(3836)

உருகுமால்நெஞ்சம் உயிர்ன்பரமன்றி

பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்

தெருவெல்லாங்காலிகழ் திருக்காட்கரை

மருவியமாயன்றன் மாயம்நினைதொறே.

 

பதவுரை

தெரு எல்லாம் காலி கமழ்

தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற

திருக் காட்கரை

திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே

மருவிய

பொருந்திவர்த்திக்கிற

மாயன் தன் மாயம்

எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை

நினைதொறு

நினைக்கிறபோதெல்லாம்

நெஞ்சம் உருகும்

நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது

உயிரின் பரம் அன்றி

ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல்

வேட்கை பெருகும்

ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது

தொண்டனேன் என் செய்கேன்

சபலனான நான் என்ன செய்யக் கடவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான

பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார். நெஞ்சம் உருகுமால்=அநுபவத் திற்கு முதன்மையான சருவி நெஞ்சன்றோ:  அதுவாயிற்று சிதிலமாகின்றது.  அநுபவிக்கைக்கும் அநுபவித்துக் களிக்கைக்கும் முந்துறுமுன்னம் நெஞ்சுவேணுமே;  அது சிதில்மா யொழிந்தால் என்ன வுண்டு? பெருக்காற்றிலே நீஞ்சப் புகுந்தவனுக்கு முதலடியிலேயே தெப்பம் ஒழுகத் தொடங்கினால் என்செய்வது? ப்ரதாநோபசுரணமான நெஞ்சு அழிகின்றதே வேட்கையும் உயிரின் பரமன்றிப் பெருகுமால்–ஆத்மாவால் தாங்க வொண்ணாதபடி அபிநிவேசம் பெருகுகின்றதே. ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் பெருகி வருகின்ற காதல் அணுபரிமாணமான ஆத்ம வஸ்துவின் அளவதன்றே! அடிதோறும் ஆல்! அல்! என்று விஷாதஸீசனம்.

என் செய்கேன் தோண்டனேன்!  = நெஞ்சு உருகாதபடி செய்யவும் வேட்கை பெருகாதபடி செய்யவும் ஒரு பாயமறி கின்றிலேன்.  அவனுடைய திருக்குணங்களைத் தவித்தாலன்றோ இவை செய்யலாவது.  நெஞ்சு உருகைக்கும் வேட்கை பெருகுகைக்கும் ஹேது சொல்லுகிறது மேல் தெருவெல்லாங் காவிகமழென்று தொடங்கி, குறுந்தெருவோடு நெடுந் தெருவோடு வாசியற எங்கும் நெங்கழுநீரின் நறுமணம் கமழப்பெற்றது திருக்காட்கரை வெளியே இப்பரிமளமானால் உள்ளே *ஸர்வகந்தா* என்னும்படியானவனுடைய பரிமளம் ஸாசாமகோசரம்.  அவனோ மாயன்–ஸெளந்தர்யம் ஸெளசீல்யம் முதலிய குணங்களினால் பிறரைப் பிச்சேற்றவல்லவன்.  அப்படிப் பட்டவனுடைய மாயம்–கிட்டடினபோது தாழநின்று பரிமாறின சீல குணம்;  அதனை நிதொறும் உருகுமால் நெஞ்சம்–என்று முதலடியோடே அந்வயிப்பது.

 

English Translation

My heart melts, more than I can bear.  My love surges when I recall his wonders.  Alas, what can I a mere servant, do? He lives in Tirukkatkarai where lotus blooms abound in streets

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain