nalaeram_logo.jpg
(3953)

மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்

கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்

மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு

எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே?

பதவுரை

மெய்நின்று கமழ்

-

திருமேனியிலே நிலைநின்று கமழா நின்ற

புனல் மை நின்ற வரை போலும் திரு உருவன்

-

புனலையும் அஞ்சனத்தையும் நிலை நிற்கும் மலையையு மொத்திருக்கின்ற திருவுருவத்தை யுடையனான

துலபம்

-

திருத்துழாயினுடைய

வாட்டாற்றாற்கு

-

திருவாட்டாற்றெம்பெருமாளுக்கு

விரை ஏறு திரு முடியன்

-

பரிமளம் மிகப் பெற்ற திருமுடியை யுடையவனாய்,

கருதும் இடம் பொருது

-

திருவுள்ளம் நினைத்த விடத்தே சென்று போரை நடத்தி

எந்நன்றி செய் தேன் ஆ     நான்

-

என்ன நன்மை செய்தேனாகக் கொண்டு

கை நின்ற

-

உடனே திருக்கையிலே வந்து சேருகிற

சக்கரத்தன்

-

திருவாழிப்படையை யுடையனாய்

என் நெஞ்சில் திகழ்வது

-

அவன் எனது நெஞ்சில் விளங்குவது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****-தாம்பெற்ற பேற்றின் கனத்தை யாராய்ந்தார்; அந்தோ! இப்படிப் பட்ட விஷயீகாரம் என் திறத்தேயுண்டாகுமாறு நான் என்ன ஸுக்ருதம் செய்தேன்! ஒன்றும் செய்திலேன்! அப்படியிருக்கவும் இது என்ன விலக்ஷண விஷயீகாரம்! என்று நெஞ்சு குழைகிறார்.  மெய்ந்நின்றுகமழ் துளபவிரையேறு திருமுடியன் - இங்கு மெய் என்று ஆழ்வாருடைய திருமேனியைச் சொல்லிற்றாகவுமாம், எம்பெருமானுடைய திருமேனியைச் சொல்லிற்றாகவுமாம்.  என்னுடை வுடம்பிலே வியாபித்துக் கமழும்படியான திருத்துழாய் மாலையத் தன் திருமுடியிலே யுடையவன் என்றாவது, தன்னுடைய திருமேனியிலே நின்று கமழா நின்றுள்ள திருத்துழாயில் பரிமளமானது கொழித்து எறடா நின்றுள்ள திருமுடியையுடையவன் என்றாவது பொருள் கொள்ளலாம்.  இங்கு ஈட்டு ஸ்ரீஸுக்தி - “கடலில் நீர் ஸஹ்யத்திலேறக் கொழித்தாற்போலே காணும் திருமேனியில் திருத்துழாயின் பரிமளமானது மெய்யெல்லாங்கொண்டு தலைக்குமேலே போனபடி.”

கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் - எம்பெருமாளுக்கு ஆச்ர்த விரோதி நிரஸநம் செய்யவேண்டி வருமே; அதற்காக அங்கங்கே தான் புறப்பட்டெழுந்தருளவேணு மென்கிற நிர்ப்பந்தமில்லை; இன்னவிடத்திலே இன்னகாரியமாகவேணுமென்று திருவுள்ளத்தில் நினைப்பிட்ட மாத்திரத்திலே திருவாழியாழ்வான் சென்று ஒரு நொடிப்பொழுதில் காரியந் தலைகட்டி அடுத்த க்ஷணத்திலே மீண்டு வந்து திருக்கையிலே நிற்பானாம்.  ஆழ்வான் அதிமாநு ஸ்தவத்தில் “அக்ஷேஷு ஸக்தமதிநா ச நிராதரேண வாராணஸீ ஹரபுரி பவதா விதக்தா” என்றருளிச்செய்த சுலோகம் இங்கு நினைக்கத்தக்கது.

புனல் மைந்நின்றவரை போலுந் திருவுருவன் - புனல் போலவும் மைபோலவும் நின்றவரை போலவு மிருக்கின்ற வடிவையுடையவன், ஆக மூன்றடிகளாலும் தெரிவிக்கப்பட்டதாவது என்னென்னில்; தன்னுடைய திருத்துழாய் நறுமணம் என்னளவிலே வீசும்படி செய்தும் கையுந் திருவாழியுமான அழகைக் காட்டியும், பச்சைமாமலைபோல் மேனியை முற்றூட்டாக வநுபவிக்கக் கொடுத்தும் இப்படியன்றோ என்னிடத்தில் விலக்ஷணமான விஷயீகாரம் காட்டினதென்றதாயிற்று.  இதற்குத் தம் பக்கலிலே ஒரு கைம்முதலில்லாமையை ஈற்றடியினால் பேசுகிறார் எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திழ்வதுவேயென்று. “செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய் தந்தாயென்ற அத்வேஷாபிமுக்க்யங்களும் ஸத்கர்மத்தலல்ல.” (108) என்ற ஆசாரிய ஹ்ருதய சூர்ணை இங்கு அநுஸந்தேயம். (எந்நன்றி செய்தேனா) நன்மையென்று போரிடலாவதொரு தீமைதான் நான் செய்தோனோ? அதுவுமில்லையே; என்னுடைய  எந்த காரியத்தை அவன் நன்மையாகத் திருவுள்ளம் பற்றினானோ தெரியவில்லையே யென்று தடுமாறுகின்றார்.  இங்கே யீடு; - “பெரியவுடையாரைப்போலே தடையோடே முடிந்தேனோ?  திருவடியைப்போலே *த்ருஷ்டாஸுதா* என்று வந்தேனோ? அன்றியே தன்னுடைய ஆஜ்ஞாநுவர்த்தனம் பண்ணினேனாம்படி விஹித கர்மங்களை யநுஷ்டித்தேனோ?  என்ன நன்மைசெய்தேனாக என்னெஞ்சிலே புகுந்து பெறாப்பேறு பெற்றாப்போலே விளங்கா நின்றான்!”

English Translation

The Lord of radiant crown and fragrant Tulasi garland, Lord discus gaining victory wherever he wills, is the Lord of mountain-hue radiance in Tiruvattanu.  I cannot understand what I did to deserve his grace

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain