(3844)

ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது

பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயதோர்

காரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள்

சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே.

 

பதவுரை

பேர் இதழ் தாமரை கண்

பெரிய விதழை யுடைய தாமரை போன்ற திருக்கண்களையும்

கனி வாயது ஓர்

கனிபோந் சிவந்த வாயையுமுடைத்தா யிருப்பதொரு

சார் எழில் மேகம்

கறுத்தழகிய மேகம் போன்ற வாயையுடையவனாய்க் கொண்டு

தென்காட்கரை கோயில்கொள்

திருக்காட்கரையை உறைவிடமாகக் கொண்ட

சீர் எழில் நால் தட தோள்

அழகுமிக்க நான்கு திருத் தோள்களையுடையனாய்

தெயவம் வாரிக்கு

தெய்வங்களுக்குக் கடல் போன்வனான பெருமானுக்கு

எனது உயிர் பட்டது

என்னாத்மா பட்டபாடு

ஆர் உயிர் பட்டது

வேறு யாருடைய ஆத்மா பட்டது? (நான் பகவத் விஷயத்தில் பட்டபாடு ஒருவரும் படவில்லை யென்கை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– கீழ்ப்பாட்டில் "ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது" என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில்.  எனுயிர் பட்டது ஆருயிர் பட்டது?=நான் பட்ட பாட்டை நித்யஸுரிகளிலேதான் பட்டாருண்டோ? குணுநுபவனே யாத்ரையான நித்யஸுரிகளும் இப்பாடு பட்டிலரே.   "இங்கு எனதுயிர் பட்டது அங்கு ஆருயிர் பட்டது" என்று எம்பெருமானாரருளிச் செய்வாராம்.  ஆழ்வாருடைய உயிர்அழிந்தற்கு ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்; [பேரிதழ்த் தாமரைக்கண் கணிவாயதோர்] திருக்கண்களும் திருவதரமும் படுத்தினபாடு [காரெழில்மேகத் தென்காட்கரை கோயில் கொள்] வடிவுபடுத்தின பாடும் கோயில் படுத்தின பாடும் [சீரெழில் நாற்றடந்தோள்] கற்பகக் காவன நற்பல தோள்கள் படுத்தின பாடு.

தெய்வவாரி–எம்பெருமானுக்கு ஆழ்வாரிட்ட திருநாமங்களுள் இதுவுமொன்று; வாரி யென்னும் வட சொல் ஜலத்தைச் சொல்லுமதானாலும் ஜலநிதியான கடலைக் குறிக்குமிங்கு.  தைவங்கள் படுங் கடல்; தைவங்களுக்கு உத்பாதகன்றபடி.  "தெய்வவாரிக்கு எனதுயிர் பட்டது ஆருயிர் பட்டது" என்று அந்வயம்.

 

English Translation

My dark hued Lord at Tirukkatkarai has lotus eyes and coral lips, four arms and a godly radiance.  Which other soul does he torture like he does mine?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain