(3876)

புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ பொங்கிளவாடை புன்செக்கராலோ

அதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் கண்ணனிற்கொடி தினியதனிலும்பர்

மதுமணமல்லிகைமந்தக்கோவை  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து

அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே யூதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான்.

 

பதவுரை

பொங்கு இன வாடை

என்னை நலிய நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடைக் காற்றானது

புது மணம் முகந்து கொண்டு ஏறியும் ஆல் ஓ

புதிய பரிமளத்தை முகந்துகொண்டு வீசாநின்றதந்தோ

புன் செக்கர் ஆல் ஓ

புல்லிய செக்கர் வானமும் வந்து நலியா நின்றது

அது மணந்து அகன்ற

அப்படி கலந்து பிரிந்த

நம் கண்ணன்

நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம்

கண்ணனில்

அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது

இனி அதனில்

இன்னமும் அதுக்குமேலே உம்பர்

மது மணம் மல்லிகை

மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய

மந்தம் கோவை

மெல்லிய ஸரமென்ன

வண் பசும் சாந்தினில்

அழகிய குளிர்ந்த சந்த மென்ன இவற்றிலுங்காட்டில்

பஞ்சமம் வைத்து

விலஷணமான ராகத்தை யிட்டு

அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும்

வாசாமகோரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி நல்லருள் செய்யப்பெற்ற ஆய்ச்சிகளுக்கே யூதுகிற

அத்தீம்குழற்கே

அல்லினிய குழலோசைக்கே

நான் உய்யேன்

நான் உயிரைப் பறிகொடப்பவளாயிராநின்றேல்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– இங்ஙனே பொங்கிளவாடையானது புது மணத்தை முகந்து கொண்டு எறியா நிற்கச்செய்தே அதன்மேலே புன் செக்கர் வந்து நலியாநின்றது;  அதன்மேலே, சொல்ல முடியாதபடியாக என்னுடனே கலந்து அகன்ற கண்ணனுடைய அக்கலவி நினைவுக்கு வந்து அவன்றன்னிலும் கொடிதாய் நின்று என்னை யீராநின்றது?  இனி அதுக்குமேலே மதுமணை மல்லிகை மாலையும் வண்பசுந்சாந்தும் வந்து பாதிக்கின்ற.  அதன்மேலே, நம்மோடே இங்ஙனே குதவை கோத்துக் கலந்து பரிமாறுகைக்குத் தன் பக்கலிலே நான் வருகைக்காக ஆராய்ச்சியரான நமக்கே கேட்கும்படி பஞ்சமராகத்தை வைத்து ஊதுகின்ற அத்தீங்குழ ஆராச்சியரான நமக்கே கேட்கும்படி பஞ்சமராகத்தை வைத்து ஊதுகின்ற அத்தீங்குழலோசை யொன்றே நின்று என்னை முடிக்கினறது அந்தோ!  என் செய்வேனென்கிறாள்.

இரண்டாமடியிலும் ஈற்றடியிலும் "அதுமணந்து" என்றது விலக்ஷணப்ரேயகம்;  'அது அது' என்னும்படியான கல்வியைச் செய்து–வாசாமகோசரமாக ஸம்ச்லேஷித்து என்றபடி.

 

English Translation

The cool fragrant breeze, and the fading red clouds are more wicked than that Krishna who played tricks on me and left. Now the sweet Panchama he pays on his flute for the Gopis in his favour with honey-jasmine garlands and cool Sandal paste, is more than I can bear

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain