nalaeram_logo.jpg
(3948)

நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி

மண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று

விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே

எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே

பதவுரை

என் நெஞ்சே

-

என்னுடைய அனுபவத்திற்கு வாய்த்தநெஞ்சே!

வளம் மிக்க வாட்டாற்றான் வந்து

-

திருக்கல்யாண குணம் ருத்தி பொருந்திய திருவாட்டாற்றெம்பெருமான் தானே வந்து

பல நாமங்கள் சொல்லி

-

பல திருநாமங்களையுஞ் சொல்லி

இன்று விதிவகையே விண் உலகம்  தருவான் ஆய்

-

இப்போது நமது நியமனப் படியே திருநாடு தருபவனாகி

நாராயணனை நண்ணினம்

-

பரமபந்துவான ஸ்ரீமத் நாராயணனைக் கிட்டப்பெற்றோம்

விரைகின்றான்

-

துர்தனாயிரா நின்றான்

இக்கருமங்கள்

-

இக்காரியங்கள்

மண் உலகில்   இந்நிலத்திலே

-

எண்ணின ஆறு ஆகா

-

நாம் எண்ணினபடிக்கு மேற்பட்டு விட்டதே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- இப்பாட்டும் நெஞ்சோடே கொண்டாடிச் சொல்லுகிறது.  நம்முடைய பேற்றுக்கு அவன் விரையும்படியாயிற்றே! இப்படியாகுமென்று நாம் கனவிலாவது எண்ணினதுண்டோ?  நாமெண்ணினதொன்று, நிகழ்ந்தது மற்றொன்றாயிற்றே! இதுவென்! என்று வியக்கிறார்.  ப்ரேமம் தூண்டச் சொல்லுவார்க்கு இன்ன திருநாமந்தான் சொல்லவேணுமென்கிற நியதியில்லாமையாலே “நாமங்கள் பலசொல்லி” என்கிறார்.  மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாறு - பரமபதத்திலே எம்பெருமானுடைய திருக்குணங்கள் பகலவிளக்குபோலே அப்ரகாசமாயும் அல்பப்ரகாசமாயுமிருக்கும், இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பதிங்கே யாகையாலே, வளம் மண்ணுலகில் மிக்கதாயிற்று.

ஆசாரிய ஹ்ருதயத்தில் (184) “மோஷதானத்தில் ப்ரணத் பாரதந்த்ரியம் வளம்மிக்க நதியிலே கரைபுரளும்’ என்றருளிச் செய்தார்.  இங்கு, திருவாட்டாற்றை வளம்மிக்க நதியென்று வ்யபதேசித்து இதில் ‘ப்ரணத பாரதந்த்ரியம் மிக மிக விளங்குமென்கையாலே இக்குணம் விளங்கப்பெறுகையே இத்தலத்திற்கு வளமிகுதியென்க.  கேட்பாரற்ற ஸ்வதந்திரனாய் ஸர்வநியந்தாவாயிருக்கிற ஸர்வேச்வரன்.  “நமது விதிவகையே” என்று ஆழ்வார் பலகாலுஞ் செல்லும்படி பரதந்திரனாய் நியாம்யனயிருந்தானென்றால் இதனில் மிக்க வளமில்லைபிறே.

“இன்று விண்ணுலகம் விதிவகையே தருவானாய் விரைகின்றான்” என்று மூன்றாமடியை அந்வயித்துக் கொள்வது (இன்று) நேற்றுவரை எதிரிபார்த்ததன்று இது;  இன்று இங்ஙனே விடியக்கண்டதித்தனை.  ‘விண்ணுலகில் வாழ்ச்சிதருவானாய்’ என்னாமல் “விண்ணுலகம் தருவானாய்’ என்றதை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர்;  “அங்கே ஒரு குடியிருப்பு மாத்ரமே கொடுத்து விடுவானாயிருக்கிறிலன்;  *வானவர்நாடு*  *ஆண்மின்கள் வானகம்*; என்கிற பொதுவையறுத்து நமக்கே தருவானாக த்வாரியா நின்றான்” என்று  (விரைகின்றான்) எம்பெருமான் தான் மூட்டை கட்டிக்கொண்டு முன்னேபோவது, பின்னே ஆழ்வார் புறப்பட்டு வராமை கண்டு திரும்பிவந்து ‘ஆழ்வீர்வாரும் வாரும்’ என்று சொல்லிப்பதறா நின்றானாம்.  இன்று இப்படிப் பதறுகிறவன்.  ‘தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ” என்று  கதறினபோது எங்கே யுறங்கினானென்று கேட்கவேண்டா? ஒரு காரியத்திற்காக வைத்திருந்தான்;;  அக்காரியம் முடியுமளவானவாறே விரைகின்றானென்பது யுக்தமேயன்றோ.  (காரியமாவது - * தொண்டர்க் கமுதுண்ணச் சொன் மாலைகள் சொல்லுவிக்கை.)

விரைகின்றானென்கைக்கு விஷயமுண்டோ?  ஸர்வசக்தனான தனக்கு ஆழ்வாரைக் கொண்டுபோக ருசியிருந்தாகில் கொண்டுபோகத் தடையென்ன?  தடுப்பாரொருவரு மில்லையே, ‘விரைகின்றான்’ என்கையாலே ஏதோ தடையிருப்பது போலவன்றோ தெரிகிறது; அது என்ன தடை?  என்று கேட்க நேரும்.  கேண்மின்; தன்னிஷ்டப்படி ஆழ்வாரைக் கொண்டுபோவதில் அவருக்கு ஈஷத்தும் ருசியில்லை; ‘இப்படிசெய், இப்படிசெய்’ என்று ஆழ்வார் விதிக்க, அதன்படி நடந்து கொண்டால்தான் தனக்கு ஸ்வரூபஸித்தியென்று அவன் நினைத்திருக்கையாலே அந்த நியமனம் பெறுவதற்காகவே அவன் விரைகின்றானென்றுணர்க அதற்காகவே முதற்பாட்டிற்போல  இப்பாட்டிலும் “விதிவகையே” என்றது.

விரைகின்றானென்றதில் ஒரு சிறந்த சாஸ்த்ரார்த்தம் தொனிக்கும்; உலகில், உடைமையைப் பெறுவது உயைவனுக்கே பணி.  உடைமை தவறிவிட்டால் அது கரையமாட்டாது,  அதைத் தேடிப்பெற்றுப் பூண்டுகளிக்கவேணுமென்று உடையவன்தான் விரைவது இயல்பு, அதுபோல, சேதநலாபம் ஈச்வரனுக்கே யாகையாலே அவன் விரைவதுதான் ப்ராப்தம் ஸபலமாகக்  கூடியதும் அதுதான் - என்பது சாஸ்த்ரார்த்தம்.

எண்ணினவாறாகா -  *பொய்ந்நின்ற ஞானமும் இந்நின்ற நீர்மை யினியாமுறாமை* என்று இவ்வளவேயன்றோ நாமெண்ணினது. அவன் இங்ஙனே விரைய வேணுமென்றாவது, விரையப்போகிறானென்றாவது எண்ணினோமோ?  (இக்கருமங்கள்) எம்பெருமான் விஷயமான காரியமெல்லாம் இப்படியே யென்றவாறு.  நாம் எண்ணினவளவுக்குப் பதின்மடங்காகக் காரியம் பலிப்பது பகவத்விஷயத்திலே யென்க.  லௌகிகாரிலே சிலரை நோக்கி “என்காரியத்திற்கு நீயே கடவை” என்கிறோம்; அவர்களும் அப்படியேயென்று தலை துலுக்குவதுண்டு;  ஆயிரம் எண்ணினத்தில்  நூற்றிலொருபங்கும் பலிக்கக் காணமாட்டோம்; சிறிது பலித்தாலும் அதற்கும் நம்முடைய முயற்சியே ஊடுருவச் செல்லும்.  இதற்கு மாறாயிருக்கும் பகவத்விஷயம்.

இப்படிப்பட்ட கனத்தபேறுபெறுகைக்கு அடி நீயேயென்று நெஞ்சைக் கொண்டாடிச் செல்லுகிறார் என்னெஞ்சே யென்று, என் என்பதைப் பிரித்து என்னே! யென்கிற பொருளிற்கொண்டு, வியந்து சொல்லுகிறவாறாகவும் கொள்ளலாம்.

English Translation

We have attained Narayana reciting his many names.  He has come on Earth today, In Tiruvattaru of great welath, and hastens to give us Vaikunta at our command. These are not happening by our leave, O Heart of mine!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain