nalaeram_logo.jpg
(3920)

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்

கசிகையும் வேட்கையும் உள்க லந்து கலவியும் நலியுமென் கைகழி யேல்

வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி

ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ உகக்குநல் லவரொடும் உழித ராயே.

பதவுரை

ஆங் அசுரர்கள் தலைப்பெய்யில் யவன் கொல் என்று

-

நீ பசு மேய்க்கப் போகிற காட்டிலே அசுரர்கள் வந்து கூடினாலும் என்ன அபாயமாகுமோ வென்று

கசிகையும் வேட்கையும் கலவியும் உள் கலந்து நலியும்

-

நெஞ்சிலுள்ள ஈடுபாடும் மேன்மேலுமுண்டாகின்ற குதூஹலமும் கலவியும் இவை  ஒன்று சேர்ந்து நலியா நிற்கும்; (ஆதலால்)

என் ஆருயிர்  ஆழும்

-

அருமையான எனது உயிர் வருந்தா நின்றது; (ஆதலால்)   என் கை கழியேல்      என்னைப் பிரிந்து போகாதே;

ஆன் பின் போகேல்

-

சி பசுக்களின் பின்னே போகாதே;

வசி செய்

-

கண்டவர்களை வசப்படுத்த வல்ல

உஉன் தாமரை கண்ணும் வாயும் கைகளும்

-

செந்தாமரை போன்ற உனது கண்களையும் வாயையும் கைகளையும்

ஒசி செய் நுண் இடை உகக்கும் நல்லவரொடும்

-

ஒசிந்த நுண்ணிடையையுடைய உனது காதலிமார்களுடனே

பீதகம் உடையும் காட்டி

-

திருப்பீதாம்பர வடிய்ழகையுங் காட்டி,

உழிதராய்

திரிந்து கொண்டு இவ்விடத்திலேயே இரு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* *  .... கீழ்ப்பாட்டில் “அசுரர்கள் தலைப்பெய்யில்’’ என்று அஸுரப்ரஸ்தாவம் வந்ததே; அதுவே மேலும் அநுவர்த்திக்கிறது; இப்பாட்டுத் தொடங்கிப் பதிகம் முடியுமளவும் அஸுலபயமே விஞ்சிச் செல்லுகிறதாயிற்று. பிரானே! நீ போமிடங்களில் அசுரர்கள் வந்து கிட்டினால் என்விளைகிறதோவென்று நடுங்கா நின்றேன்; ஆதலால் நீ பசு மேய்க்கப் போவது கூடாது; நீ போனால் உன் பக்கலில் வைத்திருக்கிற அன்பும், அவ்வன்பின் எல்லை நிலமான அபிநிவேசமும். இப்போது கலக்கிற கலவியும் மருமத்திரே புகுந்து நலியும்; ஆகவே நான் அணைத்த கைக்குள்ளேயே நீ கிடக்க வேண்டுடே யொழிய. கையை விட்டு அகலக் கூடாது என்று இவள் சொன்னவாறே, இதற்கு அவன் சொல்லலுற்றான்... ’ நான் இங்கேயிருக்க முடியுமோ? பசு மேய்க்கப் போகவேண்டியதும் ஒள்றண்டு. அதுவன்றியும் பிறம்பேயும் நமக்கு அபிமதவிஷயங்களுண்டே; * தக்காரி பலர் தேவிமார் சாலவுடையீர்* என்றும்* அழகியார்வ்வுலகு மூன்றுக்கும் தேவிமைதகுவார் பலருளர்* என்றும் அடிக்கடி நீங்களும் சொல்லுவதுண்டே; * ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்பிடித்தது நடுவுனக்கு அரிவையரும் பலர்* என்று இப்போதே நீங்களும் சொன்னீர்கறே; பசு மேயக்கப் போவதென்றோரு வியாஜங் கொண்டு நமக்கு அபிமதைகளுடனே கலந்து பரிமாறுவதும் உத்தேச்யமன்றோ; அது தவிரப்போமோ? என்று. ( மேல் இவள் சொல்வது கேட்கைக்காக இங்ஙனே சொன்னான் கண்ணபிரான்;

இதற்கு மேல் ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யமாயிருக்கையாலே அவையேயீண்டெடுத்துக் காட்டப்படுகின்றன; ... “ எங்களுக்கு அந்த நிர்ப்பந்த முண்டோ? நீ கைகழியப் போகாதொழியுமத்தனையன்றோ வேண்டுவது; நீ விரும்பியிருக்குமவர்களோடே எங்கள் கண் வட்டத்தில் மானே பரிமாறப்பார் என்ன; ஆனால் அவர்களை அழைத்துத் தருவார் ஆரென்ன; ( வசிசெயுன் தாமரை’ கண்ணும்) உனக்கு* தூது செய் கண்களுண்டாயிருக்க, புறம்பே பர்கரம் தேடி அழைக்க வேண்டியிருந்ததோ? இனிப் பொருநதோமென்றிருப்பார் நெஞ்சுகளில் மறத்தை மாற்றி அவர்களை வசப்பபடுத்தித் தரவல்ல கண்களும, அந்நோக்கில் கருத்தை ஆவிஷகர்க்கும் வாயும், அந்நோக்கிலும் முறுவலிலும் நேர்விழிக்கமாட்டாதே வ்ரீளையாலே கவிந்தவர்களை யெடுத்து’ கொள்ளும் கைகளும், ஸ்பர்சத்துக்குத் தோற்றவர்களைக் கீழ் போகாதபடியாகத் தன் செல்லாமையாலே மேலே யேறிட்டு’ கொள்ளுகிற திருப்பீதாம்பரமும் காட்டினால் இந்த வலைகளிலே அகப்படாதாருண்டோ? உனக்குப் புறம்பே அழைத்துத் தருவார் வேண்டியிருந்ததோ? பிடாத்தை விழ விட்டு வடிவைக்காட்ட வமையாதோ’’?

(பிடாத்தை வீழ விட்டு என்றது... தனது மேற்போர்வையைத் தள்ளி என்றபடி.)

நீ உகக்கும் நல்லவரான ஒசி செய் நுண்ணிடை இளவாச்சியரோடும் உழிதராயே... என்னை விட்டு வேறொரு மாதரை நீ அபிமானத்தாயாடிகல் அது எனககுப் பொறுக்குவொண்ணாத துக்கமேயானாலும், இனி அதைத் துக்கமாகப் பாவிப்பதில்லை; எப்படியாவது நீ என் கண் வட்டத்திலேயிருப்பது தான் எனக்கு அபிமதம்;  பசு மேய்க்க வென்று கானகமே சென்றால் அங்கு அசுரர்கள் தலைப்பெய்யில் என்னாகுமோவென்கிற அச்சம் அபர்ஹாரியமாயிருக்கையாலே அந்தப் போக்கு ஸஹிக்கத் தக்கதன்று; என் கண் வட்டத்திலேயே யிருந்து நீ யாரோடு கலந்து பழகினாலும் அதில் விசாரமற்றிருக்கக் கடவேன் என்றாளாயிற்று.

English Translation

O, My heart sinks! Pray do not go, what if Asuras fell upon you? Wetness and desire swell inside me for union, O Krishna, do not slip away! Displaying your bewitching lotus eyes, lips and hands and yellow robes, pray enjoy sweet union with these other young cowherd-girls of shrivelled hips also!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain