nalaeram_logo.jpg
(3880)

மாலைநண்ணித் தொழுதெழுமினோவினைகெட

காலைமலை கமலமலரிட்டுநீர்

வேலைமோதும்மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து

ஆலின்மேலாலமர்ந்தான் அடியிணைகளே.

பதவுரை

வேலை மோதும் மதில் சூழ்

கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட

திருக்கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும்

ஆலின் மேல்

ஜலத்தின் மீது

ஆல் அமர்ந்தான்

ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான

மாலை

ஸர்வேச்வரனை

கண்ணி

கிட்டி

அடி இணைகள்

அவனது உபயபாதங்களையும்

காலை மாலை

இரவும் பகலும்

கமலம் மலர் இட்டு

தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து

நீர்

(அன்பர்களே!)  நீங்கள்

வினை கெட

(உங்களுடைய) பாவம் தொலையும்படி

தொழுது எழுமின்

வணங்கி உஜ்ஜீவியுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.  மாலை நண்ணி யென்றதற்கு இரண்டுபடியாகப் பொருளருளிச் செய்வர்;  மாலென்று திருமாலைச் சொன்னபடியாய் அப்பெருமானை கிட்டியாச்ரயித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கள் என்றும் ;  மால் என்று அன்புக்குப்பேராய், அன்பையுற்று–பக்தியுக்தராகி என்றும், வினைகெட  என்றதற்கும் இருவகைப் பொருள்; பகவத்ப்ராப்தி விரோதி வர்க்கமெல்லாம் கெடும்படி யென்றும், கீழ் மல்லிகைகமழ் தென்றலில் நான்பட்ட கிலேசம் உங்களுக்கும் நேராதபடி யென்றும், காலை மாலை கமலமலரிட்டுத் தொழுதெழுமின்=காலை யொருமுறையும் மாலையொரு முறையும் தொழுதெழுமின் என்கிறதன்று;  பகலுமிரவும் என்றபடி. ஆச்ரபணத்திற்குக் கால நியதியில்லை யென்கை.  கமல மலரிட்டு என்று ஒரு புஷ்பவிசேஷத்தை நிர்ப்பந்திக்கிறபடியன்று;  அவனுக்கு ஆகாத புஷ்பமில்லை. "கள்ளார் துழாயும் கணவலரும் கூபினையும் முள்ளார் முவரியும் ஆம்பலுமுன் கண்டக்கால் புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, உள்ளாதாருள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே" என்ற திருமங்கையார் பாசுரம் இங்கே அநுஸந்திக்கவுரியது. "எண்டிசையுமுள்ள பூக்கொண்டு" என்றாரே இவ்வாழ்வார்தாமே.  ஆக, கமலமலரென்றவிது அல்லாத புஷ்பங்களுக்கும் பலசூண மென்றதாயிற்று.

வேலை மோதும் மதிள்சூழ் திருக்கண்ணபுரம்= திருக்கண்ணபுரத்துத் திருமதிளிலே கடலலை மோதுவதாகச் சொல்லுகிறவிது இப்போது கண்டதில்லையாகிலும் முற்காலத்திருந்திருக்கக் கூடும்; நாளடைவில் ஸமுத்ரம் ஒதுங்கிப் போயிருக்கக் கூடும் என்பர் பெரியார் "ஸமுத்ரம் அணித்தாகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள் மதினாலே சூழப்பட்டிருந்துள்ள திருக்கண்ணபுரத்திலே" என்பது ஈடு.   "கலங்கல் முந்நீர்க்கண்ணபுரம்" என்றார் திருமங்கையாழ்வாரும்.

English Translation

End your despair, rise and worship the Lord, offering lotus flowers at his feet morning and evening; the Lord who slept on a fig leaf in the deluge, lives in Tirukkannapuram washed by the sea

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain