(3878)

மாலையும் வந்தது மாயன் வாரான் மாமணிபுலம்பவல்லேறணைந்த

கோலநன்னாகுகளுகளுமாலோ கொடியன குழல்களும்குழறுமாலோ

வமலொளிவளர்முல்லை கருமு கைகள் மல்லிகை யலம்பிவண்டாலுமாலோ

வேலையும் விசும்பில்விண்டலறுமாலோ என் சொல்லியுய்வனிங்கவனைலிட்டே.

 

பதவுரை

மாலையும் வந்தது மாயன் வாரான்

மா மணி புலம்ப

பெரிய மணிகள் ஒலிக்கும் படி

வல் ஏறு அணைந்த

வலிய ரிஷபங்களோடு சேர்ந்த

கோலம் நல் நாகுகள் உகளும் ஆல் ஓ

அழகிய பசுக்கள் களித்துத் திரிகின்றன வந்தோ!

குழல்களும்

புல்லாங்குழல்களும்

கொடியன

கொடுமை செய்வனவாகி

குழறும்

இனிய இசையைச் செய்கின்றன

கண்டு

வண்டுகளானவை

வால் ஒளி

வெளுத்த வொளியை யுடைத்தான

வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி

வளர் முல்லை, கருமுகைப்பூ மல்லிகைப்பூ ஆகிய இவற்றிலே படிந்து

ஆலும் ஆலோ

முரல்கின்றனவந்தோ

வேலையும்

கடலோதமும்

விசும்பில்விண்டு

ஆகாசத்திலே அளாவி

அலறும்

கோஷிக்கின்றது

இங்கு

இந்நிலைமையில்

அவனை விட்டு

அப்பெருமானைப் பிரிந்து

என் சொல்லி உய்வன்

எங்ஙனம் பிழைப்பேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– வருவதாகக் குறித்துப் போனகாலம் வந்தது, அவன்றான் வருகிறிலன் மாலைவாய்த் தன்னுடைய நாவொழியாதாடுந் தனிமணியின் இன்னிசை யோசையும் வந்தென் செவிதனக்கே, கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நெடிதாகும். என்னிதனைக் காக்குமா சொல்வீர் (பெரிய திருமடல்) என்கிறபடியே மாட்டின் கழுத்து மணியோசையானது விரஹிகளுக்கு உத்தீபகமாகையாலே அதற்கு நோவுடுகிறபடி சொல்லுகிறது. ஏறுகளும் வாகுகளும் கலந்து பரிமாறிக் கோலாஹலங்கள் வெய்யுமதுவும் உத்தீபகமாம்.

கோடியன குழல்களும் குழறுமாலோ=கீழே 'அவனுடைத் தீங்குழல்' என்று ஒருமையாகச் சொல்லிற்று இங்கே  'குழல்களும்' என்று பன்மையாகச் சொல்லுகிறது ; இதன் கருத்தை ஆறாயிரப்படியில் பிள்ளான் விலரித்தருளாகிறார்– "வண்டுவரைப் பெருமாளுடைய திருத்தோழமைரர் குழல்களை யூதிக் கொண்டு வந்து புகுராநின்றனர்" என்று, இதற்கு மேலே வண்டுகள் பலவப் பூக்களிலும் படிந்து முரல்கின்றதுவும் உத்தீபகம், கடலலை யோசையும் கர்ணகடோரம்.  இப்படியான பாதகவர்க்கங் களினிடையே அவனுடைய பிரிவை எங்ஙனே யாற்றுலேனென்றலாயிற்று.

 

English Translation

Evening has come, but no my Lord, now how can I live? Oh, alas!  Cow bells are jinging, flute melodies are floating in the air, bumble bees have drunk deep from the Mullai, Jasmine and Karumugai flowers, The ocean rents the air with its roaring waves, alas, alas!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain