(3870)

புகலிடமறிகிலம்தமியமாலோ புலம்புறுமணிதென்றலாம்பலாலோ

பகலடுமாலைவண்சாந்தமாலோ பஞ்சமம் முல்லை தண்வாடையாலோ

அகலிடம்படைத்திடந்துண்டுமிழ்ந்தளர்ந்து எங்குமளிக்கின்றவாயன்மாயோன்

இகலிடத்தசுரர்கள்கூற்றம் வாரான் இனியிருந்தென்னுயிர் காக்குமாறென்.

 

பதவுரை

தமியம் புகலிடம் அறிகிலம் ஆல் ஓ

தனிப்பட்ட நாம் ஒதுங்கியுய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ

புலம்புறு மணி

(சேக்களின் கழுத்தில்) ஒலிக்கின்ற மணியும்

தென்றல்

தென்றற் காற்றும்

ஆம்பல்

இலைக்குழலும்

ஆல் ஓ

ஈர்கின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே

பகல் அடு மாலை

பசுரபோதை முடித்து வந்து தோற்றுகின்ற மாலைப்போதும்

வண் சாந்தம்

அழகிய சந்தனமும்

பஞ்சமம்

பஞ்சமராசமும்

முல்லை

முல்லை மாலையும்

தண் வாடை

குளிர்ந்த வாடைக்காற்றும்

ஆல் ஓ

நலிகின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே

அகல் இடம்

பரந்த பூமண்டலத்தை

படைத்து

உண்டாக்கியும்

இடந்து உண்டு உமிழிந்து அளந்து

(ஸமய விசேஷங்களில்) இடத்தல் உண்ணுதல் உமிழ்தல் அளத்தல் ஆகிய காரியங்களைச் செய்தும்

எங்கும் அளிக்கின்ற

எல்லாப் படிகளாலும் சக்ஷணத்தைச் செய்து போருகின்றவனாய்

இகல் இடத்து அசுரர்கள் கூற்றம்

யுத்த பூமியில் அசுரர்களுக்கு மிருத்யுவாய்

மாயோன் ஆயன்

ஆச்சர்யபூதனான கோபாலகிருஷ்ணன்

வாரான்

(இத்துன்பங்களைத் தொலைக்க) வருகின்றவன்

இனி

இப்படியான பின்பு

இருந்து

ஸத்தையோடேயிருந்து

என் உயிர் காக்கும் ஆறு என்

என்னுயிரை ரக்ஷித்துக் கொள்ளும் விதம் என்னோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– பல படிகளாலும் ரக்ஷிக்குமெம்பெருமான் வருகின்றிலன்;  பாதக பதார்த்தங்கள் தனித்னியே யன்றியே திரள்திரளாகவும் தோன்றி நலிகின்றன; தப்பிப் பிழைக்கும் வழி தெரிய வில்லையே யென்கிறாள்.  "பகலிடமறிகிலம் தமியமாலோ" என்கிறது–கீழ்ப்பாட்டிற் சொன்ன கஷ்டங்களுக்காகவுமாம்: இப்பாட்டிற் சொல்லப்போகிற கஷ்டங்களுக்காகவுமாம்.  புலம்புறுமணி=நாகுகளைத் தொடருகின்ற கேக்களின் கழுத்தில் கட்டின மணியினோசை விரஹிகளுக்கு உத்தீபகமென்க.

ஆம்பல் என்று ஊதுகுழலுக்குப்பெயர்;  அதன் ஓசையைச் சொன்னபடி யிங்கு.  பகலடுமாலை–ஆச்வாஸகரமான பகற்போதை முடித்துக் கொண்டு வந்து தோற்றின மாலைப்போது.  பஞ்சமம்–* பிக: கூஜதி பஞ்சமம்" என்னும்படியான பண். முல்லை யென்றி யாழையுஞ் சொல்லும், முல்லைப் பூவையுஞ் சொல்லும் ;  விரஹிகளுக்கு இரண்டும் உத்தீபகமே.  இவை இன்னது செய்கின்றன வென்று சொல்லாமல் விட்டது, 'புலி புலி' என்னுமாபோலே ; இவற்றின் பேரைச் சொன்னது தானே இவை செய்யுங் கொடுமையைச் சொன்னபடியாம்.  இவையெல்லாம் முன்பு அனுகூலங்களாயிருந்தவையே;  இப்போது பிரதிகூலமாவதற்குக் காரணஞ் சொல்லுவன பின்னடிகள்.  படைத்தல் இடத்தல் உண்டுமிழ்தல் அளத்தல் முதலிய காரியங்களைச் செய்து பலபடியாலும் ரக்ஷிக்கையே தொழிலான ஸர்வேச்வரன் வருகின்றிலன்;  இனி ப்ராணதாரணம்பண்ணும் வகையறியேன் என்கிறளாயிற்று.

 

English Translation

Alas this forlorn self has no place to go, to escape from the breeze and the reed-flute,  the evening Sun, the Sandal fragrance, the Mullai flowers and the Panchama Pann.  The Lord who made, lifted and measured the Earth struck death to lifted, and measured the Earth struck death to the Asuras, Alas, Gopala, my protector does not come; how now shall I hold on to my life

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain