nalaeram_logo.jpg
(3941)

மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்

தீதொன்று மடையா ஏதம் சாராவே.

பதவுரை

மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்

-

த்வயமென்கிற மந்த்ரரத்னத்தை அநுஸந்திக்க வல்லீர்களாகில்

தீதொன்று மடையா

-

ஏதம் சாராவே மாதவன் என்று  என்று ஓத வல்லீர் ஏல்

தீது ஒன்றும் அடையா

-

அதீத பாபங்களில் ஒன்றும் கிட்டாது

ஏதம் சாரா

-

மேலுள்ள பாவங்களும் வந்து கூடாது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

**** - வாடாமலர்கொண்டு நாடோறும் நாடமுடியாமலும், வேங்கடம்மே யானை அடிபணிய முடியாமலுமிருப்பார்க்கும் ஒருவழியருளிச் செய்கிறாரிப்பாட்டில்.  மாதவனென்றென்று ஓதவல்லீரேல் - “மாதவனென்று” என்னாமல் “என்றென்று” என்று இரட்டித்துச் சொன்னதனால் லஷ்மீஸம்பந்தத்தை இரண்டு தடவை அநுஸந்திக்க நியமிக்கின்றமை விளங்குகின்றது.  இரண்டு கண்டமாகவுள்ள த்வய மென்னும்மந்த்ரரத்னத்தில் பூர்வ வாக்யத்திலும் உத்தரவாக்யத்திலுமாக இரண்டு தடைவ லஷ்மீஸம்பந்தம் ஸுவ்யக்தமாகவுள்ளதனால் த்வயாநுஸந்தானம் செய்ய நியமிக்கிறாராழ்வார் என்று கொள்ளக்கடவது.  ஆசாரியஹ்ருதயத்திலும் (228) “மாதவனென்று த்வயமாக்கி” என்றருளிச்செய்தது காண்க.  த்வயத்தின் பூர்வவாக்யத்திலும் உத்தரவாக்கியத்திலும் ஸ்ரீமத் பதமுள்ளது.  இரண்டிடத்தில் லஷ்மீ ஸம்பந்தம் சொன்னதன் கருத்தை நம் ஆசிரியர்கள் விவாரித்துள்ளார்கள்:- “இதில் முற்கூற்றல் பெரியபிராட்டியாரை முன்னிட்டு ஈச்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது.  பிற் கூற்றல் அச்சேர்த்தியில் அடிமை யிரக்கிறது”  (122) என்பது முமுக்ஷுப்படி திவ்ய ஸுக்தி.  பூர்வகண்டத்தில் லஷ்மீஸம்பந்தம் சொன்னது புருஷகாரமாக் உத்தரகண்டத்தில் அது சொன்னது பெரிய பிராட்டி யாரும் அவருமான சேர்த்தியிலே கைங்காரியம் செய்கைக்காக என்றதாயிற்று ஆக ஆச்ரயிக்கும் தசையோடு அநுபவிக்கும் தசையோடு வாசியற இரண்டு தசையிலும் லஷ்மீ ஸம்பந்தம் உத்தேச்யமாயிருக்கையாலே இங்கு “மாதவன் என்றென்று”  என்று இரட்டித்தபடி.  இப்பதிகத்தில் முதற்பாட்டிற் சொன்ன நாராயண சப்தத்தோடே மாதவனென்கிற வித்தை இரண்டு தடைவ சேர்த்துக் கொண்டு சொல்ல வல்லீர்களாகில் என்றதாயிற்று திருவஷ்டாஷர மஹா மந்த்ரத்தின் அநுஸந்தானத்தோடு மாத்திரம் நில்லாமல் த்வயாநுஸந்தானமும் செய்ய வல்லீர்களாகில் என்றதாயிற்று.

ஓதவல்லீரேல் என்றதன் உட்கருத்தைக் கண்டுபிடித்து ஆசாரியர்கள் அருளிச்செய்வது பாரீர் - “பரப்ரோரிதராய்க் கொண்டு சொல்லவல்லிகோளாகில்” என்று.  ஆறாயிரப்படியிலுமிங்ஙனே யுள்ளது.  ஒருவர் முன்னே சொல்ல மற்றொருவர் பின்னே சொல்லுகையாகிற அத்யயனத்திற்கு ஒதுகை யென்று பெயராதலால், நீங்கள் தாங்களே ருசிபூர்வமாகச் சொல்லாதொழியினும் ஒருவருடைய ப்ரேரணையினாலாவது சொல்ல நேர்ந்தால் என்றாராயிற்று.

தீதொன்றுமடையா ஏதம் சாராவே - தீது என்றாலும் ஏதமென்றாலும் பரியாயமாகி ஒன்றேயாயிருக்க இரண்டுபோலச் சொன்னது, பூர்வ பாபமென்றும் உத்தர பாபமென்றும் இரண்டாயிருப்பது பற்றி.  *தததிகமே உத்தர பூர்வாகயோரச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத்* என்ற ப்ரஹ்மஸுத்ர மு முணர்க.  ப்ரஹ்மஜ்ஞானம் பிறப்பதற்கு முன்பு செய்யும் பாபங்கள் பூர்வ பாபங்களெனப்படும்;  பின்பு நேரும் பாபங்கள் உத்தர பாபங்களெனப்படும்.  “போய பிழையும் புகுதருவானின்றனவும் தீயினில் தூசாகும்”  என்ற திருப்பாவையுங் காண்க.  போய பிழைகள் தீயிலிட்ட தூசுபோலே தொலைந்தொழியும்;  இனி வரும் பிழைகள் தாமரையிலைத் தண்ணீர் போலே பற்றுதலின்றிக்கே யொழியும் - என்பது உபநிஷத்துக்களின் கொள்கை.  இது தோன்றவே, தீது ஏதம் என்ற இரண்டு சொற்களை யிட்டு ஆழ்வாரருளிச் செய்தபடி.

இப்பாட்டின் முடிவிலே ஈட்டு ஸ்ரீஸீக்தி காண்மின்;- “கீழ்ச்சொன்ன திருமந்த்ரமும் இப்பாட்டில் சொன்ன ஸ்ரீமத் பதமும் தனித்தனியே பேற்றுக்குப் பரியாப்தமான பின்பு இரண்டையும் சேர்த்துச் சொன்னவர்களுக்குப் பேறு சொல்ல வேண்டாவிறே.”

English Translation

If you can sing Madava's names, no hard will come, nor sin attain you

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain