(3845)

வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று

ஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்

பாரித்து தானென்னை முற்றப்பருகினான்

காரொக்கும் காட்கரையப்பன்கடியனே.

 

பதவுரை

உன்னை நானில்

உன்னைக் காணப் பெறில்

வாரிக் கொண்டு விழுங்குவன் என்று

கபளீகரிப்பேனென்ற

ஆர்வு உற்ற

ஆசைகொண்ட

என்னை ஒழிய

என்னளவன்றியே

என்னில் முன்னம் பாரித்து

(இப்படி செய்யவேணுமென்று) எனக்கு முன்னமே மனோரதித்து

தான் என்னைமுற்ற பருகினான்

என்னை நிச்சேஷமாகக் கபளி கரித் தவனான

கார் ஒக்கும் காட்கரை அப்பன்

காளமேகம் போன்ற திருக்காட்கரையப்பன்

கடியன்

ஸ்வகார்யத்தில் பதற்ற முன்னவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப்பாட்டு உயிரானதென்னலாம்.  ஈச்வர லாபம் சேதநர்களுக்குப் புருஷார்த்தமா?  சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷாத்தமா? என்றொரு விசாரம் ஸம்ப்ரதாய ரஸிகர்கள் செய்வதுண்டு;  சேதநலாபந்தான் ஈச்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம். எம்பெருமான் ஸ்ருஷ்டியவதாரதிமுகத்தாலே க்ருஷி பண்ணுவதெல்லாம் ஒரு சேதகன் நமக்குக் கிடைப்பனாலென்கிற நப்பாசையினாலன்றோ.  கீதையிலே  *ஸ மஹாத்மா ஸீதுர்லப * என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகிற வார்த்தையன்றோ.  *வாஸீதேவஸ் ஸர்வ மென்றிருக்கிற மஹாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே ! என்றன்றோ சொல்லுகிறான்.  பாடுப்டடத் தேடிப்பாத்தும் கிடையாமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகிறதன்றோ.  எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் *அநாவ்ருத்தி ஸீத்ர பாஷ்யத்தில் (அதாவது ஸ்ரீபாஷ்த்தின் முடிவில்) *நச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா சதாசித் ஆவர்த்தயிஷ்யதி * என்பதில்  "ஜ்ஞாநிநம் லப்த்வா " என்கிற அற்புதமான ஸ்ரீஸூக்தியினால் இப்பரமாத்தத்தை ப்ரகாசிப் பித்தருளினார்.  இப்பரமாத்தந்தன்னை ஆழ்வார் ஸ்வாநுபவ முகத்தாலே இப்பாட்டில்தெளியவைத் தருளுகிறார்.

இப்பாட்டில் "என்னில் முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான் " என்றது ஸத்ஸம்ப்ரதாய ரஸிகர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை.  'உன்னைக்காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன் ' என்று தாம் ஆசைப்பட்டிருந்தாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மனோரதமே தலைக்கட்டப் பெற்றான். என்றருளிச் செய்தவிதனால் ஸ்வகத ஸ்வீகாரத்திலுங்காட்டில் பரகத ஸ்வீகாரமே வலிதென்றும், அதுதான் முற்பட்டதாயிருந்து கார்யகரமாகின்ற தேன்றும் சொவிற்றாயிற்று.

கீழ்ப்பாட்டுக்களில் "என்னுயிருண்ட மாயன் " என்றும்,  "என்னுயிர்தானுண்டான் "என்றும்,  "என்னைமுற்றவுந் தானுண்டான் " என்றும் எம்பெருமான் உண்டபடியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேக்ஷிதமாயிருக்குமே ;  தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப்பாட்டில் தானென்னை முற்றப் பருகினான் என்று இவருடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் அவன் அவனுடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் இவர்.

 

English Translation

I thought, "If ever I see him I will gobble him", but before I could, he deceived me and hastily drank my all.  My dark Lord of Tirukkatkarai is smart!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain