nalaeram_logo.jpg
(3928)

நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை

கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்

மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்

நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே.

பதவுரை

என நெஞ்சம் கழியாமை

-

எனது நெஞ்சைவிட்டு அகலாதபடியான தன்மையை

பிறர்க்கு மெச்சப்படான்

-

பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய்

நிச்சித்திருந்தேன்

-

நிச்சயித்திருந்தேன்

கை சக்கரத்து அண்ணல

-

திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி

மெய் போலும் பொய் வல்லன்

-

மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய்

கள்வம் பெரிது உடையன்

-

நாமறியாதன பலவும் பாரியா நின்றான்

நாகத்து அணை யான் நமக்கு நச்சப்படும்

-

சேஷசாயியானவன் நமக்கு ப்ராப்யனாவன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

**** - இப்பாட்டில் “கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும்.  அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ?  என்கிறார்  என நெஞ்சம் கழியாமை நிச்சித்திருந்தேன் - நீர்லே கிடந்தும் மலையுச்சியிலே நின்றும் அவன் தவம் புரிந்து வந்து என்னெஞ்சிலேயிருக்கையாலே இனி யொருகாலமும் விட்டுப் போகானென்று நிச்சயித்திருந்தேன்.  இது கீழ்ப்பாட்டிற் சொன்னதேயாகிலும் மீண்டுஞ் சொல்லுகிறது திடப்படுத்திச் சொல்லுகிறபடி.

நெஞ்சங் கழியாமைமாத்திரமன்று; இன்னமும் செய்ய நினைத்திருக்குமவை அபாரிமிதமாகவுண்டென்கிறார் இரண்டாமடியால்.  அவை எவை யென்னில்; அர்ச்சிராதிமார்க்கத்தாலே கொண்டுபோக நினைப்பது, அமாநவ கரஸ்பர்சம் செய்விக்க நினைப்பது, மதிமுகமடந்தையரை வரக்காட்டி எதிரிகொள்ளப்பாரிப்பது ஆக இங்ஙனே அனேகம் என்க.  இந்த எண்ணங்களைக் கள்வம் என்கிற சொல்லாலே சொல்லுவானென்னென்னில்; இவைசெய்யப்  போகிறேனென்று வாய்விட்டுச் சொல்லாமே தன்னேஞ்சினுள்ளேயே ஏகாந்தமாகப் பாரிப்பதுபற்றிக் கள்வமென்கிறது.  அப்படி ஏகாந்தமாகப் பார்த்தானாகில் அதை ஆழ்வார் தாமறிந்த படியென்னென்னில். அகத்தை முகத்திலே யறியவல்லவரன்றோ ஆழ்வார்.  ஆசாரிதரையொருகாலும் கைவிடாதவனென்கைக்காகக் கைச்சக்கரத்தண்ணல் என்றது.

பிறர்க்கு மெச்சப்படான் - நான் தன் குணங்களைச் சொல்லிப் புகழுகிறாப்போலே பிறர் தன் குணங்களைச் சொல்லிப் புகாலாம்படியிராதவன் என்றபடி..  இப்போது இது சொல்லுகிறது எதற்காகவென்னில்; ஆழ்வார் விஷயத்திலே அவன் பாரிப்பது ஸர்வஸாதரணமாகாது என்கைக்காக.  *பத்துடையடியவர்க் கெளியவன் பிறர்களுக்காரிய வித்தகன்* என்றதுங்காண்க.

மெய்போலும் பொய்வல்லன்-மெய்யென்று நினைக்கும்படியான பொய்யிலே வல்லவன் இங்கே ஈடு:- “அர்ஜுநாதிகள் பக்கலிருக்குமா போலேயிறே துர்யோதநாதிகள் பக்கலிலுமிருப்பது; காரியத்தில் வந்தால் மெய்செய்வாரைப் போலே பெயர் செய்து தலைக்கட்டும்”   என்று.  அடியார்களுக்கு மெய்யே செய்யுமாபோலே பிறர்க்குப் யொய்யே செய்யவல்லவன் என்பது பரமதாற்பாரியம்.  நச்சப்படும் நமக்கு - நமக்கு நச்சப்படும் என்று அந்வயம்; உகவாதார் விஷயத்தில் செய்வதை நம் பக்கலில் செய்யானென்றபடி.  இதற்கொரு த்ருஷ்டாந்தம்   காட்டுகிறார் நாகத்தணையானே யென்று.  நம்மிலே யொருவனான திருந்றுனதாழ்வான்பக்கல் பாரிமாறுகிறபடி கண்டால் அப்பாரிமாற்றம் நமக்கும் ப்ராப்தமாகுமெவன் நம்பியிருக்கத் தட்டுண்டோ வென்றாராயிற்று.

English Translation

He cannot leave my heart, I am convinced.  The discus Lord is full of mischief in him.  He makes false hood appear rear to those who do not see him. For us who love him dearly, he appears reclining

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain