(3871)

இனியிருதென்னுயிர்காக்குமாறென் இணைமுலைநமுக நுண்ணிடைநுடங்க

துனியிருங்கலவிசெய்தாகந்தோய்ந்து துறந்தெம்மையிட்டகல் கண்ணன்கள்வன்

தனியிளஞ்சிங்கமெம்மாயன்வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்

பனியிருங்குழல்களும்நான்குதோளும் பாலியேன் மனத்தேநின்றீருமாலோ.

 

பதவுரை

இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்

இனி என்னுயிரைக் காத்துக் கொள்ளும்வரை யில்லை

இணை முலை சமூக

முலைகள் குழையும்படியாகவும்

நுண் இடை அடங்க

நுட்பமாக இடை தளரும்படியாகவும்

துளி இரு கலவி செய்து

துக்கரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி

ஆகம் தோய்ந்து

என் வடிவிலே கலந்து புஜித்து

எம்மை துறந்து இட்டு அகல்கள்வன்

எம்மைக் கைவிட்டுப் பொகட்டுப் பிரிந்துபோன கள்வனாய்

தனி இளசிங்கம்

ஒப்பற்ற சிங்கக்குட்டியாய்

எம்மாயன் கண்ணன்

விலஷணமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ணபிரான்

வாரான்

வந்து சேர்கின்றிலன்

தாமரை கண்ணும்

(அப்பெருமானது) தாமரை போன்ற திருக்கண்களும்

செம் வாயும்

சிவந்த திருப்பவளமும்

நீலம் பனி இரு குழல்களும்

கறுத்துக் குளிர்ந்து பரந்த திருக்குழல்களும்

நான்கு தோளும்

நான்கு திருத்தோள்களும்

பாவியேன் மனத்தே நின்று நரும் ஆல் ஓ

பாலியேனுடைய மனத்திலே ஒருபடிப்பட நின்று ஈலியா நின்றன ஐயோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– தென்றல் வாடை முதலான வெளிப்பட்ட பொருள்கள் பாதகமாகை மாத்திர மன்றியே அவனுடைய திவ்யாவயங்களும் உள்ளே தோன்றி நலியாநின்றனவே யென்கிறான்.  இனி யிருந்து என்னுயிர் காக்குமாறென்?=அவனுடைய வடிவழகுதானே உள்ளே நின்று நவியாநின்றால் இனி உயிரைக் காக்க விரகுண்டோ? இப்போது வராமல் உபேக்ஷிக்குமவன் முன்பு அப்படியெல்லாம் ஸம்ச்லேஷிக்க வேணுமோ? எப்படி ஸம்ச்லேஷித்தான்ன, அது சொல்லுகிறது இணைமுலைநமுக வென்று தொடங்கி, முலைகள் இரண்டும் குழையவும் நுண்ணிடை தளரவும் பஹுமுகமான ஸங்கத்தைப் பண்ணி என் வடிவிலே அவகாஹித்துநுபவித்து, ஸம்ச்லேஷம் விச்லேஷாந்தமாயல்லதிராமையாலே உடனே பிரிந்து சென்ற கள்வன் மீண்டுவருகின்றலன்.  அன்னவனை நான் மறந்து பிழைக்கலாமே  அதற்கு மிடமில்லாதபடி அவனது தாமரைத் தடங்கண்களும் செங்கனிவாயும் மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழுமழகும் தோளழுதும் என்னெஞ்சை விட்டகலாது நலிகின்றனவே!  என்றாளாயிற்று.

 

English Translation

O, the wicked rogue, that youthful lion, our Lord does not come, alas!  He enjoyed out supple breasts and swaying hips in consummate union, then cast us aside and left, how now shall I hold on to my life?  Alas!  His lotus eyes, red lips and dark tresses remain to torment my sinful heart

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain