nalaeram_logo.jpg
(3921)

உகக்குநல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர்கெடுந்தொறும் நாங்கள்

வியக்கவின்புறுதும்எம்பெண்மையாற்றோரும் எம்பெருமான் பசுமேய்க்கப்போகேல்

மிகப்பலவகரர்கள் வேண்டுருவங்கொண்டு நின்றுழிதருவர்கஞ்சனேவ

அகப்படிலவரொடும் நின்னொடாங்கே அவத்தங்கள் விளையுமென்சொற்கொளந்தொ!

பதவுரை

எம்பெருமான் உமக்கும் நல்லவரொடும் வழி தந்து

-

எமது தலைவனே! நீ உகக்கும்படியான நன்மைமிக்க ஆய்ச்சிகளோடே திரிந்து

பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு

-

பலவசுரர்கள் (மரூபிகளாகையாலே) வேண்டின வடிவுகளைக் கொண்டு

உன்தன் திருவுளம் இடர் கெடும் தோறும்

-

உன் திருவுள்ளம் ஆனந்திக்குமளவில்

மிக நின்று உழிதருவர்

-

மிகவும் திரிவர்கள்

நாங்கள் வியக்க இன்புறும்

-

அகப்பட்டால்

எம் பெண்மை ஆற்றோம்

-

பிறரைக் காதலிக்குமளவில் பொறாமைப்படும்படியான பெண்மையை யுடையோமலலோம்; (ஆகவே)

அவரொடும் நின்னொடு ஆங்கே

-

அவர்களும் நீயுமாகப் பிணக்கிடவே

அவத்தங்கள் விளையும்

-

ஏதேனும் பொல்லாங்கு விளையும்,

பசு மேய்க்கப் போகேல்     ;

-

பசு மேய்க்கப் போகாதே கொள்

என் சொல் கொள்

-

என் சொல்லைப் பேணியருளாய்,

கஞ்சன் ஏவ    கம்ஸனுடைய ஏவுதலால்

அந்தோ!

-

பிரிவாற்றகில்லேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * ... கீழ்ப்பாட்டில் * நீயுக்க்கு நல்லவரோடு முழிதராயே* என்று சொன்னதைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மையான வார்த்தையாகுமோ? ஏதோ நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே யொழிய, உங்களருகே நான் வேறு சில மாதரோடே கலந்து பரிமாறினால் அதை நீங்கள் பொறுத்திருப்பர்களோ? கண்ணாலேயே தஹித்து விடமாட்டீர்களோ?’’ என்று சொல்ல, அதற்கு மறுமாற்ற முரைப்பது இப்பாட்டு; உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனாலடையுமுகப்பிற்காட்டிலும், நீ உன் உகப்புக்கு இலக்கானாரோடு கூடி நெஞ்சிடர் தீர, அதனால் நாங்களடையுமுகப்பே எங்கட்கு உயர்ந்தது என்கிறது இப்பாட்டில்.               உகக்கு நல்லவரொடு முழிதந்து.... எங்களைக் காட்டிலும் நீ மிகவிரும்பும்படியான பா’டிகயவதிகளோடு ரமித்து; அதனால் உன்றறன் திருவுள்ளமடர்கெடுந்தோறும் ... ’ நாம் இன்னாளோடு கலக்கப் பெற்றிலோம்’ என்று உன் திருவுள்ளத்தில் இடர் உண்டாகாதபடி ஒரு மகிழ்ச்சி விளையுமாகில், நாங்கள் வியக்க இன்புறுதும்= அதுவே எங்களுக்குப் பெறாக நாங்கள் மிக மிக இன்பமெய்துவோம்; இக்குணம் பெண் பிறந்தார்க்கு உண்டாகமாட்டாதேயென்னில்; எம் பெண்மையாற்றோம்= உன் உகப்புக்குப் புறம்பாய்வரும் ஸத்ரீத்வம் நாங்கள் வேண்டோம்; ஸ்வரூபஜ்ஞான மில்லாத பெண்களின் படி எங்களுக்கில்லை என்றப நாங்கள் நீயுகந்தாரை உகப்பவர்களே யன்றி உன்னை உகக்குமவர்களல்லோங்காண்.

ஆசாரியஹ்ருதயம் மூன்றாம் ப்ரகரணத்தில் “ மூன்றில் சுருக்கியவைந்தையும்’’என்று தொடங்கியுள்ள சூர்ணையில் “ எம்மா வொழிவில் நெடு வே யென்கிற “ என்றுள்ள ஸ்ரீ ஸூக்தி இங்கே அநுஸந்திக்கத்தக்கது; எம்மா வீட்டுத் திறமும் செப்பம்* ஒழிவில் காலமேல்லாம்* நெடுமாற்கடிமை* * வேய்மருதோளினை* ஆகிய நான்கு பதிகங்களும் புருஷார்த்தஸ்வரூபத்தை விசதகரிப்பனவாக அறுதியிடப்பட்டிரா நின்றது. மற்ற மூன்று பதிகங்களில் பருஷார்த்தஸ்வ ரூபம் நிஷ்ர்ஷிக்கப்பட்டிருப்பது ஸுஸ்பஷ்டம். * வேய்மரு தோளியைபகிற இப்பதிகத்தில் அது எங்கே தெரிகிறதென்று ஆராய்ந்தால் இங்கே தான் தெரிந்து கொள்ளத்தக்கதாகும்; “ உன்றன் திருவுள்ளமிடர்கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் எம் பெண்மையாற்றோம்’’ என்னுமிதுவே இப்பதிகத்தற்கு உயிர் நிலையயிருக்கும். இந்த மஹார்த்தத்தை வெளியிட வேண்டியே இப்பதிகம் உப’ரமிக்கப்பட்டதென்றும் கொள்ளலாம்.

ஆறாயிரப்படி யருளிச் செயல்;... “ உனக்கு அபிமதைகளாய் விலக்ஷணைகளாயுள்ளவர்களோடு திரிந்து உன்னுடைய திருவுள்ளத்திலிடர் கெடுமளவில் நீ எங்களோடு ஸம்ச்லேஷித்ததிற் காட்டிலும் நாங்கள் மிகவுமினியரவுதோம்; வேறு சிலரோடேஸம்ச்லேஷிக்கப் பொறுக்கு மாட்டாத பெண்மை வேண்டோம் என்று. ( பெண்மை வேண்டாமென்றது அப்படிப்பட்ட தீய இயல்பு எங்களிடமல்லை எனறபடி.)

எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல்... பசு மேய்க்கப் போவதென்கிற வியாஜத்தினால் நீ பெற நினைத்திருக்கிற பேறு எங்கள் கண்முகப்பே பெறலாமாதலால், பிரானே! பசு மேய்ப்ப தென்றோரு வியாஜமிட்டுக் கொண்டு றீ பிரிந்து போகா வேண்டாவென்கை.

இது கேட்ட கண்ணபிரான் என்னை நீங்கள் காமுகனென்றே அறுதியீட்டுப் பேசா நின்றீர்கள்; உண்மையில் ஜாதிக்கேற்ற தருமமாகப பசு மேய்ப்பதற்கென்றே நான் போகிறேனேயொழிய மாதர்களோடு புணர்வதை நெஞ்சிலும் நினைத்திலேன்; வேறாக நினையதே கொண்மின்; நான் போய்வருகிறேன், என்ன; அதற்குச் சொல்லுகிறது பினனடி; ( மிகப்பலவசுரர்கள் இத்யாதி) நீ காமுகனோ அல்லையோ. அது எப்படியாவது கிடக்கட்டும்; ஏகதாரவ்ரதனான இராமபிரானைக் காட்டிலும் நீ நைஷ்டிகப்ரஹ்மசாரியாகவே இருக்கவுமாம், அதிலொரு விஸம்வாதமல்லை கீடாய்; பலவசுரர்கள் கம்ஸனாலே வசப்பட்டு வேண்டின வடிவுகளைக் கொண்டு ஆங்காங்கு திரிய நிற்பர்கள்; நீயோ வழியேபோய் வழியே வருமவனல்லை; அவர்களோடு பிணங்குவாய்; * அவ்யவஸ் தொள ஹி த்ருக்யேதே யுத்தே ஜயபராஜயௌ* என்பதறியாயோ?  ஏதேனும் அவத்யங்கள் விளையக்கூடும்; என் சொல் கொள்ளாய்;  பசு மேய்க்கப் போகேல். அவத்யம் என்னும் வடசொல் அவத்தமெனத் திரிந்தது.              ...

English Translation

Every time you enjoy sweet union with good cowherd-girls and overcome your misery. Our femininity rises uncontrolled.  We enjoy if even more. alas!  Pray do not go after your cows.  Hordes of Asuras are sent by Kamsa. if you get caught, attrocities may happen,  take heed, alas, oh!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain