(3841)

என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்

அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது

புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்

என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.

 

பதவுரை

என் கண்ணன்

என் பக்கல் பிச்சேறின கண்ணனுடைய

கள்வம்

வஞ்சனைகளானவை

செம் ஆய நிற்கும்

செம்மையாகவே ஆர்ஜவமென்றே தோன்றா விந்கும்

அங்கண்ணன்

அவன் வியாமோஹத்தாலே மிகவும் சபலனாய்க் கொண்டு

உண்ட

பூஜிக்கப்பெற்ற

கோது

(அதனாலே) நிஸ்ஸாரமான

என் ஆர் உயிர் இது

இந்த என்னாத்மாவானது

புன்கண்மை எய்தி

தைன்யத்தையடைந்ததாகி

என் கண்ணன் என்று இரா பகல் புலம்பி

எனக்கு விதேயனானவனே யென்று இரவும் பகலும் கதறியழுது

அவன் காட்கரை ஏத்தும்

அவனுடைய திருக்காட்கரைப் பதியையே சொல்லா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– ஒருவனைக் கள்ளனென்றறிந்தால் அவனுடைய ஸஹவாஸத்தை விட்டுவிலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை யறிந்த நீர் அவனைவிட்டு அகல வேண்டாவோ னென்ன என் செய்வேன்? அவனைக் கண்டவாறே அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே யென்கிறார்.  என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்–என்னோடு கலக்கிறபோது எனக்கே அற்றுத் தீர்ந்தவனாகக் காணப்படுகின்ற அவனுடைய வஞ்சனங்களானவை எனக்கு ருஜீவாயே தோற்றுநின்றன.  ஒருநாள் அவன் களவிலே யகப்பட்டால் பின்னை மீளமாட்டேன்;  அவன் முகத்திலே விழித்தவாறே அவன் செய்யுமவையெல்லாம் மெய்யாகவே தோற்று மெனக்கு. "எனக்குச் செம்மாய் நிற்குமேன்றத்தை எனக்குச் சேமமாயிருக்கு மென்று ஒரு தமிழன் நிர்வஹித்தான்" என்பது ஈடு.  கீழ்ப்பாட்டின் முடிவு 'நங்கண்ணன் கள்வங்களே' என்றிருக்கையாலே இப்பாட்டின் தொடக்கமும் அந்தாதித் தொடைக்குச் சேர அப்படியே யிருக்க வேண்டாவோ வென்று சங்கித்து அதனால் குறையொன்றுமில்லை : பொருளிசை யந்தாதியியிருக்கும்–என்று ஒரு ஸமாதான மருளிச் செய்து, இரண்டிடங்களிலும் ஒரே பாடமாகவுமாம் என்றுமருளிச் செய்வர் நம்பிள்ளை.

என் ஆருயிர் அங்கண்ணனுண்ட கோது–இந்த என் ஆத்மாவானது வ்யாமோஹத்தினெல்லையிலே நின்ற அவனால் புஜிக்கப்பட்டு நிஸ்ஸாரமாயிற்று என்றபடி.  அங்கண்ணன் என்றதற்கு அதிசபலன் என்று பொருள். "அதிப்ரவணரை அங்கண்ணர் என்னக் கடவதிறே" என்றபர் நம்பிள்ளை.

இப்படி என்னாருயிர் கோதாய்ப்போனாலும் "உள்ளம் புகுந்து என்னை கைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்" என்று ஆண்டாளருளிச் செய்த கணக்கிலே பன்னையும் உயிர்க்குச் சிறிது ஸாரங்கொடுத்துப் பரிமாறத் தொடங்கவே, புன்கண்மையெய்தி–தைந்யத்தை யடைந்ததாயிற்று இவ்வாத்மா.   அதனாலே, என் கண்ணனென்று இராப்பகல் புலம்பி அவன் காட்கரை யேத்தும்–முன்பு எனக்கு விதேயனாயிருத்வனென்று சொல்லி இரவும் பகலும் கூப்பிட்டு அவனுறையுமிடமான திருக்காட்கரைத் திருப்பதியைக் கொண்டாடா நின்றது.  பசித்தவன் பழங்கணக்குப் பார்க்கிற ரீதிபோலும்.

 

English Translation

My Krishna's tricks appear to me as truths.  This chaff of my soul which he sucked and threw aside wakes up to reality, then weeps day and night, "My Krishna, my Krishna" and worships him at Tirukkatkarai

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain