(3840)

திருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து

உருவமுமாருயிரும் உடனேயுண்டான்

திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன்

கருவளர்மேனி என்கண்ணன்கள்வங்களே

 

பதவுரை

திரு அருள் செய்பவன் போல

என்னிடமிருந்து அடிமை கொள்ளு கையாகிற திருவருளைச் செய்பவன் போல அவிநயம் காட்டி

என் உன் புகுந்து

என் நெஞ்சிலே புகுந்து

உருவமும் ஆர் உயிரும்

உடலையு முயிரையும்

உடனே உண்டான்

ஹேய உபாதேய விபாக மில்லாதபடி ஏகரீதியாக அனுபவித்தான்

திரு வளர் சோலை

அழகு மிகுந்த சோலைகளையுடைய

தென் காட்கரை என் அப்பன்

கருவளர்மேனி

சாமநிறம் விஞ்சின திரு மேனியை யுடையவனாய்க் கொண்டு

என் கண்ணன்

எனக்கு விதேயனாயிருந்த அப்பெருமானுடைய

கள்வங்களே

வஞ்சனை யிருக்கிறபடி என்னே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– எம்பெருமான் என்னை யடிமை கொள்வான்போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புஜியா நின்றானே! இது என்ன வியாமோஹம்! என்று விபக்கிறார்.  திருவருள் செய்பவன்போல என்னுள் புகுந்து–அடிமை கொள்ளுகையையே திருவருள் செய்கையாக ஆழ்வார் திருவுள்ளம் பற்றியிருப்பது.  என்னிடத்தில் கைங்கர்ய வ்ருத்தி கொள்ளுகையாகிற திருவருளைச் செய்பவன்போல உள்ளே புகுந்து அருளைத்தான் செய்கை யன்றிக்கே தான் பெற்றானாயிரா நின்றான். *வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம் * என்று நான் பார்த்தவத்தனை;அவன் இங்ஙனே பாரித்துப் பேறு தலைக்கட்டப் பெற்றான்.  அதாவதென்னென்னில் ; [உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்] திருவிருத்த முதற் பாட்டிலே அழுக்குடம்பு " என்று தாம் வெறுத்ததை அவன் விரும்பப் புகுந்தான்.  இங்கே நம்பிள்ளை வீடு வியக்கத் தக்கது; – "அவனங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேஹத்தையே விரும்பிப் போந்தார்; அவன் இவரை யங்கீகரித்த பின்பு இவர் தன் தேஹத்தை வெறுக்க அவன் இவருடைய தேஹத்தை விரும்பபப் புக்கான் ; இவர்க்கு அவனோட்டை  ஸஹவுஸம் ஸ்வரூப ஜ்ஞானத்துக்கு உடலாய்த்து ; அவனுக் கு இவரோட்டை ஸஹவாஸம் தேஹாத்மாபிமாநத்துக்கு உடாய்து " என்று.  ஆருயிரும் உடனே யுண்டானென்கையாலே–தேஹமென்று ஹேயதாபுத்தியும் ஆத்மாவென்று உபாதேயதாபுத்தியு மில்லாமல் இரண்டிலும் தூல்யமான ப்ரதிபத்யையே கொண்டான்பது விளங்கும்

இப்படி ண்டவன் யாவென்ன, திருவளர்சோலைத் தென்காட்கரை யென்னப்பன் என்கிறது.  ஆழ்வாரை புஜித்து அவன் செழிப்புக் கொண்டமை அவனளவிலே நில்லாமல் அவனுறையு மூரிலுள்ள சோலைகளிலும் ஏறிப்பாய்ந்தது போலும்.

 

English Translation

Pretending to shower grace he entered into me, and in a trice he swallowed me, body and soul.  Oh, the tricks of dark hued Lord Krishna plays!  He lives in fertile groves of Tirukkatkarai

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain