nalaeram_logo.jpg
(3949)

என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து

வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்

மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்

நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே.

பதவுரை

நல் நெஞ்சே!

-

நல்ல மனமே!

படைதொட்டான்

-

ஆயுதமெடுத்த பஷபாதியாய்

வல் நெஞ்சத்து இரணியனை

-

வலிய நெஞ்சையுடையனான இரணியாசுரனது

நம்பெருமான்

-

நமக்கு ஸ்வாமியானவன்

மார்பு இடந்த

-

மார்பை இருபிளவாக்கி முடித்தவனாய்

என் நெஞ்சத்துள் இருந்து

-

என்னெஞ்சினுள்ளே பொருத்தியிருந்து

இங்கு

-

இவ்விருப்பிலே

வாட்டாற்றான்

-

திருவாட்டாற்றிலே ஸன்னிதி பண்ணியிருப்பவனாய்

இரு தமிழ் நூல் இவை

-

பெரிய தமிழ் நூலாகிய இத்திருவாய்மொழியை

மன் அஞ்ச

-

அரசர்களெல்லாரும் அஞ்சும்படி மொழிந்து     தானே யருளிச்செய்து

(அவ்வளவோடு நில்லாமல்)

பாரதத்து

-

பாரதப் போரிலே

பாண்டவர்க்கு ஆய்

-

தன்னடியர்களான பாண்டவர்களுக்காக

நமக்கு அருள் தான் செய்வானே

-

நமக்கு மேன்மேலு முதவிகளைச் செய்வானாயிராநின்றான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- கீழ் முதற்பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும் “விதிவகையே” என்று, எம்பெருமான் நியாமகனாயிருக்கு மிருப்புத்தவிர்ந்து நியாமகனா  யிருக்கும்படியை யருளிச்செய்தாரே, ஸர்வேச்வரனிடத்தில் இது ஸம்பவிக்குமோ வென்று சிலர்சங்கிப்பர்களென்று கருதி அந்த சங்கைக்குப் பாரிஹாரமாக இப்பாட்டு அருளிச் செய்கிறபடி.  இப்படிட்டில் இரண்டாமடியும் மூன்றாமடியும் உயிர்நிலையாயிருக்கும்.  எம்பெருமான் தான் அடியார்கட்கு விதேயனென்னுமிடத்தை ப்ரஹ்லாதாழ்வான் திறத்திலும் பாண்டவர்கள் திறத்திலும் காட்டினானாயிற்று.  முன்னே நின்ற தூணைக்காட்டி. “நீ சொல்லுகிறபகவான் இங்குளனோ?”  என்று இரணியன் கேட்க.  எங்குமுளனென்று ப்ரஹ்லாதன் சொல்ல, அவருடைய சொல்லை மெய்ப்பிக்கைக் காகவே அப்போதே அத்தூணில் நின்றும் தொன்றினபடியாலே இந்த அபதானத்தாலே பக்த விதேயத்வம் வெளியாயிற்று.  அர்ஜுநன் *ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத* என்று சொல்ல, அப்படியே உபய ஸேனைகளினிடைய ஸேனையைக் கொண்டுபோய் நிறுத்துவது முதலயி பலகாரியங்களினால் அவ்வவதாரத்தில் ஆச்ர்தவிதேயத்வத்தை வெளியிட்டுக் கொண்டானாயிற்று.

என்னெஞ்சத்துள்ளிருந்து - நெடுங்காலம் ஸம்ஸாரத்திலே விஷயாந்தரங்களிலே மண்டிக் கிழந்தமையாகிற தண்மைதோற்ற என்னேஞ்சு என்கிறார் ஆழ்வார்; ஆழ்வாருடைய மமகாரத்திற்கு இலக்கான வஸ்துவே நமக்கு உத்தேச்ய மென்றிருக்கும் எம்பெருமான் இவர் என்னெஞ்சு என்றதுவே ஹெதுவாக மேல்விழுந்து உள்ளே புகுந்தான்; மறுபடியும் வெளியே வந்தால் மீண்டும் உள்ளேபுக வழி  கிடைப்பது அர்தாகுமோ வென்கிற அச்சத்தினால் அங்கேயே ஸ்தாவரப்ரதிஷ்டையாயிருந்தான்; அப்படியிருந்து செய்வதென்? என்னில், இங்கு இருந்தமிழ் நூலினை மொழிந்து இப்படிப்பட்ட திருவாய்மொழியை யருளிச்செய்தானாயிற்று, “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்கிறார் ஒருகால்; மற்றொருகால் இத்தமிழ் நூலை அவன்மொழிந்தானாகச் சொல்லுகிறார்; உண்மைதானிருந்தபடி யென்னென்னில்; இரண்டும் உண்மையே.  வடமொழி வேதத்தைபற்றிச் சொல்லுமிடத்து *அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா* என்றது.  ‘அநாதிநிதநா’ என்று சொல்லி வைத்து ஸ்வயம்புவா உத்ஸ்ருஷ்டா வாக் என்றதில்லையோ? அதுபோலவே இங்குங் கொள்க.

இப்படி திருவாய்மொழியைப் பேசி வெளியிடுவித்துக்கொண்ட குணம் பரத்வமன்று ஸௌலம்யமே யென்று காட்டிக்கொண்டு மேல் அருளிச்செய்கிறார் வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்த - இங்கு இரணியன் மார்விடந்ததைச் சொல்லுவதில் நோக்கில்லை; சிறுக்குனுக்கு உதவினபடியைச் சொல்லுவதே விவஷிதம். சிறுக்குன் நினைத்தபடி செய்தவன் நான் சொன்னபடி செய்யானோ என்கைக்காக இது சொல்லிற்று.  மன் அஞ்ச - *மலைபுரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய என்றபடி.  பாண்டவர்க்காய்ப் படை தொட்டது - ஆயுதமெடேனென்று சொல்லிவைத்து ஆயுதமெடுத்தது.  பெரியாழ்வார் திருமொழியில் *மன்னர் மறுக மைத்துனர்மார்க்கொரு தோரின்மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை* என்று ஒரு கதை யருளிச்செய்திருப்பதுண்டு; அதையும் இங்கு நம்பிள்ளை யெடுத்துக்காட்டியருளினர்.  அர்ஜுனனுடைய தேர்க்குதிரைகள் இளைத்தபோது, கடினமானவிடங்களிலும் நீர் நரம்பு அறியுமவனாகையாலே வாருணாஸ்த்ரத்தைவிட்டு அங்கே நீரை யுண்டாக்கிக் குதிரைகளை விட்டு நீரூட்டிப் புரட்டி யெழுப்பிக் கொண்டுபோனானென்பது கதை.  இதைக் கண்ட எதிரரசர்கள் ‘இவனுடைய ஆச்ர்த பஷபாத மிப்படியிருக்கையாலே நாம் இவர்களை வெல்லுகை கூடுமோ!’ என்று குடல்மறுகினராகையாலே இங்கு மன்னஞ்ச என்றது.

English Translation

The Lord in Tiruvattaru tore Hiranya's wide chest with his nails; He battled for the Pandavas in the terrible Bharata war.  He resides in my heart, gracing me with great Tamil songs. Out graceful Lord is indeed good to us.  O Good heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain