(3954)

திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்

திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு

புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்

இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே.

 

பதவுரை

திகழ்கின்ற திருமார்வில்

-

விளங்குகின்ற திருமார்பிலே

புள்  ஊர்தி

 

பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு

திருமங்கை தன் னோடும்

-

பெரிய பிராட்டியாரோடுங்கூட

போர் அரக்கர் குலம் கெடுத்தான்

-

போர்லேமுயன்ற ராக்ஷஸர்களின் கூட்டங்களைத் தொலைத்த அப்பெருமான்

திகழ்கின்ற திருமாலார்

-

விளங்குகின்ற லஷிமீநாதன்

சேர்வு இடம்

-

நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே

நண் வாட்டாறு

-

குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம்

இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள்

 

வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன்

நின்ற புகழ்

-

நிலைநின்ற புகழையுடைய

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார்.  தனக்கு திவ்யமஹிக்ஷியோ ஸர்வலேகேச்வாரியான பெரிய பிராட்டியர்; தான் உறையுமிடமோ திருநாட்டிற் காட்டிலும் வீறுபெற்ற திருவாட்டாறு: தனக்கு திவ்யவாஹனமும் அடியாருடைய விரோதிகளைத் தொலைக்கும் பாரிகரமும் பெரிய திருவடி; இப்படிப்பட்ட பெருமைகளைப் பெற்றுவைத்து, என்னுடைய தாழ்வுகளைப்பார்த்து என்னையிகழாதே ஒரு நொடிப்பொழுது என்னைப் பிரிந்தால் தாரிக்கமாட்டாதானாய்க் கொண்டு என்னெஞ்சினுள்ளே புகுந்திருந்தருளினான்! இது என்ன வியாமோஹம்! என்கிறார்.

திகழ்கின்ற திருமார்வில் - திருமார்புக்கு ஓர் ஆபரணமிட்டு அதனால் விளக்கம் பெறுவிக்கவேணுமோ?  வெறும் புறத்திலேயே ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோ விளங்கா நிற்பது; அதற்மேலே பெரிய பிராட்டியாரும் சேர்ந்ததனாலுண்டான வழகு பேச்சுக்கு நிலமாமோ?  உலகில் பலரையும் ஸ்ரீமான்களென்று சொல்லுவதுண்டு; அது உபசார வழக்கேயன்றி வேறில்லை; திருமங்கை தன்னோடும் திகழ் கையாலே உள்ளபடி ஸ்ரீமானாயிருப்பவன் எம்பெருமானொருவனே.  அப்படிப்பட்டவன் திருவாட்டாற்றில் வாஸம் பெற்றது பெருமைக்குமேல் பெருமையாயிற்று.  *வேதாத்மா விஹகேச்வர:* என்னப்பட்ட  பெரிய திருவடியை வாஹனமாகக் கொள்ளப் பெற்றது இன்னமும் பெருமையாயிற்று இப்படி பெருமைக்கெல்லாம் எல்லையான பெருமை பெற்றவன் இகழ்வின்றி யென்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே - *மாறிமாறிப்; பல பிறப்பும் பிறந்த நித்ய ஸம்ஸாரி யிவனென்று தண்மைபாராதே ஒரு ஷணமும் விட்டுப் பிரியாதே யிருக்கிற இவ்விருப்புக்கு அடியான வியாமோஹமென்கொல்! என்கிறார்.

 

English Translation

The jewel-Lord reclines in cool Tiruvattaru. On his radiant chest he bears the lotus-dame Lakshmi.  Riding the worthy Garuda, he destroyed many Asuras. He resides in my heart forever, of his own accord

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain