nalaeram_logo.jpg
(3837)

நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்

வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர்

கனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா

நினைகிலேன் நானுனக்காட்செய்யும்நீர்மையே.

பதவுரை

நினை தொள் பூ சோலை

தடாகங்களையுடைய பூஞ்சோலை களையுடைந்தான

தென் காட்கரை

திருக்காட்கரை யிவெழுந்தருளியிருக்கிற

என் அப்பா

எம்பெருமானே

வினை கொள் சீர்

பாபங்களைக் கொள்ளை கொள்ளும்தான் (உனது) திருக்குணங்களை

நினைதொறும்

நினைக்கிற போதெல்லாம்

நெஞ்சு இடிந்து

நெஞ்சானது சிதிலமாகி

சொல்லுந் தொறும்உகும்

(அக்குணங்களைச்) சொல்லாத தொடங்கின போதெல்லாம் (அந்த நெஞ்சானது) நீராயுருநா நின்றது

பாடிலும்

(அக்குணங்களைப்) பாடத்தொடங்கினாலோ

எனது ஆர் உயிர் வேம்

என்னுடைய அருமையான ஆத்ம வஸ்துவானது வேலா நின்றது.

நான்

இப்படியாகப் பெற்ற நான்

உனக்கு ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன்

உனக்குந் கைங்கரியம்பண்ணும் விதத்தை அறிகின்றிலேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– திருக்காட்கரை யெம்பெருமானை நோக்கி 'உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தனாகின்றிலேன்! ' என்கிறார்.   நினைதொறும் நெஞ்சு இடிந்து உகும் = குண சேஷ்டிதங்களை நினைப்பதாகத் தொடங்கினால் அந்நினைவு மாறாதே செல்ல முடியாதபடி. பலஹானி மிகும். ஆனாலும் மறக்கமாட்டார்;  மறுபடியும் நினைக்கத் தொடங்குவர்.  அந்த நினைவும் நெடுகச் சென்று தலைக்கட்டாது.   இப்படி எத்தனை காலம் நினைக்கப் புக்கது! எத்தனை காலம் மீண்டது! இது தோன் நினைதொறும் என்கிறார்.  (சொல்லுந்தொறும்) நெஞ்சால் நினைக்கவே முடியாத விஷயம் வாயாற் சொல்லவொண்ணா தென்பது சொல்லவேணுமோ? மநஸ் ஸஹகாரமின்றிக்கே யிருந்தாலும் அஹருதயமாகவே சொல்லிக் கொண்டிருப்பரே ஆழ்வார். (இவர் பேசுகிறாரல்லர்;  இவருடைய வாக்கும் பேசிக் கொண்டே யிருக்குமென்க). அப்படி பேசும்போது அப்பேச்சு செவி வழியாலே உள்ளே புகுந்து ஊற்றிருந்து குணாதிக விஷயமாகையாலே நெஞ்சையழிக்கும்;  நெஞ்சு இடிந்து உகும்–நெஞ்சகட்டுக் குலைந்து நீராகா நின்றது.  இங்கே ஊடு–நெருக்காற்றின் கரையிடிந்து பின் நீராய்க் கரைந்து போமாபோலே ஓரவயவியாகக்காண வொண்ணாதபடி உக்குப் போகா நின்றது.

வினைகொள் சீர்பாடிலும் வேம் எனதாருயிர்='விணைகொள்' என்பதற்கு இரண்டு படியாகப் பொருள் கொள்வர்;  வினையென்று தீவினைகளைச் சொல்லிற்றாகக் கொண்டு பாபமான கல்யாண குணமென்பது ஒருபொருள்.  வினையென்று பொதுவாகக் காரியத்தைச் சொல்லுகிற சொல்லாகையாலே எம்பெருமானுடைய சேஷ்டிதத்தைச் சொல்லுவதாக இங்குக் கொள்ளலாம். குண ஸாமந்யபரமான சீர் என்னுஞ்சொல் இங்கு சீல குணத்தைச் சொல்லுகிறது. சேஷ்டிதத்தைக் கொண்ட சீல குணமாவது–தாழ நின்று பரிமாறிக் காட்டின சீல குணம் என்பது மற்றொரு பொருள்.  அதைப் பாடினாலும் எனதாருயிர் வேம்–அதாஹயுமென்று கீதையில் சொல்லப்பட்ட அத்ம வஸ்துவும் தஹிக்கப்பட்டதாகிறது.  எல்லாவற்றுக்கும் குளிர்ச்சியைப் பண்ணக் கடலதான பனி தாமரையை மாத்திர கருகப்பண்ணு மாபோலே ஸகலர்க்கும் ஆர்த்தி ஹரமான குணங்கள் எனக்கு ஆர்த்தியை விளைவிக்கின்றன என்றாராயிற்று.  ஆகவே நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மை–நீ என்னிடம் தாழ நின்று ஆட்செய்து காட்டின சீல குணத்தை நெஞ்சாலும் நினைக்கமாட்டுகின்றிலேன் என்றபடி.  நீயெனக்காட் செய்யும் நீர்மை யென்ன வேண்டு மிடத்து 'நானுனக்காட் செய்யும் நீர்மையென்றது எம்பெருமானுடைய உக்தியின் அநுகாரமிருக்கிறபடி.  எம்பெருமானே ! நீ என்னிடம் தாழ நின்று 'நான் உமக்கு ஆட்செய்கிறேன்காணும்' என்று சொல்லுகிறாயே! இந்தச் சொல்லும் மருமத்தைப் பிளக்கின்றதே ! என்றாராயிற்று.

English Translation

In every thought and every world, my heart fails.  Even when I sing your praise, my soul melts.  My Lord and Father living in lake-abounding Tirukkatkarail! I cannot think of how I am to serve you

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain