(3843)

கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்

நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்

காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு

ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.

 

பதவுரை

கோள் உண்டான் அன்றி வந்து

என்பக்கல் ஒருபகாரம் கொண்டல்லாமல் நிர்ஹேதுகமாக வந்து

என் உயிர் தான் உண்டான்

என்னாத்மாவை யநுபவித்தான் (அவ்வளவேயன்றியே)

நாள் நாளும் வந்து

நாள் தோறும் வந்து

என்னை முற்றவும் தான் உண்டான்

என்னைச் சிறிதும் சேவயொதபடி பூர்த்தியாக புஜித்தான்

கர்ணம் நீர் மேகம்

கறுத்து நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற வடிவையுடைய

தென்காட்கரை அப்பற்கு என்

திருக்காட்கனா யெம்பெருமானுக்கு

ஆள் பட்டது அன்றே

நான் அடிமைப் பட்டவத்தனையேயன்றோ

என் ஆருயிர் பட்டதே

என்னை இங்ஙனே படுத்த வேணுமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– எம்பெருமானை யநுபவிக்குமாழ்வார்க்கு "எப்பொழுதும் நாள் திங்களாண்டுழி யூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே" என்னும்படி, நித்யா பூர்வமாயிருக்கிறாப்போலே எம்பபெருமான்றனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் நித்யாபூர்மாயிருக்கும்படி சொல்லுகிறது இப்பாட்டில். நாள்தோறும் என்னை புஜியாநின்றாலும் பெறாப் பேறு பெற்றாப்போலே வந்து புஜியாநின்ற இப்பெருமானுடைய குணத்தை என்னென்பேன்!  என்கிறார்.  முதலடிக்கு மூன்று வகையாகப் பொருளருளிச் செய்வர்; [கோளுண்டானன்றி வந்து என்னுயிர் தானுண்டான்] (1) என்னிடத்தில் ஓர் உபகாரமுங் கொள்ளாமலே நிர்ஹேதுமாக என் ஆத்ம வஸ்துவை யநுபவித்தான். (2) இதற்கு முன்பு இப்படிப்பட்டதொரு சரக்குக் கொண்டறியாதவன்போல் என் பக்கலிலே அபிநிவேகங் கொண்டான் (3) என்னாலே தான் கொள்ளப்படா திருக்க, தான் என்னைக் கைக் கொண்டான்.  இம்மூன்றும் ஒன்றுக் கொன்று வாசியின்றியே மிகச் சிறக்கும். இவற்றுள் முதற்பொருளும் மூன்றாம் பொருளும் தாற்பரியத்தில் விசேஷ பேதமின்றி யிருந்தாலும் சப்தார்த்தம் கொள்ளும் வகையில் வாசி பெற்றிருக்கும்.

நாளுநாள் வந்து=ஒருநாள் புஜித்து 'இது நாம் புஜித்ததேயன்றோ' என்று பழமை தோன்றி அருசியோடிருப்பானல்லன்.   "அவனுடைய அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமிருக்கும்படி" என்பர் ; நம்பிள்ளை. என்னை முற்றவுந் தானுண்டான்=என்னை என்பது அஹமர்த்தமான ஆத்மவஸ்துவைத்தானே;  அது அணுபரிமாண மாயன்றோ விருப்பது;  முற்றவும் என்று சொல்லுவதற்கு விஷயமில்லையே யென்று சங்கித்துக் கொண்டு நம்பிள்ளையருளிச் செய்வது காணீர்– "அணுபரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அநுபவித்தானென்கிற விது தனக்கு ஏற்ற மாம்படி கௌரவியா நின்றான்" என்று.  இந் ஸ்ரீஸூக்திகளின் வரமதாற்பரிம் யாதெனில்; ஆழ்வாருடைய ஆத்மவஸ்து அணுவாயிருந்தாலுங்கூட அளவு கடந்த பாரிப்புக் கொண்ட ஸர்வேச்வரன் அநுபவிக்குமிடத்து இவ்வணுவஸ்துவையும் பெரியதாக்கிக் கொண்டு அநுபவிப்பதாக ஆழ்வாருடைய திருவுள்ளம் என்பதாம்.  இதற்கு ஒருதாஹரணம் காட்டலாம்; கண்ணபிரான் விதுரர் திரு மாளிக் கெழுந்தருளின போது விதுரர் கண்ணனுக்கு அன்ன மிட்டரென்பதைச் சொன்ன முனிவர் "விதுர: அந்நமுபாஹரத்" என்றார் ; அந்த அன்னத்தைக் கண்ணனமுது செய்ததைச் சொல்லுமிடத்து அந்த முனிவர்தானே "விதுராந்நாநி புபுஜே சசீநி குணவந்தி ச" என்றார்.  விதுரரிட்ட அன்னத்தை ஏகவசனத்தாலே சொல்லி, கண்ண அமுது செய்த அந்த அன்னத்தையே பஹீவாசகத்தாலே நிர்தேசித்திருப்பதில் ஒரு விசேஷார்த்தம் தோன்றுமே;  அதுவே யீண்டு நினைக்கத்தக்கது.

இப்படி யென்னை யநுபவிப்பவனான திருக்காட்கரையப்பனுக்கு, ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே–அடிமை புக்கதாக நினைத்திருப்தத்தனையே;  ஆத்மா படும்பாடு வாசாமகோசரம் என்றபடி.  எம்பெருமானோடு எதிரம்பு கோப்பவர்கள் உடம்மையிழப்பதோ, புண்பட்டதுக்கு மருந்து வைத்து ஆற்றுவதோ இத்தனையே செய்வது; உயிர் நோவுபடுவதென்பது அவர்களுக்கில்லை; இது ஆழ்வார்க்கே.  அம்பு படுத்தும் பாட்டுக்கும் திருக்குணம் படுத்தும் பாட்டுக்கும் நெடுவாசியுண்டே.

 

English Translation

He came not to take my service, but to eat my soul! Day by day, bit by bit, he eats my all.  My rain cloud Lord at Tirukkatkarai, -was he interested in service?  His attention was on my soul!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain