nalaeram_logo.jpg
(3977)

உற்றே னுகந்து பணிசெய் துனபாதம்

பெற்றேன் ஈதேயின் னம்வேண் டுவதெந்தாய்

கற்றார் மறைவாணர் கள்வாழ் திருப்பேராற்கு

அற்றார் அடியார் தமக்கல்லல் நில்லாவே

பதவுரை

எத்தாய்

-

எம்பெருமானே!

உற்றேன்

-

(உனது திருவடிகளைக்) கிட்டப்பெற்றேன்;

உகந்து பணி செய்து

-

திருவாய்மொழி பாடுகையாகிற கைங்காரியத்தை ப்ரீதியோடே செய்து

உன் பாதம் பெற்றேன்

-

உன்திருவடிகளை அணுகினவானனேன்;

ஈதே இன்னம் வேண்டுவது

-

இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்;

கற்றார்

-

குரு முகமாகக் கற்றவர்களாயும்

மறைவாணர்கள்

-

வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்

வாழ்

-

வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும்

திருப்பொராற்கு அற்றார்

-

பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான்

அடியார் தமக்கு

-

பாகவதர்களுக்கு

அல்லல் நில்லா

-

அநுபவ விரோதிகள் நில்லாது போம்,

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

கீழ்பாட்டில் எம்பெருமானை மடிபித்துக் கேள்விகேட்டார் ஆழ்வார்; அதற்குத் தான் சொல்லலாவதொரு ஹேது காணாமையாலே கவிழ்தலை யிட்டு வாய் மூடியிருந்து ‘உமக்கு மேல்செய்ய வேண்டுவது என்? சொல்லிக்காணீர்’ என்ன; அதற்குச் சொல்லுகிறது இப்பாட்டு. திருவாய்மொழி பாடுகையாகிற இக்கைங்காரியத்தைப் பரமானந்தமாகச் செய்யப்பெற்ற வெனக்கு வேறு என்ன அபேiகூஷயுளது? என்கிறார். இப்பாட்டில் முன்னடிகள் முன்னிலையாயும் பின்னடிகள படர்க்கையாயுமுள்ளது. முன்னடிகள் எம்பெருமானை நேராக நோக்கிச் சொன்னது; அதற்கு எம்பெருமான் தலைதுலுக்கி உகப்புக் காட்டியருள, அனைவர்க்கும் தெரியச் சொல்லுகிறது பின்னடி.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் சாஸ்த்திரார்த்தமே வடிவெடுத்தவை காணீர்;- “அவன் தானே செய்தானென்எமன்று அவருக்கு வைஷம்யமும் நைர்க்ருண்யமும் ஸர்வ முக்தியும ப்ரஸங்கியாதோவென்னில், இத்தலையதில் ருசியையபே கூஷித்துச் செய்கையாலே அவருக்கு அவை தட்டாது. அது ஹேதுவென்று ஈச்வரனுக்கு உத்தரமானாலோ வென்னில்; அது உபாயமாக மாட்டாது, பலவியாப்தமான திறே உபாயமாவது. இந்த ருசி அதிதார்ஸ்வரூபமாகையாலே தத்வதிசேஷணமாமித்தனை. உபாயம் ஸஹகாரிநிரபேகூஷமாகையிலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது. இது உபாயமாகாமையாலே இவர்க்கு இல்லையென்னலாம்; ஸர்வமுக்தி ப்ரஸங்க பாரிஹாரர்த்தமாக அவருக்கு உண்டென்னவுமாம்” என்று. சாஸ்த்ரார்த்த நற்றெளிவை நன்கு பிறப்பிக்க வல்ல இந்த ஸ்ரீஸூக்திகளைக் கண்டுவைத்தும் சிலர்இத்திலையிலுள்ள ஸ்வல்பத்தை உபாயமென்று கூறி முஷ்டி பிடிப்பது வியப்பே.

உற்றேன்- நிமஜ்ஜதோந்த பவார்ணவாந்தச் சிராய மே கூலமிவாஸி லப்த: என்ற ஆளவந்தர் ஸ்ரீஸூக்தியை இதற்குச் சந்தையாக அநுஸந்திப்பது. உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் -இங்குப் பணி செய்தலாகச் சொல்லுகிறது திருவாய்மொழி பாடுகையை. உகந்து பணிசெய்கை ஸாதனமாய், அதற்கு ஸாத்யம் வேறொன்று இருப்பதாக ஆழ்வார் திருவுள்ளமன்று; உகந்து பணி செய்கையும் பாதம் பெறுகையும் ஒன்றேயாகக் கொள்க. ஈதே யின்னம் வேண்டுவது என்பதனால் இது விளக்கப்பட்டதென்க.

இனி பின்னடிகள் பொதுவான லோகோக்தியாகச் சொல்லுகிறபடி. (கற்றார் மறை யித்யாதி.) குருகுலவாஸம் பண்ணிப் போது போக்கினவர்களாய் வேதத்துக்கு வ்யாஸபதம் செலுத்தவல்லவர்களான மஹான்கள் அநுபவித்து வர்த்திக்குமிடமாம் திருப்பேர்நகர்; அவ்விடத்து உறையும் பெருமாளுக்கு அற்றுத்தீர்ந்த வடியார் களுக்கு துக்க ப்ரஸக்தி யுண்டோ வென்றாராயிற்று “திருப்பேராற்கு” என்றதை முன்னிலையில் வந்த படர்க்கையாகக்கொண்டு இதுவும் எம்பெருமானை நோக்கியே சொல்லுகிறதென்று கொள்ளலும் நன்றே. திருப்பேராற்கு-திருப்போரிலே வர்த்திக் கிறவுனக்கு என்றபடியாம். அற்றாரடியார் தமக்கு - அற்றவாகளான அடியவாரானாக்கு என்று இருவகையாகவும் பொருள் கொள்வர்.

English Translation

My Lord I have rendered joyful service and attained your feet.  This is all ask for.  No more shall miseries besiege the devotees of the Lord in Tirupper where many Yedic scholars live

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain