(3875)

ஆருக்கென் சொல்லுகேனன்னைமீர்காள் ஆருயிரளவன்றிக் கூர்தண்வாடை

காரோக்குமேனி நங்கண்ணன் கள்வம் கவர்ந்தவத்தனி நெஞ்சமவன்கணஃதே

சீருற்றவகில்புகையாழ்நரம்பு பஞ்சமம் தண்பசும்சாந்தணைந்து

போருற்றவாடைதண் மல்லிகைப்பூப் புதுமணமுகந்து கொண்டேறியுமாலோ.

 

பதவுரை

கார் ஓக்கும் மேனி

காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையனான

நம் கண்ணன்

நமது கண்ணபிரான்

கள்வம்

தனது கள்ளக் செயல்களினால்

அவர்ந்த

அபஹரித்துக் கொண்டு போன

அத் தனி நெஞ்சம்

நம்மை விட்டுத் தனியேயான நெஞ்சானது

அவன் கணஃது

அவன் பக்கலிலே யாயிற்று

சீ உற்ற அகில் புகை

பரிமளச் செல்வம்மிக்க அகிற்புகையையும்

யாழ் நரம்பு

யாழின் நரம்பொலியையும்

பஞ்சமம்

பஞ்சமராகத்தையும்

தண் பகஞ்சார்ந்து

குளிர்ந்த சந்தனத்தையும்

அணைந்து

கூட்டிக் கொண்டு

போர் உற்றவாடை

போர் வுரியத் தலைப்பட்ட வாடையானது

தண் மல்லிகை பூ

குளிர்நத மல்லிகைப்பூவினுடைய

புது மணம் முகந்து கொண்டு

செவ்விப் பரிமளத்தை முகந்து கொண்டு

எறியும் ஆல் ஓ

வீசாநின்றதந்தோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– கீழ்ச்சொன்ன பதார்த்தங்களெல்லரீம் திரளவந்து நண்பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள்.  ஆருக்கு என் சொல்லுகேன்? = என்னைப்போலே நீங்கள் நெஞ்சிழந்தவர்களு மல்லீர்;  வாடை முதலான போக்ய பதார்த்தங்களைத் தேடிப்பிடித்து அவைகொண்டு உகப்பவர்களுமாயிருக்கின்றீர்கள்;  இப்படிப்பட்டவுங்களுக்கா நான் என்னிலையைச் சொல்லுவது;  என்படி.  இக்கூர்தண்வாடை ஆருயிரளவன்று=மிகைத்துக் குளிர்ந்து வீசுகின்ற வாடையானது நம்முயிரைக் கொண்டு போமளவன்று என்கிறவிதனால், சித்வதஞ்செய்யப் பார்க்கின்ற தென்றபடி,.   சிரமமின்றி உயிரைக் கொண்டு போனால் நல்லதே;  அப்படி கொண்டு போமதன்று;  உயிரைக் கொள்ளை கொள்ளாது விட்டிட்டு ஹிம்ஸிக்க நினைத்திராநின்றது போலுமென்றவாறு "ஆருக்கென் சொல்லுகேன்" என்றவிடத்து– "வடுகர்க்குத் தமிழர் வார்த்தை சொல்லுமாபோலே" என்பது ஈடு.  நெஞ்சம் கண்ணபிரானுடைய கள்வப்பணி மொழிகளிலே யீடுபட்டடொழிந்தது.  பின்னடிகளில், மற்றுமுள்ள பாதகப்பொருள்கள் பேசப்பட்டன.

 

English Translation

O Ladies! To whom can I say this? Alas, my heart remains with the thief! The overpowering cool breeze softly kills the soul, armed with the fragrance of bright incense, cool sandal paste, and fresh jasmine flowers,  it comes blowing over me, with the strains of Panchama on the yar-harp

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain