nalaeram_logo.jpg

மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,

சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,

மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,

மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,

துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,              (2711)

என்னும் விதானத்தின் கீழால், - இருசுடரை

மன்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்

பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை                     (2712)

தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,

மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,

என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்        (2713)

தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,

என்னும் இவையே முலையா வடிவமைந்த,

அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்             (2714)

தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்

உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட

பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,

மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்

முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்

முன்னம் படைத்தனன் நான்மறைகள்........ .....       (2715)

பதவுரை

மன்னிய

-

வாழ்ந்திடுக (மங்களாஸாசநம்)

தான்

-

எம்பெருமான்றான்

பல்பொறி சேர் ஆயிரம் வாய் வாள் அரவின்

-

பல புள்ளிகளையும் ஆயிரம் வாய்களையும் ஒளியையுமுடையனான திருவனந்தாழ்வானுடைய

சென்னி மணி குடுமி

-

படங்களில் விளங்குகின்ற மாணிக்கங்களின் நுனிகளில் நின்றும் பரவுகின்ற

தெய்வம் சுடர் நடுவுள் மன்னி

-

திவ்யமான தேஜஸ் ஸமூ ஹத்தினிடையே பொருந்தி

அ நாகத்து அணை (மேல்)

-

அந்தத் திருவனந்தாழ்வானாகிற சயநத்தின்மேலே

துன்னிய தாரகையின் பேர் ஒளிசேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால்

-

நெருங்கிய நக்ஷத்ரங்கள் நன்கு விளங்கப்பெற்ற ஆகாசமாகிற மேற்கட்டியின் கீழே

மின்னு மணி மகர குண்டலங்களவில் வீச

-

ரத்நங்கள் விளங்குகின்ற மகர குண்டலங்கள் பள பள வென்று ஜ்வலிக்கப் பெற்றும்

இரு சுடரை மன்னும் விளக்கு ஆக ஏற்றி

-

திருவாழி திருச்சங்குகளாகிற இரண்டு தேஜஸ்ஸுகளை என்று மணையாத திரு விளக்காகப் பெற்றும்

மறி கடலும் முனம் நாள் நிலம் மங்கை தன்னை அளவிட்ட தாமரைப்போல் மன்னிய சே அடியை பன்னு திரை கவிர வீச

-

அலையெறிகிற ஸமுத்ர ராஜன், முன்னொருகால் பூமிப்பிராட்டியை அளந்த திருவடித் தாமரையை நோக்கி பரம்பின அலைகளாகிற சாமரங்களை வீசப்பெற்றும்,

1. வான் இயங்கு தாரகை மீன் என்னும் மலர் பிணையல் எய்ந்த

-

ஆகாசத்திலே யுள்ள நக்ஷத்ரங்களாகிற புஷ்ப புஞ்சங்களை அணிந்துள்ளவளாய்,

2. மழை கூந்தல்

-

மேகங்களாகிற கூந்தலை யுடையளாய்

3. தென்னை உயர் பொருப்பும் தெய்வம் வடமலையும் என்னும் இவையே முலை ஆ

-

திருமாலிருஞ் சோலை மலையையும் திருவேங்கட மலையையும் முலையாகவுடையளாய்,

4. வடிவு அமைந்த

-

பொருத்தமான ரூபத்தை யுடையளாய்

5. அன்னம் நடைய

-

அன்னத்தின் நடைபோன்ற நடையை யுடையளாய்

6. அணங்குதான்

-

தெய்வப்பெண்ணாகிய பூமிப்பிராட்டி

7. தன்னுடைய அம்கைகளால் அடி இணையை தடவ

-

தனது அழகிய கைகளாலே திருவடிகளைப் பிடிக்கப்பெற்றும், (ஆகிய இத்தனை விபவங்களுடனே)

ஓர் மா மலை போல் கிடந்து

-

விலக்ஷணமான வொருகருமலை சாய்ந்தாற் போலே பள்ளிக்கொண்டு

ஓர் உன்னிய்யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை

-

விலக்ஷணமாய் ஜகத்ரக்ஷணத்தைச் சிந்திக்கிறயோக நித்திரையை மேற்கொண்ட பின்பு

தன் நாபி வலயத்து

-

தனது நாபீ மண்டலத்தில்

பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து

-

சிறந்த ஒளி பொருந்தியதும் என்று மழியாததுமான தாமரைப்பூவைப் புஷ்பிக்கச் செய்து

அ மலர் மேல்

-

அந்தத் தாமரைப் பூவிலே

முன்னம் திசை முகதனை தான் படைக்க

-

முதல் முதலாக நான் முகக்கடவுளை ஸ்ருஷ்டிக்க

மற்றவனும்

-

அந்தப் பிரமன்

முன்னம் நால் மறைகள் படைத்தணன்

-

முதலில் நான்கு வேதங்களைவெளிப்படுத்தினான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரபந்தாரம்பத்தில் மன்னிய என்றவிது – மங்களாசாஸநமாய்த் தனியே நிற்பதொரு வியங்கோள் வினைமுற்று, வாழிய என்னுமாபோலே மன்னிய – வாழ்கவென்றபடி நாடுவாழ்க, எம்பெருமான் வாழ்க இத்திருமல் வாழ்க. வடநூலார் ஸ்ரீரஸ்து என்னும் ஸ்வஸ்தி என்னும் முகப்பில் எழுதுவதொக்கும் இது.

‘காமபுருஷார்த்தத்தையே நான் முக்கியமாகக் கைப்பற்றினேன்‘ என்று சொல்ல விரும்பிய ஆழ்வார், அதற்கு உறுப்பாகப் ‘புருஷார்த்தங்கள் நான்கு‘ என்றும், ‘அப்புருஷார்த்தங்களை வெளியிட்டது வேதம்‘ என்றும், ‘அந்தவேதம் நான்முகனால் வெளியிடப்பட்டது‘ என்றும், ‘அந்த நான்முகன் எம்பெருமானது உந்திக் கமலத்தில் தோன்றினவன்‘ என்றும், ‘அக்கமலம் எம்பெருமான் ஜகத்ரக்ஷணார்த்தமாக உறங்குவான்போல் யோகு செய்தருளினகாலத்து மலர்ந்தது‘ என்றும் அருளிச்செய்யவேண்டி அந்த யோக நித்ராத்தமான சயனத்தின் வைபவத்தை வருணிக்கிறார் – பல்பொறிசேர் என்று தொடங்கிதான் கிடந்து என்னுமளவால்.

உலகில் சாமான்யரான அரசர்கள் பள்ளி கொண்டால், கீழே மெத்தென்ற பஞ்சசயன்மும், மேலே முத்துப்பந்தலும், பக்கங்களில் சிறந்த திருவிளக்குகளும், கால்மாட்டில் சாமரம்வீசும் பரிஜநங்களும் கால்பிடிக்கும் கிங்கரர்களும் – ஆக இத்தனை விபவங்கள் அமையக் காண்கிறோம், ஸாக்ஷாத் பரமபுருஷன் பள்ளி கொண்டருளினால் அக்காலத்திய விபவங்கள் வருணிக்க முடியுமோ! ஆயினும் சுருக்கமாக ஒருவாறு வருணிக்கிறார் ஆழ்வார்.

(பல்பொறிசேர் இத்யாதி) திருமேனி நிறையப் புள்ளிகளை யுடையவனும் ஆயிரம் பைந்தலைகளை யுடையனும் மஹாதேஜஸ்வியுமான திருவனந்தாழ்வானுடைய படங்களிலேயுள்ள மாணிக்கமணிகளின் சிகைகளிலிருந்து கிளம்பி எங்கும் பரவியிராநின்ற ஆச்சரியமான தேஜோராசிகளால் முட்டாக்கிடப்பெற்ற அந்த சேஷசயனத்திலே, திருமகரக்குழைகள் பளபளவென்று ஜவலிக்க, கரிய மால்வரை போலே துயில்கின்றதாம் நாராயண பரஞ்ஜோதி. முத்துக்க ளென்னத்தக்க நக்ஷத்ரங்கள் நிறைந்த ஆகாசமண்டலம் மேற்கட்டியாக அமைந்தது, நிகரின்றி ஜ்வலிக்கின்ற திருவாழி திருச்சங்குகள் திருவிளக்குகளாயின அன்றிவ்வுலகமளந்த திருவடியின் விடாய் தீரப் பாற்கடல் தனது அலைகளையே சாமரமாக வீசிற்று, பூமிப்பிராட்டி, திருவடி வருடாநின்றான். ஆக இப்படிப்பட்ட விபவத்துடனே சேஷசயனத்திலு அமர்ந்து * உறங்குவான்போல் யோகு செய்யும் எம்பெருமான் தனது திருநாபியில் திவ்யமான தொரு தாமரைப்பூவைத் தோன்றுவித்து “உய்ய வுலகுபடைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை“ என்கிறபடியே அக்கொப்பூழ்ச் செந்தாமரைமேல் நான்முகனைத் தோற்றுவிக்க, அந்தப் பிரமன் நான்கு வேதங்களையும் வெளியிட்டனன் – என்றாராயிற்று.

ஜகத்ஸ்ருஷ்டிக்காக எம்பெருமான் பாற்படலில் அரவணைமேற் பள்ளிக்கொண்டு யோகநித்திரை செய்து தனது திருநாபியில் ஒரு கமலத்தையும் அதில் பிரமனையும் தோற்றுவித்து அப்பிரமனுக்கு நான்கு வேதங்களையும் ஓதுவிக்க அவ்வேதங்கள் காட்டியபடியெ அப்பிரமன் முன்னிருந்த வண்ணமாகவே உலகங்களைப் படைக்கிறானென்பத நூற்கொள்கை.

சென்னி – தலை, படமென்க, “சென்னி மணிக்குடுமித் தெய்வக் சுடர்நடுவுள்“ என்கிற விதனையே ஆளவந்தார்“ ****************  ஸ்தோத்ர ரத்நத்தில் மொழி பெயர்த்தா ரென்னலாம். “மன்னிய நாகத்து“ என்றவிடத்து, மன்னி என்று வினையெச்சமாகப் பிரித்து, அந்நாகத்து என்பது அநாகத்து எனத் தொக்கியிருப்பதாகக் கொண்டு உரைக்கப்பட்டது. இதுவே நன்கு பொருந்தும். மன்னிய என்றே பிரித்துப் பெயரெச்சமாகக் கொண்டு நாகத்தணைக்கு விசேஷணமாக்கி உரைத்தலுமான், மன்னிய –படுக்கும்போது விரித்து மற்றபோது சுருட்டிவைக்க வேண்டாதே எப்போதும் படுக்கையாகவே பொருந்தியிருக்கிற நாகமென்கை. இவ்வகைப் பொருளில், அசுரச் சுட்டு வருவித்துக்கொள்ள வேண்டியது அவசியமாம்.

மாமலை போல் – மா என்று கருமைக்கும் பெருமைக்கும் வாசகம். “நாகத்தணைமேல் ஓர் மாமலை போல் தான் கிடந்து“ என்று அந்வயம். மகர குண்டலம், தாரகா, ஆகாசம், லிதாநம் – வடசொற்கள் (லில்வீச) லில் –ஒளி. இருசுடரை என்று ஸூர்ய சந்திரர்களை சொல்லவுமாம்.

இந்த வர்ணனையில் ஒரு சங்கை உதிக்கக்கூடும் அதாவது – இங்கு எம்பெருமானுடைய திருக்கண் வளர்த்தியைச் சொல்லுகிற விது ஜகத் ஸ்ருஷ்டிக்கு முன்னேயுள்ள படியைச் சொல்வதாகையாலே அக்காலத்தில், “ஒன்றுந்தேவு முலகு முயிரும் மற்றும் யாதுமில்லாவன்று“ என்றும் “பன்மைப்படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங்காலத்து“ என்றும் ஆழ்வாரருளிச் செய்தபடி ஸூர்ய சந்த்ர நக்ஷத்ராதிகள் ஒன்றும் இல்லையாதலால் இல்லாத அவற்றையிட்டு வருணிக்கிற விது எங்ஙனே பொருந்தும்? என்று, நம் ஸித்தாந்தத்தில் முன்பு இல்லாத வஸ்துவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டி யென்பதில்லை, ஸூக்ஷ்ம ரூபமாயிருந்த இருக்குமவையே யாதலால் அவற்றை ஆழ்வார் தமது சமத்கார சக்தியால் பெருக்கடித்து வருணிக்கிறாரென்க. வேறுவகையான ஸமாதாநங்களுமுண்டு.

கவரி – கவரியெனத் திரிந்தது. “நிலமங்கை தன்னை முனநாளன விட்ட தாமரை போல் மன்னிய சேவடியை (நோக்கி) மறிகடலும் பன்னுதிரைக் கவரிலீச“ என்று அந்வயம். சேவடிக்கு “நிலமங்கை தன்னை அளவிட்ட“ என்று அடைமொழி கொடுத்ததனால் உலகளந்த ச்ரமந்தீர ஸமுத்ர ராஜன் திரைக்கவரிகளை வீசின்னென்பதாகக் கொள்க.

“வானியங்கு தாரகைமீன்“ என்று தொடங்கி “அன்ன நடையவணங்கே“ என்னுமளவும் –எம்பெருமானுடைய திருவடிகளைப் பிடிக்கின்ற பூமிப்பிராட்டியை வருணிப்பது. அவள் ஸ்த்ரீகளுக்கு உரிய லக்ஷணங்களோடு பொருந்தி யிருக்கின்றாளென்கிறது. ஆகாசமானது பூமிக்கு உச்சியின் ஸ்தாநத்திலே நிற்கிறப்படியால் அவ்வாகசத்திலுள்ள நக்ஷத்ரங்களைச் சிரமீதணிந்த புஷ்பங்களாகக் கூறினர். தாரகா என்னும் வடசொல்லும் மீன் என்னும் தமிழ்ச் சொல்லும் நக்ஷத்ரங்களுக்குப் பெயராயிருக்க அவ்விரண்டு பதங்களையும் இங்குச் சேர்த்துப் பிரயோகித்தது எங்ஙனே யெனில், அச்விநீ, பரணீ கிருத்திகை என்று வ்யவஹரிக்கப்படுகிற நக்ஷத்ரங்களும், இந்த இருபத்தேழு நக்ஷத்ரங்கள் தவிர மற்றும் பல ஆயிரக்கணக்கான நக்ஷத்ரங்களுமாக இரண்டு வகுப்பு ஆகாசத்தில் உள்ளமையால் அதனைத் திருவுள்ளம்பற்றித் தாரகை மீன் என இரண்டு சொற்களைச் சேர்த்து அருளிச் செய்தாரென்க. “நக்ஷத்ர தாரா கணங்கள்“ என்று ஆரியர்கள் கூறுவதும் இக்கருத்து கொண்டேயாம்.

தென்ன்னுயர் பொருப்பும் –“தென்ன்ன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே“ என்ற பெரியாழ்வார் திருமொழியை நோக்குக. அகஸ்திய முனிவர் வாஸஞ செய்கிற மலயமலையிலே சென்று அம்முனிவர் முன்னிலையில் ‘தருமமே நடத்தக்கடவேன்‘ என்று மலய மலையை யெழுதிக் கொடியெடுத்து அதனால் மலயத்வஜனென்று பேற்பெற்ற பாண்டியராஜனொருவன் தன் தவவலிமையால் நாள்தோறுஞ் டிசன்று கங்காநதியில் நீராடி வருகையில் ஒரு நாள் தேர்மேலேறிப் புறப்பட்டுக் கங்கையில் நீராடுதற்குச் செல்லும் போது வழியில் திருமாலிருஞ் சோலைமலை ஸமீபித்த வளவில் தேர் அப்பால் வடக்கே போகமாட்டாமல் நின்றுவிட, அப்பாண்டியன் இங்கே ஒரு தீர்த்தவிசேஷமும் தேவதா ஸந்தியும் இருக்கவேணும், என்றெண்ணி அத்தேரினின்று இறங்கி ஆராய்ந்து பார்த்தவளவில், அவ்விடத்திலே அப்பாண்டியனுக்கு அழகர் ப்ரத்யக்ஷமாக ஸேவை ஸாதித்து ‘முன்பு பிரமன் நம்மைக் காலைக்கழுவுகிற காலத்திலே நமது காற்சிலம்பினின்று தோன்றிச் சிலம்பாறு என்று பேர்பெற்ற இவ்வாற்றிலே (நூபுர கங்கையிலே) ‘நாநஞ் செய்‘ என்ன, அவ்வரசன் அன்று முதல் கங்கா ஸ்நாநஞ் செய்வதை விட்டிட்டு அங்கே ஸநானஞ் செய்துகொண்டு அழகர்க்குப் பலவகையடிமைகளுஞ் செய்து வரலாயினான் என்கிற இதிஹாஸமும் அறியத்தக்கது. அப்பாண்டிய ராஜன் தென் திசைக்குப் பிரதாநனானமைபற்றித் தென்னன் எனப்பட்டான் அவனுடையதான உயர்ந்த மலை என்று திருமாலிருஞ் சோலையைச் சொல்லுகிறது. தேன் நன் என்று பிரித்து, தென் திசையிலே உள்ளதும் விலக்ஷணமுமான என்று உரைத்தலுமாம. பொருப்பு – மலை. தெய்வ வடமலை தெய்வத்தன்மை பொருந்திய (திவ்யமான) திருவேங்கடலை ஆகிய இத்திருமலைகளிரண்டும் பூமிப்பிராட்டிக்குத் திருமுலைகளாக அருளிச் செய்யப்பட்டது. “காரார்வரைக் கொங்கை“ என்றாரே சிறிய திருமடலிலும். சிறந்த மேரு முதலிய மலைகளை நிலமங்கைக்குக் கொங்கையாகச் சொல்லலாமயிருக்க அவற்றை விட்டுத் தென் வடமலைகளைச் சொன்னது – நாயகன் விரும்பிப் படுகாடு கிடக்குமிடமே முலையாகத் தகுதலால்.

உன்னிய யோகத்துறக்கம் –உன்னுதல் – ஆராய்தல். ‘எவ்விதமாக ஸ்ருஷ்டிக்கலாம்‘ என்று ஆராய்ந்துகொண்டு தூங்குபவன் போல யோகுபுணர்வானிறே எம்பெருமான் நாபிவலயம் –வடசொல் பூத்து –பூக்க எச்சத்திரிபு.

“மற்றவனும் முன்னம் படைத்தன்ன் நான்மறைகள்“ என்றால் பிரமனே வேதங்களை ஸ்ருஷ்டித்தவனென்று பொருளாகிறதே, இது சேருமோ? வேதம் ஸ்வயம் வ்யக்தமென்றும் நித்யமென்றும் எம்பெருமான் கூட வேதகர்த்தா அல்லனென்றும் ஸித்தாந்தமாயிருக்க, இப்படி சொல்லலாமோ? என்னில், **************   ஸ்ம்ருதியில் கூறியுள்ளபடி சொல்லியிருக்கிற வித்தால் வேதங்களின் நித்யத்வமும் அபௌருஷேயத்வமும் குறையுறாது. பிரமனது வாக்கில் நின்றும் ஆலிர்ப்பவித்த மாத்திரமே கொண்ட படைத்தன்ன் என்றது. ருக்கு, யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்பன நான்மறைகளாம்.

ஆக இவ்வளவும் – இவ்வாழ்வார் அருளிச்செய்ய உத்தேசித்த புருஷார்த்தங்களுக்கு மூலப்ரமாணமான வேதங்களின் வரலாற்றைச் சொன்னாராயிற்று. அரவணைமேற் பள்ளிக்கொண்டு யோகத் துயில்புரிந்த எம்பெருமான் தனது நாபிக்கமலத்திலே பிரமனைப் படைத்து அவனுக்கு நான்கு வேதங்களையும் சந்தை சொல்லி வைத்தானென்றதாயிற்று.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain