(3839)

அறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க

நெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான்

வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன்

சிறியவென்னாயிருண்ட திருவருனே.

 

பதவுரை

தன் உள்

தனது ஸங்கல்பத்திலே

அனைத்து உலகும் நிற்க

ஸமஸ்த லோ பதார்த்தங்களும் தரிப்புற்றிருக்க

தானும்

இப்படி அவற்றை யெல்லாம் தரித்திருக்கிற தானும்

நெறிமையால்

சரீராத்மபாவ ஸம்பந்த மடியான சேஷ சேஷி பாவமாகிற முறைமை தவறாமல்

அவற்றுள் நிற்கும் பிரான்

அவற்றுக்குள்ளே நிற்கும் உபகாரகனாய்

வெறி கமழ் சோலை

பரிமளம் மமிக்க சோலைகளையுடைய

சிறிய என்

மிகவும் ஷீத்ரனான என்னுடைய

ஆர் உயிர்

ஆத்ம வஸ்துவை

உண்ட

மேல் விழுந்து அநுபவித்த

திரு அருள்

வியோமோஹத்தை

அறிகிலேன்

அறிகின்றிலேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார். "சிறிய வென்னாயிருண்ட திருவருளை அறிகிலேன்" என்று அந்வயித்துப் பொருள் அந்வயிப்பது மொருபுடையுண்டு; "உகப்பாலே செய்தானோ? இவ்வஸ்துவை யழிக்கைக்குச் செய்தானோ? அறிகிறிலேன்" என்பர் நம்பிள்ளை.  இப்படி விலைமுற்றைத் தனியே அந்வயித்து விட்டால் "சிறிய வென்னாயிருண்ட திருவருளே" என்றதற்கு வினை முற்று ஏது? என்னில் ; வினைமுற்று வேண்டாவே ; திருவருளே ! என்று ஈடுபாடாக முடிகிறபடி.

தன்னுள் அனைத்துலகும் நிற்க தானும் நெறியாமையால் அவற்றுள் நிற்கும் பிரான்=உலகங்களெல்லாம் தன்னுடைய ஸங்கல்பத்தைப் பற்றிக்கிடக்க, தான் அவற்றினுள்ளேதன் சேஷித்வமுறை தப்பாதபடி நிற்குமவன்.  இப்படிப்பட்டவன் வெறிகமழ் சோலைத் தென்காட்கரை யென்னப்பனாயிருந்து கொண்டு சிறியேனான என்றுடைய நசீவளைக் கபளீகரித்த விரமோஹம் என்னே!

 

English Translation

The Lord who contains all the worlds is contained in them.  I cannot understand how the Tirukkatkaai Lord fancied such a lowly soul as mine!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain