nalaeram_logo.jpg
(3946)

அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு ஆழியான்

அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே

இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்

மருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே.

பதவுரை

அருள் பெறுவார் அடியார் தம்

-

எம்பெருமானருளைப் பெறுவதையே நிரூபமாகவுடைய பாகவதர்களுக்கு

நமது விதி வகையே

-

நாம் வித்ததபடியே யாம்;  (ஆன பின்பு)

இனி

-

இனியொருநாளும்

அடியனேற்கு

-

அடிமைப் பட்டிருக்கு மெனக்கு

இருள் தருமா ஞாலத்துள் பிறவி

-

இவ்விருள்தருமா ஞாலத்திற் பிறப்பை யான் வேண்டேன்     நான் இச்சிக்கமாட்டேன்

ஆழியான்

-

திருவாழியை யுடையனான எம்பெருமான்

மட நெஞ்சே

-

சபலமான மனமே!

அருள் தருவான் அமைகின்றான்

-

க்ருபை பண்ணுவானாகப் பொருந்தியிரா நின்றான்;

நீ மருள் ஒழி

-

இங்கேயிருந்து அநுபவிக்க வேணுமென்கிற வொரு மருளைத் தவிரப்பார்

அது

-

அப்படி க்ருபை பண்ணுவது

வாட்டாற்றான் அடி வணங்கு

-

திருவாட்டாற்றொம் பெருமானது திருவடிகளை வணங்கு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

****- நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான்  அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்;  அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய்  மூதுவரோடு கூடியநுவிக்கலாமா?  வருகிறாயா?  என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார்.  இப்பாட்டுக்கு இரண்டாமடியே உயிர்நிலையானது.  ஆழியான் அருள் தருவானமைகின்றான் - நெஞ்சே! கையுந் திருவாழியுமான ஸர்வேச்வரன் நம்மேல் முழுநோக்காக நோக்கிப் பரம க்ருபையைப் பண்ணுவானாகப் பார்க்கின்றான்  திருவாழியை ஒரு கண்ணாலே பாரிப்பது, என்னை யொருகண்ணாலே பாரிப்பதாகா நின்றான்;  திருவாழியை விட்டாலன்றோ ளும்மை நான் விடுவது என்னா நின்றான்;  திருவாழியாழ்வான் முதலான நித்யஸூரிகள் பக்கலிலே பண்ணும் ப்ரேமத்தை யெல்லாம் என்னொருவன் திறத்து ஒரு மடைசெய்து பண்ணாநின்றான்.  இங்ஙனே செய்வது ஆர்பக்கலிலேயென்ன, அருள் பெறுவாரடியார்தம் அடியனேற்கு என்கிறார்.  எம்பெருமான் இப்படிப்பட்ட பேரருளைத் தம்பக்கலிலே செய்வதற்குக் காரணமுங்காட்டிக்கொண்டு சொல்லுகிறபடி.  எம்பெருமான் பண்ணும் பேரருளுக்கு இலக்காயிருப்பார் சிலருண்டு;  அவர்கள் நமக்கு ஸ்வாமிகள்.  அவர்கள் பக்கலிலே அவன் பண்ணின அருள் அவர்களவிலே பரியவஸியாமல் நம்வரையிலும் வெள்ளங் கோத்ததுகாண் என்கிறார்.  நாம் அவன் தன்னையே பற்றியிருந்து அவனையே பார்த்திருந்தோமாகில் இப்பேரருள் பெறமுடியாதுகாண்;  அவனருளுக்கிலக்கான அடியர்களையே நாம் பற்றினோமானது பற்றியே இப்பேரருளுக்கு நாம் இலக்காக வேண்டிற்று என்கிறார்.  எட்டாம்பத்தில் *நெமாற்கடிமைப் பதிகம் பாடினதற்குப் பலன் இன்று பெற்றோம் என்கிறார் போலும்.

‘அவனோ அருள்தருவானாயிருந்தான் ;  நீரோ அருளைப்பெற அவகாசம் பார்த்திருந்தீர்; அது கிடைக்கிறபோது பெறவேண்டியது தானே, பெற்றுக்கொள்ளும்; இதற்கு தடையென்ன?  என்றது நெஞ்சு; அதற்குமேல் கூறுகிறாராழ்வார் அது நமது விதிவகையே என்று.  நெஞ்சே! அவன் வெறுமருளையே தருவானாயிருந்தால் அதை நான் பெற்றுவிடமாட்டோனோ?  அவன் அருள் தருவதோடு நிற்க வில்லையே?  *அஹம் ஸர்வம் காரிஷ்யாமி* என்று பார்த்துவந்த இளையபெருமாள் *க்ரியநாமிதி மாம் வத* என்று ஒரு நிர்ப்பந்தங்கொண்டாரன்றோ.  ஏவிக் கொள்ள வேணும் என்றாரோ;  அதுபோல இந்த ஸர்வேச்வரன் தானும் ‘ஆழ்வீர்என்னை ஏவி அடிமைகொள்வீர்என்னா நின்றானோ; என்னுடைய விதிநிஷேதங்களுக்குத் தான் கட்டுப்பட்டவனாய்.  இன்னதை இன்ன விதமாகச் செய்யுமாறு தன்னை நோக்கி விதிக்கவேணுமென்று வேண்டாநின்றானே;  இப்படியுமொரு அநியாயமுண்டோ?  என்கிறாராழ்வார் நெஞ்சை நோக்கி.

எம்பெருமானார்க்கு முன்புள்ளார் சிலர்“அது நமது விதிவகையே” என்பதற்கு ‘அது நம்முடைய பாக்யாநுகுணமாக’ என்று பொருள் பணித்தார்களாம்;  *தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்த்ர் நியதிரி விதி:*  என்ற அமரகோசத்தை அவர்கள் கருத்திற் கொண்டனர் போலும்.  அப்படியன்றிக்கே எம்பெருமானார் “அப்பொருள் பொருந்தாது, இத்திருவாய்மொழியில் மேலோடுகிற ரஸத்தோடு சேராது; நாம் விதித்தபடியே செய்வானாயிருந்தான் என்னும் பொருளே இணங்கும்” என்றருளிச் செய்வாராம்.  “அது நமது சொல்வகையே” என்றும் பாசுரம் பணித்திருக்கலாம்;  அங்ஙனன்றி ‘விதிவகையே’ என்றதில் ஒரு விசேஷமுண்டு.  விதியைக் கடந்தால் ப்ரத்யவாயம் வருமென்று அஞ்சுவாரைப்போலே அஞ்சாநின்றானாம் எம்பெருமான்.  ‘நமக்கு இஷ்டமானதை ஆழ்வாருடைய நியமனமின்றி நம் மனம் போனபடி செய்துவிட்டோமாகில் என்ன ப்ரத்யவாயம் நேருமோ? என்று அஞ்சி ‘ஆழ்வீர் விதிக்கவேணும், விதிக்கவேணும்’; என்றானாம்;  அதை அப்படியே அநுவதிக்கிறராழ்வார்.  “என்னைப் பரமபதத்திற்குக் கொண்டுபேர் வழியெல்லாம் குடைகளும் சாமரமும் தோரணமும் வாத்யமுமாக இருக்கவேணும்; நீ கைப்பந்தம் பிடித்துக்கொண்டு ஸ்வாமியெச்சாரிக்கை! என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்லவேணும்; நடைபாவாடை பரப்பவேணும்; திருச்சின்னமும் காஹளியும் பணிமாறவேணும்; திருவிருத்தம் விண்ணப்பம் செய்வாரும் ஸ்தோத்ரரத்னம் சொல்லுவாரும் புடைசூழவேணும் - இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நீ செய்யவேணும்; என்று ஆழ்வார் திருவாக்கிலே விதிவாசகங்கள் வெளிவரவேணுமென்று எம்பெருமான் நிர்ஷிக்கிறபடி.

நமது விதிவகையே என்றவிடத்து ஈட்டில் “ததா அநுஜாநந்த முதார விக்ஷணை,“ என்ற ஸ்தோத்ர ரத்நஸூக்தியை ப்ரஸங்கித்து நம்பிள்ளையருளிச் செய்துள்ள திவ்ய ஸூக்திகளுக்கு வண்ணெல்லா முண்டோவிலை! என்ன வேண்டம்படியாயிரா நின்றது. கல்லுங்கரையநின்ற அந்த ஸ்ரீஸூக்திகள் அப்படியே அநுவதிப்போம்.

“(நமது விதிவகையே (த்தாநுஜாந்ந்த முதாரவீக்ஷணை) இது பட்டர் தாமே யருளிச்செய்ய நான் கெட்டேனென்றருளிச் செய்தார். சேனை முதலியார் சட்டையும் மயிர்க்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப்புக்கவாறே நாச்சிமாரும் தானுமாய் ஸ்வைரமாக விருக்கிறவது தவிர்ந்து, நாச்சிமாரும் ஸிம்ஹானைத்திலொரு  மூலைகளிலே யொதுங்க. தானும் ஸவிநயமாக இருக்குமாய்த்து வ்ருத்த ஸாமந்தரைக் கண்ட ராஜாக்களைப்போலே. இவர் தாமும் ‘இவ்விருப்புக்குத் தண்ணீர்த் துரும்பாக வொண்ணாது‘ என்று ஜகந்நிர்வாஹத்துக்கு வேண்டுமவற்றை பாசுரப்பரப்பற விண்ணப்பஞ் செய்வராய்த்து. பிராட்டிமாரோடிருகுமதிலும் ப்ரஹ்மாவாக்க வேணும் இன்னானை மாற்றவேணும்‘ என்று வேண்டுமவற்றைச் சுரங்க விண்ணப்பஞ் செய்வர். ஐயர் யாதொன்று சொல்லிற்று அவயெல்லா யருளிச்செய்தபோது கிடாம்பியாச்சானோடு அல்லாதாரோடு வாசியறக் குமிழி நீருண்டது. ஆச்சான்தான் பட்டருக்கு ஸ்நேஹித்திருக்கும் போர. இளையாழ்வான் ஆச்சானை ‘பட்டர் தம்மையாச்சரயித்தவர் களிற் காட்டிலும் நீர் தாழ அநுவர்த்திப்பானென்?‘ என்று கேட்க, நீ அன்று கண்டிலைகாண், எம்பெருமானார் பட்டர்கையிலே புஸ்தகத்தைக் கொடத்துத் திருமுன்பே ஒரு ச்லோகத்தை விண்ணப்பஞ் செய்வித்துத் திருப்பிரம்புக்குப் புறம்பாக்க கொண்டு புறப்பட்டுச் சுற்றும் பார்த்தரளி நம்முடையாரங்கலும் நம்மை நினைத்திருக்குமாபோலே இவனை நினைத்திருங்கோள் என்றருளிச் செய்தார். (இவை ஈட்டு ஸ்ரீஸூக்திகள்.)

இருள் தருமாஞாலத்நுளினிப்பிறவி யான் வேண்டேன் - இது ஆழ்வார் தாம் தம் திருவுள்ளத்தோடே சொல்லுகிறபடி. “ஆழியானருள் தருவானமைகின்றான் அது நமது விதிவகையே” என்று சொன்ன ஆழ்வாரை நோக்கி நெஞ்சு கேட்டது ‘எம்பெருமானுடைய ஆசையிருக்கிறபடி தெரிந்து கொண்டேன்; நீர் அவருடைய ஆசையின்படியே ஒழுகுவதாயிருக்கிறீரா? இங்கேயே குணாநுபவம் செய்வதாயிருக்கிறீரா?” என்று.  அதற்கு ஆழ்வார் விடை கூறினர் அவன்வழியே போவதாகத் தானிருக்கிறேனென்றார்.  அதற்கு நெஞ்சு சொல்லிற்று “வாரியாரின்பமெய்திலென்? மற்றை நரகமே யெய்திலென்?  என்று சொன்னவரன்றோ நீர்.  அங்குப்போனால் திருநாடு ஒன்றே;  இங்கு *சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே, மதிட்கச்சி யூரகமே பேரகமே  பேராமருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே, பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர், அராமஞ் சூழ்ந்தவரங்கம், கணமங்கைக்காரரர்மணி நிறக்கண்ணனூர் விண்ணகரம், சீரார்கணபுரம் சேறை திருவழுந்தூர், காரார் குடந்தை கடிகை கடன்மல்லை, ஏரார் பொழில்சூழிட வெந்தை நீர்மலை, சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர், பாரோர்புகழும்வதாரி வட மதுரை யென்றிப்படி நூற்ழெற திருப்பதிகளை யநுபவிக்கலாமே;  ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போகவா நினைக்கிறீர்” என்று.  அதற்குமேல் ஆழ்வார் சொல்லுகிறார் – [இருள்தருமாஞாலத்து ளினிப் பிறவி யான் வேண்டேன்] நெஞ்சே! இந்நிலம் இருள் தருமாஞாலமென்பதறியாயோ? நித்யஸூரிகள் தாமே இங்கு வந்தாலும் அவர்களையும் மருளச் செய்யுமதன்றோ, இந்நிலம்.  நித்யஸூரிகளென்று என்ன? நித்யஸூரி நாதன் தானே வந்தாலும் அங்ஙனே யன்றோ? *  *உபமாநமசேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதபவத்* என்று புகழப்பட்ட ப்ரஹ்லாதாழ்வானையுமன்றோ மருளப்பண்ணிற்று இந்நிலம்.  இருக்கவிருக்க அஞ்ஞானத்தை வளர்ப்பதான இந்நிலத்திலே யிருப்பதை இனியான் வேண்டேன். - என்கிறாழ்வார்.

“இனியிருக்க யான் வேண்டேன்” என்ன வேண்டுமிடத்து “இனிப்பிறவி யான் வேண்டேன்” என்றதில் ஒரு மருமமுண்டு;  அதாவது - *க்ருதாதிஷு நராராஜந் கலௌ இச்சந்தி ஸம்பவம்* என்று ஸ்ரீபாகவதத்திற் கூறியபடி ஆழ்வார் ஆசைப்பட்டு வந்து பிறந்தவராதலால், இப்படி நான் ஆசைப்படப் பெற்றதாயினும் இப்பிறவி இனி வேண்டர் கலியுகத்தில் வந்து பிறந்து இந்த யுகத்தவர்களுக்குத் திருவாய்மொழி பாடித்தரவேணுமென்று ஆசைப்பட்டேன்;  (இனி) அக்காரியம் நிறைவேறியானபின்பு இதுவரையிலும் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததுபோல் இனிப்பிறக்க விரும்பமாட்டேனென்கிறார் என்பதாம்.

இப்படிச் சொன்ன ஆழ்வாரை நோக்கி மீண்டும் நெஞ்சு சொல்லிற்று – ஆழ்வீர்! உமக்கு ஒன்று நினைப்பூட்டுகிறேன், கீழே நீர் திருவாறன் விளையை யநுபவிக்கும்போது எம்பெருமான் வந்து உம்மைத் திருநாட்டுக்கு அழைத்தான், அப்போது “தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாதித் தெளிவிசும் பேறலுற்றால்.. திருவாறன் விளையதனை மேவிவலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலென்னு மென்சிந்தனையே“ என்று சொல்லியிருக்கிறீர். அதனை மறந்தீரோ? ‘இது பரமபதத்துக்குப் போம்பழி, இது திருவாறன்விளைக்குப் போம்வழி. எந்தவழியிற் செல்ல விரும்புகிறீர்?‘ என்றால் திருவாறன் விளைக்கே என்னெஞ்சு செல்லுமென்றீர், அப்படியிருக்க அதற்குமாறாக இப்போது சொல்லத்தகுமோ? என்றது (நெஞ்சு). அதற்கு மேல்சொல்லுகிறாராழ்வார் – மருளொழிநீ மடநெஞ்சே! அப்படி நான் நினைத்திருந்தது உண்மையே, ஆனால் இவ்விருள்தருமா ஞாலத்தின் தன்மையை அறியவறிய அந்நினைவு மருளேயாய்த் தோன்றிற்று. நெஞ்சே! அந்தமருளை நியும் தவர்ந்திடு, உகந்தருளின நிலங்களிலுண்டான ஆதராதிசயத்தில் ஒரு குறையில்லை. ஆனால் ப்ரக்குதிவச்யனாக்கி சப்தாதி விஷயங்களிலே கொண்டுபோய் மூட்டும் ஸம்ஸாரஸ்வபாவத்தை யுணர்ந்த பின்பு * இருபாடெரி கொள்ளியினுள்ளெறும்பே போல் நலிவுபடப்பாராதே. * பாம்போடொரு கூரையிலே பயிலப்பாராதே, பின்னை என் செய்யவேணு மென்கிறாயோ.

வாட்டாற்ற்றானடி வணங்கே - திருவாட்டாற்றெம்பெருமானுடைய மனோரதத்தின் வழியே யொழுகப்பார் என்றபடி.  திவ்யதேசங்களை விட்டுப் பரமபதத்தேறப் போவதாக நிச்சயித்திருக்குமாழ்வார் இப்போது “வைகுந்தனடி வணங்கே” என்றன்றோ சொல்லப்ராப்தம்; அதைவிட்டு, மீண்டும் திவ்யதேசத்தில் நசை தோன்ற “வாட்டாற்றானடி வணங்கே” என்று சொல்லுவதென்?  என்று சங்கைதொன்றும்.  கேண்மின்; இப்போது திருவாட்டாற்றில் வந்து காட்சிதரும் பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு அழைத்துச் செல்ல விரைந்திருப்பவன்;  அது மேற்பாசுரங்களில் வியக்தமாகவுள்ளது.  ஆகவே, வாட்டாற்றானென்பதற்கு நமக்கு ஹிதகாமனாய் நம்மைக் கொண்டு போக வந்திருப்பவனென்றிவ்வளவே பொருள்.  அடிவணங்கேயென்றதும் - அவன் வழியையே பின் செல்லப்பார் என்றபடி, வேறு அபிப்ராயமின்றிக்கே ஒரேவிதமான அபிப்ராயமுடையவன் என்பதைக் காட்டும்படியான அடிவணங்குகையைச் சொன்னது - ‘நமஸ்காரம் பண்ணு’ என்ற பொருளில் சொன்னதன்று; அவருடைய கருத்துக்கிணங்கியிரு என்றவாறு.  இங்கே நம் பிள்ளையீடு;- நமக்கு ஹிதகாமனாய் வந்திருக்கிற அவன் வழியேபோய் அவனை யநுபவிக்கப்பாராய்.  உகந்தருளின நிலங்களிலே வந்து நிற்கிறது நம்மை அவ்வருகே கொடுபோகைக்காயிருக்கும்.  நீயும் அவன்னினைவிலே போகப் பாராய்.  அடிவணங்குகையாவது - -ஈரரசுதவிருகையிறே; அவன் கருத்திலே போகை.”

English Translation

The Lord of discus resides in Tiruvattaru, waiting to be commanded by his devotees. No more do I seek birth in this dark world. Dispel all doubts, and worship him. O Heart!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain