(3842)

காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்

வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும்

ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால்

கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே.

 

பதவுரை

ஆள் கொள்வான் ஒத்து

அடிமை கொள்வரைப் போலே (புகுந்து)

என் உயிர் உண்ட மாயனால்

என்னாத்மாவைக் கொள்ளை கொண்ட மாயப்பெருமானாலே

கோள் உண்டே

புஜித்துக் கொள்ளப்படச் செய் நேயும்

கோள் குறைபட்டது

போகம் மிச்சப்பட்டிருக்கிற தென்னலாம்படியிருக்கிற

என் ஆருயிர்

என்னாத்மாவானது

காட்கரை எத்தும்

அவனுறையுமிடமான திருகட்கரையைப் புகழா நின்றது.

அதனுள் கண்ணா என்னும்

அத்திருப்பதியிலே நிற்கிற கண்ணா வென்று அழையா நின்றது (அவ்வளவுமன்றிக்கே)

வேட்கை நோய் கூர

காதல் நோய் மிகப்பெற்று

நினைந்து கரைந்து உகும்

(அவனுடைய பரிமாற்றங்களை)நினைத்து உருகி சிதிலமாகா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார். காட்கரையேத்தும்–அவனைக் காட்டிலும் அவனிருக்குமூரிலே ஆசை மிகுந்த அவ்வூரையே யேத்தா நின்றது என்னாருயிர்.  ஊருக்கு அவனாலே யேற்றமாய், அவனுக்கு ஊராலே யேற்றமா யிருக்கையாலே ஊரையுஞ் சொல்லி அவனையுஞ் சொல்ல வேண்டி யிருத்தலால் அதனுள் கண்ணாவென்னும்–திருக்காட்கரைப் பெருமானே!  என்று அவ்வூரின் ஸம்பந்தத்தை விட்டு அவனையுமேத்தாநின்றது. பரமபதநாதனென்றால் ஏற்றமில்லையே;  அவ்விடத்திலும் இவ்விடத்தில் வாஸத்தாலே ஏற்றம் பெறுவோமென்று வந்து இங்கே நின்று ஏற்றம் பெற்றனனாதலால்.

வேட்கை நோய் கூர நினைந்து உகும். அவ்வூரையும் அவ்வூர்ப் பெருமானையும், நினைத்த மாத்திரத்திலேயே காதல் நோய் அதிகரிக்கும்;  அதனால் த்ரவீபாவமும் சைதில்யமும்ம விளையும்.  இப்படியெல்லாமாகைக்கு அடியேதென்னில்; பின்னடிகளால் அது சொல்லுகிறது. "கீழ் திருவருள் என்று மறைத்துச் சொன்னதை வெளியிடுகிறார்" என்பர் நம்பிள்ளை.  அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னை சூன்யமாக்கின ஆச்சர்ய பூதனாலே என்னாருயிர் கோளுண்டே கோள் குறைபட்டது–என்னாத்மா நிசேஷமாக புஜிக்கப்படா நிற்கச் செய்தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது.  இங்ஙனே சொல்லுகைக்குக் கருத்தென்? என்னில் ;  இன்னமுமிருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது சேஷமிருந்தாக வேண்டுமே;  அது கொண்டு சொல்லுகிறது.

 

English Translation

Worshipping my Krishna at Tirukkatkarai, my love-sickness grows; I think and then weep.  He came and took me lovingly into his service.  But my soul diminishes day by day, alas!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain