nalaeram_logo.jpg

………     ……………  ……………அம்மறைதான்

மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,

நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும்        (2716)

பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது, ஓர்

தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,

என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி,

துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன்   (2717)

மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,

இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,

தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,

இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,

என்னவும் கேட்டறிவ தில்லை -                      (2718)

பதவுரை

அம்மறை தான்

-

அந்த வேதங்களானவை

மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று

-

நிலை நின்ற தருமம் அர்தம் காமம் மோக்ஷம் என்று

உலகில் நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே

-

இவ்வுலகில் நல்வழியாலே சிறப்பித்துக் கூறப்படுகின்ற நான்கு புருஷார்த்தங்கள் நிறைந்திருக்கப்பெற்றவையாம்.

நான்கினிலும்

-

அந்த நால்வகைப் புருஷார்த்தங்களிலும்

பின்னையது

-

கடைசியில் சொல்லப்பட்ட மோக்ஷமானது

பின்னை பெயர்தரும் என்பது

-

இந்த சரீரம் தொலைந்த பிறகு உண்டாகுமென்று (சாஸ்த்ரங்களில்) சொல்லப்படுகிறது,

ஓர் தொல் நெறியை

-

விலக்ஷணமாயும் அநாதியாயு முள்ள அந்தப் பரமபதத்தை (அல்லது, அரச்சிராதி மார்கத்தை)

வேண்டுவார் தாம்

-

அடைய விரும்புமவர்கள்

வீழ் கனியும் ஊழி இலையும் என்னும் இவையே நுகர்ந்து

-

தானே பழுத்து விழுந்த பழங்களையும் சருகான இலைகளையுமே தின்று

உடலம் வருந்தி

-

காயக்லேசங்கள் பட்டு

துன்னும் இலைக்குரம்பை துஞ்சியும்

-

நெருக்கமான பர்ணசாலை களிற்கிடந்தும்

வெம் சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும்

-

ஸூர்யனோடு பொருந்திய வெய்யிலே பக்ஷித்தும்

வண் தடத்தினுள் கிடந்தும்

-

அழகிய தடாகங்களிலே மூழ்கிக் கிடந்தும்

இன்னது ஓர் தன்மையர் ஆய்

-

ஆக இப்படிப்பட்ட ஸ்வபாவங்களையுடையராய்க் கொண்டு

ஈங்கு உடலம் விட்டு எழுந்து

-

இவ்வுலகில் சரீரத்தைவிட்டொழிந்து மேலே கிளம்பி

தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்

-

திரும்பி வருதலில்லாத வொருஸ்தானத்திலே போய்சேர்ந்தார்கள் என்று சொல்வதைத் தவிர,

இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் என்னவும் கேட்டு அறிவது இல்லை

-

இன்ன தினத்தில் இன்ன மநுஷ்யன் இந்த மோக்ஷத்தில் போய்ச் சேர்ந்தான் என்றுவிளங்கச் சொல்லக் கேட்டதே யில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அந்த வேதங்களில், தர்மம் அர்த்தம் காமம் மேக்ஷம் என நான்கு புருஷர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த நான்கு புருஷார்த்தங்கள் தவிர இன்னுஞ் சில விஷயங்களும் வேதங்களிற் கூறப்பட்டிருக்குமோவென்று ஒருவர்க்கும் சங்கைபிறக்க வழியில்லாதபடி இங்கு ஆழ்வார் அருளிச்செய்கிறபடி பாருங்கள். “வேதங்களில் நான்கு புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டன“ என்று வ்யதிகரண ப்ரயோகம் பண்ணாமல் “அம்மறை அறம்பொருளின்பம் வீடென்று நான்கன்றே“ என்று ஸமாநாதிகரண ப்ரயோகம் பண்ணியிருப்பதனால், வேதம் முழுமையும் இந்த நான்கு புருஷார்த்த ஸ்வரூபம், வேறில்லை என்றதாகிறது.

நன்னெறி மேம்பட்டன் –‘மேம்பட்டன நன்னெறி‘ என்று மாற்றி இயைத்து ச்லாக்யமான புருஷார்த்தங்கள் என்று உரைக்கவுமாம். இங்கே ஒன்று சங்கிக்கலாம். சிறிய திருமடலில் “இப்பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே“ என்று மூன்றே புருஷார்த்தங்கள் உள்ளனவாகச் சொல்லி, “சிக்கனமற்றாரானுமுண்டென்பாரென்பது தானதுவும் ஓராமையன்றே உலகத்தார் சொல்லுஞ சொல்“ என்று நான்காவது புருஷார்த்தமுண்டென்பவர்கள் அவிவேகிகளென்று தூஷித்தும் அருளிச்செய்த ஆழ்தார் தாமே இங்கு நான்கன்றே என்று நான்கு புருஷார்த்தங்களுண்டாகச் சொல்வது ஸ்வோக்திவிருத்தமாமே என்று –இதுவிருத்தமன்று சிறிய திருமடலில் தமது ஹித்தாந்தத்தை முதல் முதலிலே நிஷ்கர்ஷித்துக் கூறிவிட்டுப் பிறகு மோக்ஷ புருஷார்த்த முண்டென்பாருடைய பக்ஷத்தை அநுவதித்து மறுத்தார், இதில், புருஷார்த்தங்கள் நான்கு என்கிற பக்ஷத்தை முதலில் அநுவதித்து விட்டு, அடுத்த படியாகவே மோக்ஷபுருஷார்த்த முண்டென்கிற பக்ஷத்தைக் கண்டித்து மூன்றே புருஷார்த்தங்களென்கிற ஸ்வஸித்தாந்தத்தையே தலைக்கட்டுகிறார். ஆகையால் இரண்டு திருமடல்களிலும் இவருடைய கொள்கை ஒன்றேயாம். பரமவைதிகரான ஆழ்வார் ‘நான்கு புருஷார்த்தங்கள் வேத்ப்ரதிபாத்யங்கள்‘ என்று முதலில் சொல்லிவிட்டு உடனே, நான்காவது புருஷார்த்தமே இல்லையென்றும் மூன்றே யென்றும் சொல்வது அபசாரமன்றோ? அவைதிகராக மாட்டாரோ? என்று கேட்பார்க்குச் சிறிய திருமடலுரையிலே விரிவாக ஸமாதாநம் சொன்னோம். கண்டுகொள்க. மோக்ஷத்தை இல்லை செய்தல் இவருடைய திருவுள்ளமன்று, வேறொரு தேஹத்தைப் பூண்டு வேறொரு காலத்தில் வேறொரு ஸ்தானத்தில் எம்பெருமானை அநுபவித்திற்காட்டிலும் இவ்வுலுகத்திலேயே இப்போதே இவ்வுடம்போடே எம்பெருமானை அணைந்து மகிழ்வதே இவர்க்குப் பரமோத்தேச்யமாகத் தோன்றினமையால் “கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல், இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யுந் தவந்தானென்?“ என்ற ஆண்டாளைப்போலே மோக்ஷத்தில் வெறுப்பைக் காட்டுகின்றாரே யன்றி, உண்மையில் மோக்ஷ மென்பதொன்றை அஸத்யம் என்று ஸாதிப்பது இவர்க்கு விவக்ஷிதமன்றென்க.

அந்த மோக்ஷத்தைப் பெறுகிறவர்கள் இந்த சரீரம் கழிந்த பிறகே பெறுகிறார்களென்பது “மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்“ இத்யாதிகளால் ஸித்தமாதலால் அதனையருளிச்செய்கிறார் நான்கினிலும் என்று தொடங்கி மோக்ஷத்தைப் பெறுவதற்காக இங்கேயிருந்து படுகிறபாடுகளைப் பேசுகிறார். ஓர தொன்னெறியை வேண்டுவார் என்று தொடங்கி “ஊன்வாடவுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற்பியாப் புலனைந்தும் நொந்து, தான்வாட வாடத் தவஞ்செய்ய வேண்டா“ என்றும் “காயோடு நீடு கனியுண்டு வீசுகடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று தவஞ்செய்ய வேண்டா“ என்றும் இவ்வாழ்வாத்தாமே அருளிச் செய்த்து காண்க. “பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர்வேண்டா“ என்றார் பேயாழ்வாரும். “காயிலைதின்றுங் கானிலுறைந்துங்கதிதேடித் தீயிடை நின்றும் பூவலம் வந்துந் திரிவீர்காள், தாயிலுமன்பன் பூமகள் நண்பன் தடநாகப்பாயன் முகுந்தன் கோயிலரங்கம்பணிவீரே“ என்று உபதேசித்தார் பிள்ளைப் பெருமாளும் கலம்பகத்தில். போல்லா வொழுக்கும் அழுக்குடம்புமற்று எம்பெருமானைப் பெற்றுநுபவிக்க நினைப்பவர்கள், மனம் பொறிவழிபோகாது நிற்றற்பொருட்டு நீர்பருகியும் காற்று நுகர்ந்தும் காய் கனி கிழங்கு சருகு வருங்கங்களை உண்டும் விரதங்களால் உண்டி சுருக்கலும், கோடை காலத்தில் வெயில் நிலையிலும் பஞ்சாக் நிமத்தியிலும் நிற்றலும், மாரிக்காலத்தும் பனிக்காலத்தும் நீர்நிலையில் பாசியேற நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் வருந்துன்பங்களைப் பொறுத்து இவ்வாறு சரீரத்தை யொறுத்து நல்வீடு செல்வர்களென்பது அறியத்தக்கது. எம்பெருமானை அர்ச்சாவதாரத்தில் நாம் எளிதாக அநுபவித்து ஆநந்திக்கலாமான பின்பு இப்படிப்பட்ட வீணான காயக்லேசங்கள் படவேண்டா என்று உபதேசிப்பர்கள் ஆழ்வாராகிகள்.

தொன்னெறி என்று பரமபதத்தைச் சொல்லவுமாம், பரமபதத்திற்குச் செல்லும்வழியாகிய அர்ச்சிராதி மார்க்கத்தைச் சொல்லவுமாம். நெறி –கோவிலும் மார்க்கமும். ஊழிலை –பழகிப்போன இலை –சருகு இலைக்குரம்பை – இலைகளாற் சமைக்கப்பட்ட குடிசை – பர்ணசாலை.

ஈங்குடலம் வீட்டெழுந்து – ************    அருமையாகச் சொல்லப்பட்ட இந்த மநுஷ்யதேஹத்தைப் பெற்றுவைத்து இது கொண்டே எம்பெருமானை இஷ்டப்படி அநுபவித்து ஆநந்திக்க விரும்பாமல் அநியாயமாக இவ்வுடலைப் பாழாக்க நினைக்கிறார்களே பாவிகள்! என்று வருந்துகின்றார் போலும்.

அருமந்த தேஹ த்தைத்தான் இழக்கிறார்களே, அங்குச் சென்றாகிலும் ஏதாவது நல்ல பேற்றைப்பெறுகிறார்களோ, அது ஒன்றுமில்லை, ‘அவன் மோக்ஷம் போனான், இவன் மோக்ஷம் போனான்‘ என்று வாய் நோவச் சொல்வதைக் கேட்கிறோமேயன்றி ‘இன்னதினத்தில் இன்ன மநுஷ்யன் இன்னஸுகத்தைப் பெற்றான்‘ என்று சொல்லக் கேட்டதே யில்லை.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain