை கேட்க விருக்கிறீர்களோ?

என் உரைக்கேன்

-

(உங்களுக்கு) எவ்வளவு சொல்லுவேன்? (இன்னும் ஒரு உதாஹரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்)

மன்னு மலை அரையன் பொன்பாவை

-

(சலிப்பிக்க வொண்ணாமல்) நிலைநின்ற பர்வதராஜனான ஹிமவானுடைய சிறந்த பெண்ணாய்

வாள் நிலா மின்னு மணி முறுவல் செம் வாய்

-

ஒளிபொருந்திய நிலாப்போல் விளங்குகின்ற அழகிய புன்னகையையுடைய சிவந்த அதரத்தையுடையளாய்

உமை என்னும்

-

உமா என்னும் பெயரையுடையளாய்

அன்னம் நடையை அணங்கு

-

அன்ன நடையை யுடையளான (பார்வதி யென்கிற) தெய்வப் பெண்ணானவள்

தன்னுடையகூழை

-

தனது மயிர் முடியை

சடாபாரம் தான் தரித்து

-

தானே ஜடா மண்டலமாக்கித் தரித்துக்கொண்டு

நுடங்கு இடைசேர்பொன் உடம்பு வாட

-

துவண்ட இடையோடு சேர்ந்த அழகிய உடம்பு வாடவும்

புலன் ஐந்தும் நொந்து அகல

-

இந்திரியங்கள் ஐந்தும் வருந்தி நீங்கவும்

அன்ன அரு தவத்தின் ஊடு போய் (என்னபேறு பெற்றாளென்றால்)

ஆயிரம் தோள் மன்னுகாதலங்கள் மட்டித்து

-

(சிவன் தனது) ஆயிரம் புஜங்கள் பொருந்திய கைகளை (த்திசைகளிலே) வியாபிக்கச் செய்து,

மாதிரங்கள் மின்னி எரி வீச

-

திக்குகள் மின்னி நெருப்புப் பொறி கிளம்பும்படியாக

மேல் எடுத்த

-

மேற்புறமாகத் தூக்கின

கழல் சூழ் கால்

-

வீரக்கழலணிந்த ஒரு பாதமானது

பொன் உலகம் ஏழும் கடந்து

-

மேலுலகங்களை யெல்லாம் அதிக்கிரமித்து

உம்பர் மேல் சிலும்ப

-

மேலே மேலே ப்ரஸரிக்கும் படியாக (ஒற்றைக்காலை உயரத்தூக்கி)

மன்னு குலம் வரையும் மாருதமும் தாரகையும் தன்னினுடைனே சுழல

-

ஸ்திரமாக நிற்கிற குல பர்வதங்களும் காற்றும் நக்ஷத்திரங்களும தன்னோடு கூடவே சுழன்றுவர

சுழன்று ஆடும்

-

தான் சுழன்று நர்த்தனஞ் செய்பவனும்

கொல் நவிலும் மூ இலை வேல்

-

கொலைத்தொழில் புரிகின்ற மூன்று இலைகளை யுடைதான சூலத்தை யுடையவனும்

கூத்தன்

-

கூத்தாடியென்று ப்ரஸித்தனுமான

அன்னவன் தன்

-

அப்படிப்பட்ட சிவபிரானுடைய

பொன் அகலம் சென்று அணைந்திலளே

-

அழகிய மார்பைக்கிட்டி ஆலங்கனம் செய்து கொள்வில்லையா?

பன்னி உரைக்குங் கால்

-

(இப்படிப்பட்ட உதாஹரணங்களை இன்னும்) விஸ்தரித்துச் சொல்லுகிற பக்ஷத்தில்

பாரதம் ஆம்

-

ஒரு மஹாபாரத மாய்தலைக்கட்டும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாண்மட மச்சங்களைத் தவிர்த்து அதிப்ரவ்ருத்திபண்ணி நாயகனைப் புணர்ந்தவர்கள் ஒருவரிருவரல்லர், பல்லாயிரம் பேர்களுண்டு, இங்கே சில மாதர்களை எடுத்துக் காட்டினேன். இன்னும் எத்தனை பேர்களை நான் காட்டுவது. இவ்வளவு உதாஹரணங்கள் போராதா? ஆயினும் இன்னும் ஒரு பெரியாள் மடலூர்ந்தபடியைச் சொல்லி முடிக்கிறேன். கேளுங்கள் – என்று பரமசிவனைப் பெறுதற்குப் பார்வதி தவம் புரிந்தபடியைப் பேசுகிறாள்.

தக்ஷப்ரஜாபதி யென்பவர்க்குப் பெண்ணாகப் பிறந்து, ஸதீ என்ற பெயரோடிருந்தாள் பார்வதி. அந்த தக்ஷப்ரஜாபதயானவர் ஒரு கால் ஓரிடத்தில் வேள்விக்குச் செல்ல அப்போது அங்கேயிருந்த தேவர்களும் மஹர்ஷிகளுமெல்லாரும் சடக்கென எழுந்து கௌரவிக்க, பிரமனும் சிவனும் எழுந்திராமல் இருந்தபடியே யிருக்க தக்ஷன் பிரமனை லோக்குருவென்று நமஸ்கரித்துவிட்டுத் தனது கௌரவம் தோற்றச் சிவன் எழுந்திருந்து வணங்கவில்லை யென்று சீற்றங்கொண்டு “இந்த ருத்ரன் எனக்கு மாப்பிள்ளையானபோதே எனக்கு சிஷ்யனாயிருந்து வைத்து என்னை கண்டவாறே ஆசாரியனைக் கண்டாற்போல் கௌரவித்து வழிபடவேண்டியிருக்க இப்படி எழுந்திராதே இருக்கிறான்ன்றோ, இவனில்மிக்க கொடும்பாவி உலகிலுண்டோ? இப்படிப்பட்ட மூடனுக்கு அநியாயமாய் அருமந்த பெண்ணைக் கொடுத்து கெட்டேனே“ என்று பலவாறாக நிந்தித்து ‘தேயஜ்ஞத்தில் இப்பாவிக்கு ஹவிர்ப்பாகம் கிடைக்காமற் போகக்கடவது‘ என்று சாபமும் – கூறிவிட்டு மஹா கோபத்துடனே எழுந்து தன்னிருப்பிடம் போய்ச்சேர்ந்து, பிறகு நேடுநாளைக்கப்பால் அந்த தக்ஷன் ப்ருஹஷ்பதிஸவமென்றொரு யாகம் பண்ணத் தொடங்கின செய்தியை மகளாகிய ஸதி (பார்வதி) கேள்விப்பட்டுத் தந்தையின் வேள்வி வைபவங்களை நாமுங்கண்டுவருவோம் என்று ஆவல்கொண்டு புறப்பட சிவபிரான் பழைய பகையை நினைத்து அங்கே நீ போகக்கூடாது என்று தடுத்தும் குதூஹலாதிசயத்தாலே அவள் விரைந்து புறப்பட்டுத் தந்தையினது இல்லம்செல்ல அங்கே இவளைக்கண்டு தந்தை நல்வரவு கூறுதல் யோக்க்ஷேமம் வினவுதல் ஒன்றுஞ்செய்யாமல் பாங்முகமா யிருக்க மிருப்பையும் ருத்ரபாகமில்லாமல் வேள்வி நடைபெறுவதையுங்கண்டு வருத்தமும் சீற்றமுங்கொண்டு ‘இந்த மஹாபாபியான தக்ஷனிடத்தில் நின்று முண்டான இந்த என் சரீரம் இனி முடிநது போவதே நன்று என்று அறுதியிட்டுத் தனது யோகபலத்தாலே அக்நியை உண்டாக்கி அதுதன்னிலே சரீரத்தைவிட்டொழிந்தாள். பிறகு மலையரசனாகிய ஹிமவானுக்குப் பெண்ணாய்ப் பிறந்து (பர்வத புத்ரீ என்னுங் காரணத்தால்) பார்வதி யென்று யெர் பெற்று அப்பிறப்பிலும் அந்தப் பரமசிவனையே கணவனாகப் பெறவேணுமென்று ஆசைகொண்டு கடுந்தவம் புரிந்து அத்தவத்தின் பயனாக அங்ஙனமே மனோரதம் நிறைவேறி மகிழ்ந்தாளென்பது இங்கே அறியத்தக்கது.

மற்றொரு  மையத்திலும் பார்வதி தவம் புரிந்ததுண்டு முன்னொரு காலத்திற் கைலாஸ மலையிலே சிவபிரானும் தானும் ஏகாஸநத்தில் நெருக்கமாக வீற்றிருந்தபொழுது ப்ருங்கி யென்னும் மாமுனி சிவனை மாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்யவிரும்பி ஒரு வண்டு வடிவமெடுத்து அந்த ஆஸனத்தை இடையிலே துளைத்துக்கொண்டு அதன் வழியாய் நுழைந்து சென்று அம்பிகையை விட்டுச் சிவனைமாத்திரம் பிரதக்ஷிணஞ் செய்ய, அது கண்ட பார்வதீதேவி தன் பதியைநோக்கி முனிவன் என்னைப் பிரதக்ஷிணஞ் செய்யாமைக்கு காரணம் என்ன? என்று கேட்க அதற்குச் சிவன் இம்மை மறுமைகளில் இஷ்டஸித்தி பெற விரும்புமவர்கள் உன்னை வழிபடுவார்கள், முத்திபெற விரும்புமவர்கள் என்னை வழிபடுவார்கள் இது நூல் துணிபு என்று சொல்ல அதுகேட்ட பார்வதி இறைவன் வடிவத்தப் பிரிந்து தனியே யிருந்த்தனாலன்றோ எனக்கு இவ்விழிவு நேர்ந்தது என்று வருந்தி தான் சிவ்பிரானைவிட்டுப் பிரியாதிருக்குமாறு கருதி புண்ணியக்ஷேத்திரமான கேதாரத்திற்சென்று தவம் புரிந்து வரம் பெற்று அப்பிரானது வடிவத்திலே வாமபாகத்தைத் தனது இடமாக அடைந்து அவ்வடிவிலேயே தான் ஒற்றுமைப்பட்டு நின்றனள் என்று சைவபுராணங்களிற் சொல்லிப்போரும் கதையுமுண்டு. முன்னே கூறிய தவமே இங்கு விவக்ஷிதம்.

மலையரையன் – அரையன் என்றது அரசனென்றபடி. பர்வதராஜன் என்கை. (உமை யென்னும்) பார்வதிக்கு உமா என்றும் ஒரு வடமொழிப் பெயருண்டு. அவள் தவம் புரிந்த காலத்து ஆஹாரமே யில்லாமையாலே பொன்னுடம்பு வாடப்பெற்றாள், அந்தந்த இந்திரியங்களுக்கு வேண்டிய விஷயங்களில் அவை பட்டிமேய வொண்ணாதபடி. காவலிற் புலனை வைத்துத் தவம் புரிந்தபடியாலே அந்த இந்திரியங்கள் ‘எத்தனை நாளைக்கு நாம் இவள்பால் பட்டினி கிடப்பது என வருந்தி அகனறனவாம்.

ழை – கூந்தலுக்குப் பெயர் “முள்ளெயிறேய்ந்தில் கூழை முடிகொடா“ என்ற பெரிய திருமொழியுங் காண்க. தவநிலைக்கு தகுதியாகக் கூந்தலைச் சடையக்கின ளென்க. (அன்ன அருந்தவத்தினூடு போய்) அவள் அநுஷ்டித்த தபஸ்ஸு ஸாமாந்யமல்ல. கோரமான தவஞ் செய்தன்ன் என்கிறது. ஊடுபோய் என்றது அந்த்த் தவத்தை முற்றமுடிய நடத்தி என்றபடி. “அருந்தவத்தினூடு போய் அன்னவன்றன் பொன்னகலஞ் சென்றாங் கணந்திலளே“ என்று அந்வயிப்பது.

ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ என்று தொடங்கித்“ தன்னினுடனே சுழலச் சுழன்றாடும்“ என்னுமளவும் சிவபிரானது நடனத்தின் சிறப்பு வர்ணிக்கப்படுகிறது. அப்படி அற்புதமான நாட்டியஞ் செய்ய வல்ல சிவபிரானது ஸம் ச்லேக்ஷத்தைப் பெற்றாளன்றோ என்கிறது. சிவன் கூத்தாடும் வகைகள் பல பலவுள்ளன. திருவிளையாடற் புராணம் முதலிய நூல்களில் அவற்றைக் கண்டுகொள்க. இங்கே சொல்லப்படுகிற நாட்டியவகை – ஆயிரங் திசைகளில் வியாபிக்கச் செய்து ஒற்றைக்காலால் நின்றுகொண்டு மற்றொருகாலை மேலேதூக்கி, பம்பரம்போல் சுழற்றி ஆடினவகையாம். “தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களாயிரத்தாய், தாள் களாயிரத்தாய் பேர்களாயிராத்தாய்“ என்று எம்பெருமானைச் சொல்வதுபோல சைவபுராணங்களில் சிவனைப்பற்றியும் சொல்லியிந்தலால் “ஆயிரந்தோள் மன்னுகரதலங்கள் மட்டித்து“ எனப்பட்டது. தெய்வத் தன்மைக்குரிய சக்தி விசேஷத்தினால், வேண்டியபோது வேண்டியபடி வடிவுகொள்ள வல்லமைப் யுள்ளமைபற்றி ஒருநர்த்தன விசேஷத்தில் இங்ஙனே ஆயிரந்தோள் மன்னுகதலங்கள் கொண்டு ஆடினனாகவுங்கொள்க. ஒருகால் தன்னுடைய நடனத்தைக்கண்டு அதற்குத் தகுதியாகத் தனது இரண்டு கைகளால் மத்தளங் கொட்டின பாணாஸுரனுக்கு உவந்து ஆயிரங்கைகள் உண்டாம்படி வரமளித்தன்னாகச் சொல்லப்பட்ட சிவபிரானுக்கு இஃது அருமையன்றென்ப. மட்டித்து –மட்டித்தலாவது மண்டலாகாரமாக வியாபிக்கச் செய்தல்.

மாதிரங்கள் மின்னி எரிவீச –“ஒருருவம் பொன்னுருவ மொன்று செந்தீ ஒன்றுமாகடலுருவம்“ என்றபடி சிவனது உருவம் செந்தீ யுருவமாதலால் அன்னவன் தனது காலை மேலே தூக்கிச் சுழன்று ஆடும்போது திசைகளெல்லாம் நெருப்புப்பற்றி யெரிவன்னபோல் காணப்படுமென்க. சூழ்கழற்கால் கழல் சூழ்ந்த கால் வீரத்தண்டை அணிந்த கால் என்றபடி. பொன்னுலக மேழுங்கடந்து என்றது –கூத்தாடும்போது சிவனுடைய கால் நெடுந்தூரம் வளர்ந்து சென்றமையைச் சொன்னவாறு. உம்பர் மேல் மேன் மேலும்

(மன்னு குலவரையும் இத்யாதி) நாமெல்லாம் தட்டாமாலையோடும்போது அருகிலுள்ள செடிகொடி முதலியனவும் கூடவே சுழல்வதாகக் காணப்படுமன்றோ. சிவபிரான் பெரியவுருக்கொண்டு சூழன்றாடும்போது பெருப்பெருத்த பாதார்த்தங்களெல்லாம் உடன் சுழல்வனபோற் காணப்படுமாற்றிக. இப்படியாக கூத்தாடின சூலபாணியும் பஸ்மதாரியுமான சிவனது மார்போடே அணையப்பெறுதற்காகப் பார்வதி தவம்புரிந்தபடியை மஹாபாரத்தில் பரக்கக் காண்மின் என்று தலைக்கட்டிற்றாயிற்று.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain