nalaeram_logo.jpg
(3918)

அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய் ஆழியங் கண்ணா! உன் கோலப் பாதம்

பிடித்தது நடுவுனக் கரிவை மாரும் பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்

வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா  மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே

வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் ளுக்கே.

பதவுரை

ஆழி அம் கணணா

-

அடல் போன்று விடாய் தீர்க்க வல்ல அழகிய திருக்கண்கடிளயுடிடயவனே!

எம் பெண்மை ஆற்றோம்

-

( உன் பிரிவில்) எங்களுடைய பெண்மை கொண்டு ஆறியிருக்கமாட்டோம்;

அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்

-

அடிச்சியோமான எங்கள் தலைமீது உன் அணி மிகு தாமரைக்கையை வைத்தருள வேணும்;

அடி தட கண் இணை நீரும் நில்லா

-

கூர்மையாய்ப் பெருத்திருத்துள்ள கண்களின் நீரானது தகைவு பட்டு நிற்கிறதில்லை;

நடுவு

-

நீ போகிற காரியத்தின் நடுவே

மனமும் நில்லா

-

நெஞ்சும் ஒரு நிலையில் நிற்கிறதில்லை;

அது தன்னாலே

-

ஆகையினாலே

எமக்கு

-

கணப்பொழுதும் பிரிவாற்றகிட்லலாத எங்களுக்கு,

உன் கோலம் பாதம் அது பிடித்து    உனது அழகிய திருவடிகளைப் பிடித்துநின் பசு நிரை மேய்க்க போக்கு

-

நி பசு மேய்க்கப் போவதானது

வெடிப்பு

-

பரிதாபகரம்;

உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க

-

உனக்கு அப்மதைகளாயிருக்கும் பெண்களோ பல்லாயிரவர், அது எப்படியாவது கிடக்கட்டும்;

அழல் மெழுகில் ளுக்குவேம்

-

நெருப்பில் மெழுகு போலே உருகி வேகின்றது

எமது உயிர்

-

எங்கள் ஆத்மாவானது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * * ... கண்ணா! நீ போமிடமெங்கும் உனக்கொரு குறையுல்லை கிடாய்; உனக்குக் காதலிமார்கள் எங்குமுளர்; எங்களையொழியவும் உனக்குச் செல்லுமாபோலே உன்னை யொழியவும் எங்களுக்குச் செல்லுமாகில் நாங்கள் வருந்த வேண்டாவே; நாங்கள் உன்னைப் பிரிந்து தாக்கமாட்டாமையன்றோ கதறுகிறோம்; உன் போக்கு எங்களுக்கு ஸஹ்யமன்று காண் என்கிறாள். “ ஆழியங்கண்ணா! உன் கோலப்பாதம் அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்’’ என்று முதலடியை அந்நவயித்தால், உனது அழகிய திருவடிகளை அடிச்சியோமான எங்கள் தலை மீது வைத்தருள வேணும் என்று பொருள்படும்; இங்ஙனே அந்வயித்துப் பொருளுரைத்தார் பன்னீராயிரவுரைகாரர். ஆறாயிரப்படி முதலான மற்ற வியாக்கியானங்களிலெல்லாம் “ அடிச்சியோந் தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணா’’ என்னுதளவிம் ஒரு வாக்கியமாக்கி, “உன் கோலப்பாதம்’’ என்பதை மேலடியோடே கூட்டியுரைத்தல் உள்ளது. கீழ்ப்பாட்டின் முடிவில் “ அணிமிகு தாமரைக்கையையந்தோ அடிச்சியோந் தலைமிசை நீயணியாய்’’ என்றிருக்கையாலே அவ்வணிமிகு தாமரைக்கையையே இங்கும் வருவித்துக் கொண்டு உரைசெய்தல் அழகியது. “ உன்னுடைய அழகிய திருக்கைகளை அடியோங்களுடைய தலையிலே வைத்தருளித்திருக்கண்களாலே குளிரப்பார்த்தருளாயென்று பின்னையுமிங்ஙனே சொல்லுமளவில்’’ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். “ கடல் போலேயிருக்கிற அழகிய கண்களாலே என்னைக் குளிர நோக்கி என் தலைமேலே கையை வைத்தருள வேணும்’’ என்பது ஒன்பதினாயிரப்பபடியருளிச் செயல். மற்றபடிகளிலுமிங்ஙனேயுள்ளது.

உன் கோலப் பாதமது பிடித்து நடுவு உனக்கு அரிவையரும் பலர் ... நீ போனவிடத்திலே உன் திருவடிகளைப் பிடிப்பாராய் உனக்கு அபிமதைகளாவார் பலருண்டு காண்  என்றபடி. நடுவு என்றது... நீ போகிற காரியமொழிய நடுவே என்றபடி. “ ஆழியங்கண்ணா அடிச்சியோந்தலைமிசை நீயணியாய்’’ என்றவாறே, “ உங்கள் கையாலே ஸ்பரிசிக்க வேணுமென்றன்றோ நானிருப்பது; நான் போவதென்பதுண்டோ? போனால் தான் உங்களையொழிய வேறேயும் சிலருண்டோவெனக்கு‘’ என்று கண்ணபிரான் கூற, அதற்கு மறுமொழி கூறுவது உன்கோலப்பாத மென்று தொடங்கி; பிரானே! உன் செய்திகளறியோமோ நாங்கள்; எங்களு’கோ நீ சொல்லுவது? நீ போமிடமெங்கும் உன் திருவடியைப பற்றியிருப்பார் ஒருவர்ருவரோ? உனக்குப் போனவிடமெங்கும் பெரிய திருநாளன்றோ என்கிறார்கள்.

அரிவையர்.... “ பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேர்ளம் பெண்’’ என்ற தமிழர் சங்கேதத்தின்படி ’ அரிவை என்பது ஒரு பருவத்திற் பெண்ணுக்கு வாசகம்; பொதுவாக மாதர்க்கும் வாசகம். “ தங்கள் பருவத்தாலே துவக்கவல்லவர்’’ என்பது ஈடு.

அது நிற்க எம்பெண்மை ஆற்றோம்.... போனவடமெங்கும் உனக்கு’ காதலிமாருளரோ இலரோ, அது கிடக்கட்டும்; அதைப்பற்றி எங்களு’கென்ன? பெண் பிறந்த நாங்கள் உன்னைப் பிரிந்து ஆற்றமாட்டோம் என்றவாறு.

ஆற்றமாட்டாமல் என்ன செய்வீர்களென்ன; பிரிவில் ஸம்பவிக்கக்கூடிய நிலைமையை மூன்றாமடி பேசுகிறது. எங்களை பார்க்கமாட்டாயோ? ஜீவிப்பாருடைய லக்ஷணமுண்டோ எங்களுடம்பில்? நீ பரமபோக்யமென்று கொண்டாடுமெங்கள் கண்ணில் நீர் மாறுகிறதில்லை; தைரியத்தோடிருப்பதற்கு மனமும் வசப்பட்டிருப்பதில்லை; ஆகவே, நன் பசு நிரை மேய்க்கப் போக்கு வெடிப்பு  பசு மேய்க்கப் போகிற போக்கு மிக்க பரிதாபம்; எங்களுடைய பிராணனானது நெருப்புலிட்ட மெழுகு போல சிதிலமாகா நின்றது; ஆகவே நீ பசு மேய்க்கப் போகவொண்ணாது.

மெழுகில்... மெழுகு போலே, மெழுகிலுங் காட்டில் என்று இரண்டுவகைப் பொருளுமேற்கும்

English Translation

O Krishna, give me quick your jewel hand! Alas, my femininity car not bear! In the midst of that act, other damsels with grab your feet!  Alas, your grazing cows is a shattering blow that dries my soul.  Tears do not stop from these eyes, my heart does not stop too.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain