(3869)

மல்லிகை கமழ்தென்ற லீருமாலோ வண்குறிஞ்சி யிசைத வருமாலோ

செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ

அல்லி யந்தாமரைக் கண்ண னெம்மான் ஆயர்க ளேரியே றெம்மாயோன்

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிட மறிகிலம் தமியமாலோ.

 

பதவுரை

மல்லிகை கமழ் தென்றல்

மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலானது

ஈரும் ஆல் ஓ

(வாளாவறுக்குமாபோலே) சின்றது ஐயோ

வண் குறிஞ்சி இசை

செவிக்கினிய குறிஞ்சிப் பண்ணிகையானது

செல்கதிர் மாலையும்

அஸ்தமிக்குமளவிலே யுள்ள ஸீர்யனையுடைய மாலைப் பொழுதும்

மயக்கும் ஆல் ஓ

மோஹிக்கச் செய்யா நின்றது ஐயோ

செக்கர் கல் மேகங்கள்

செந்நிறங்கொண்டு அழகிய மேகங்களானவை

சிதைக்கும் ஆல் ஓ

சரீரத்தைச் செதுக்கா நின்றது ஐயோ

அல்லி அம் தாமரை கண்ணன்

விகஸித்தழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய்

எம்மான்

ஸர்வஸ்வாமியாய்

ஆயர்கள் ஏறு

இடையர்களுள் செருக்கை யுடையனாய்

அரி ஏறு

ஹிம்ஹச்ரேஷ்டம் போன்றவனாய்

எம் மாயோன்

எம்மோடு நீர்மைக் குணத்தைக் காட்டி கலந்து பரிமாறினவனான கண்ணபிரான்

புல்லிய

முன்பு அணைத்த

முலைகளும் தோளும் கொண்டு

முலைகளையும் தோள்களையுங் கொண்டு

தமியம் புகல் இடம் அறிகிலம் ஆல் ஓ

பிரிந்து வருந்திக்கிடக்கிற நாம் ஒதுங்கி உய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– மாலைப் பொழுதில் தென்றல் முதலான பதார்த்தங்கள் தனித்தனியே தனக்கு நலிவை விளைக்கும் படியைச் சொல்லிக் கதறுகிறாள் ஒரு ஆய்ச்சி. (அவளுடைய நிலைமைய யெய்திப் பேசுகிறார் ஆழ்வார்). மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ–தன்கொடு துணையின்றிக்கே யிருந்தாலும் தானே ஏகாகியாய் நின்று நவியக்கடதான தென்றல் மல்லிகை மலரின் பரிமளத்தையும் துணை கொண்டால் நலியும் விதம் சொல்லாகுமோ? கூடியிருக்குங் காலத்தில் துயத்தை விளைக்கு மென்னுமிடம் ப்ரஸித்தம்.  ஸ்ரீராமாயணத்தில் சிஷ்கிந்தா காண்டம் முதல் ஸர்க்கத்தில் பல ச்லோகங்கள் இத்திருவாய் மொழியிற் பாசுரங்களோடொக்கும்.  சில ச்லோகங்கள் காணீர்;– *யாரி ஸ்ம ரமணீயாநி தயா ஸஹ பவந்தி மே தாந்யே வாரமணீயாநி ஜீவதோ மே தயா விநா * ஸதா ஸுகமஹம் மந்யே யம் புரா ஸஹ ஸீ தயர், மாருதஸ் ஸ விநா ஸீதாம் சோகஸஞ்ஜநகோ மம

வண் குறிஞ்சியிசை தவரும்–குறிஞ்சி, மருள், காமரம், கந்தாரம் என்று பண்களுக்குப் பெயர்;  தோடி, ஸாவேரி, பைரவி, சங்கராபரணம் என்று ஸங்கீதப் புலவர்கள் ராகங்களுக்குப் பெயர் வழங்குமாபோலே வண்டு குயில் முதலானவற்றின் பண்கள் குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் முதலான சொற்களால் வழங்கப் படுவதைத் திவ்வியப் பிரபந்தங்களிற் காண்கிறோம். மல்லிகை கமழ் தென்றல் ஈர்ந்து பொகட்ட புண்ணின் மேலே வண்குறிஞ்சியிசை துளைத்துப் பொகடா நின்ற தென்கை.  தென்றல் மேலெழு நவியா நின்றது;  இசை செவிவழியே உள்ளே புகுந்து நலியா நின்றது.

செல்கதிர் மாலையும் மயக்கும்=பகற்போதாயிருந்தால் கண்ட வஸ்துக்களையும் பார்த்துக் கொண்டும் கண்டாரோடும் பேசிக் கொண்டும் ஒருவாறு போதைப்போக்கலாம்;  அதற்கு அவகாசமில்லாதபடி ஸுரியன் மறையும்படியான மாலைப் பொழுது வந்து மயக்கா நின்றது.  செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ=ஸந்த்யாராகத்தையும் சாமமான நிறத்தையு முடைய மேகங்கள் அவனுடைய அவயவ சோபைக்கும் வடிவுக்கும் ஸ்மாரகங்களாய்க் கொண்டு கொலைபுரியா நின்றன.  இப்படிப்பட்ட நிலைமையில் பண்டு அவனோடு ஸம்ச்லேஷித்த அவயவங்களைக் கொண்டு எங்ஙனே யாறியிருக்கும்படி?

 

English Translation

Alas, the jasmine-wafting breeze, the beautiful kurinji strains on the Yai, the setting Sun and the beautiful red clouds in the horizon all do kill me. The Lord of lotus eyes, our lion of the cowherd clan has forsaken us.  We know not where to go from here taking these breasts and arms that he enjoyed

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain