nalaeram_logo.jpg
(3982)

எதிரெதிரி இமையவர் இருப்பிடம் வகுத்தனர்

கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்

அதிரிகுரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த

மதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே

பதவுரை

மது விர் துழாய் முடி,

-

தேன் பெருகுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய

மாதவன்

-

திருமாலினது

தமர்க்கு

-

அடியாரான பாகவதர்களுக்கு தேவர்கள்

எதிரி எதிரி

-

இவர்கள் போகிற வழிக்கு முன்னே

இருப்பு இடம் வகுத்தனர்

-

தங்குமிடங்களைச் சமைத்தார்கள்

கதிரவர்

-

த்வாதசாதித்யர்களும்

அவர்  அவர்

-

மற்றுமுள்ளவர்களும் ஆதி வாஹிக கணங்களெல்லாம்

கை நிரை காட்டினர்

-

பார்த்தருளீர் பார்த்தருளீர்!! என்று கைகாட்டிக் கொண்டேசென்றார்கள்

அதிரி குரல்

-

அதிருகிற முழக்கத்தையுடைய

முரசங்கள்

-

போரிகளானவை

அலைகடல் முழக்கு ஒத்த

-

அலையெறிகின்ற ஸமுத்ரகாரிஜனை போன்றிருந்தனர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

-மேலுலகங்களில் தேவர்கள், இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்குத் தோப்புகள் சமைத்தும் வாத்யகோஷம் முதலானவற்றைப் பண்ணியும் கொண்டாடும்படியைக் கூறுகிறார். இவர்கள் இங்கே தங்கிப் போவார்களோ! இங்கே தங்கிப் போவார்களோ!’ என்னும் நசையாலே பார்த்தவிடமெங்கும் தேவர்கள் தோப்புச் சமைத்தார்கள். போகிறவர்கள் அங்கே தங்கிப் போகாமற் போனாலும் தங்களுடைய ஸ்வரூப ஸித்திக்காகக் கிஞ்சித்காரிக்கவேணுமே. “ராஜாக்கள் ஒருகால் கண்டு சிரித்து ‘அழகிது’ என்று போகைக்காக மானாவி சமைப்பாரைப்போலே’ என்பது ஈடு. (மானாவி யென்றது மஹாநவமி யென்றபடி. மஹா நவமி யுத்ஸவக் காட்சியை மானாவியென்று இலக்கணையாற் சொல்லுகிறபடி.

கதிரவரவரவர் கைந்நிரைகாட்டினர்-ஆதித்யர்கள் நிலைவிளக்குப்போலே ‘இங்ஙனே யெழுந்தருள்க,  இங்ஙனே யெழுந்தருள்க, பார்த்தருள்க, பார்த்தருள்க, என்று கைகளை நிரையே காட்டினார்கள். அர்ச்சிராதிகளான ஆதிவாஹிக கணங்களைச் சொன்னதாகவுமாம். (அதிரி குரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த) அதிரல நின்றுள்ள தொனியையுடைய முராஜவாத்யங்கள் அலையெறிகின்ற கடல்போலே முழங்கின. இப்படிப்பட்ட ஸத்காரங்கள் நடைபெறுவது யாவர்க்கு? என்னில்; மதுவிர்துழாய் முடி மாதவன் தமர்க்கே-எம்பெருமானுடைய திவ்யாலங்காரங்களிலேயீடுபட்டவர்களும், பிராட்டி முன்னாகப் பணிந்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு.

இவ்விடத்து நம்;பிள்ளையீட்டிலே அற்புதமானவொரு ஸ்ரீஸீக்தியுள்ளது; “இங்கே வைஷ்ணவர்களென்பதுவே ஹேதுவாகப் பங்குபெறாதே திரியுண்ட வைஷ்ணவர்களை அங்குள்ளார் எதிரிகொண்டு இருப்பிடங்கள் கொடுக்கப்படுகிறபடி” என்று. அதாவது-திருநாட்டிலே இப்படிப்பட்ட ஸத்காரம்; பெறும் ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்த நாட்டில் வர்த்திக்கிற காலத்திலே இங்குள்ளவர்களால் ஒரு ஸத்காரமும் பெறாததோடு திரஸ்காரமும் பெறுகிறார்களே யென்று திருவுள்ளம் நொந்து அருளிச்செய்தபடி. இதற்காக ஒரு இதிஹாஸமுமருளிச் செய்கிறார்-“மிளகாழ்வான் படைவீட்டிலே அகரத்துக்குச் செல்ல ‘நீ ஆந்தராளிகன், உனக்குப்பங்கில்லைக் என்ன, ‘நன்மையல் குறையுண்டாய்ச் சொல்லுகிறிகோளோ? அன்றே’ என்ன, ‘நன்மையில் குறையில்லை, இதிறேஹேது’ என்ன ‘நம் நெஞ்சில் இல்லையாகிலும் இவர்கள் வைஷ்ணவர்களென்று கைவிடப் பெற்றோமிறே’ என்று புடவையை முடிந்து எறட்டுக் கூத்தாடினான்” என்று. (இதன் கருத்தாவது) மிளகாழ்வானென்கிற ஸ்ரீ வைஷ்ணவர், அரசன் வித்வானாகையாலே தமக்கும் அவை கிடைக்கூடுமென்றெண்ணி அவ்வரசனிடம் சென்றார்; அரசன் வீரசைவனாகையாலே இவர்க்கு ஒன்றும் தரமாட்டேனென்றான்; ‘ஏன் எனக்குத் தரமாட்டேனென்கிறாய்? எனக்குத் தர்க்கம் தெரியாதா? வியாகரணம் தெரியாதா? மீமாம்ஸை தெரியாதா? எந்த சாஸ்த்ரத்தில் வேணுமானாலும் பாரிiகூஷ செய்துகொள்ளாலாமே’ என்றார். அதற்கு அரசன் ‘ஓய்! உமக்குப் பாண்டித்யத்தில் குறையொன்றும் நினைத்திலேன்; நீர் மஹாவித்வானென்பதறிவேன்; ஆனால் நீர் வைஷ்ணவராகை யாலே தரமாட்டேன்’ என்றான். அதுகேட்டு மிளகாழ்வான் ‘உண்மையில் நமக்கு வைஷ்ணத்வம் இல்லையாகிலும் இவனுடைய எண்ணத்தினாலாவது நமக்கு வைஷ்ணத்வ இல்லையாகிலும் இவனுடைய எண்ணத்தனாலாவது நமக்கு வைஷ்ணத்;வம் முண்டாகப் பெற்றதே! என்று ஆனந்தக் கூத்தடித்து க்ராமபூமிகள் பெற்றதற்கு மேற்பட மகிழ்ந்தாராம். இதனால் ப்ராக்ருதர்கள் வைஷ்ணவனென்று திரஸ்காரிப்பதும் நன்றேயென்று காட்டினபடி. இராவணன் த்வாம் து திக் குலபாம்ஸநம் என்று சொல்லி கர்ஹித்ததையே விபீஷணாழ்வான் சிறப்பாகக் கொண்டானிறே.

English Translation

All the way the celestials made resting points, The Moon and the Sun lighted the path, thundering drums rolled like the ocean, in honour of the nectar-Tualsi-Lord Madava's devotee

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain