(3834)

எழ நண்ணிநாமும் நம்வானநாடனோடொன்றினோம்

பழனநன்னாரைக் குழாங்கள்காள் பயின்றென்னினி

இழைநல்லவாக்கையும் பையவேபுயக்கற்றது

தழைநல்லவின் பம்தலைப்பெய்து எங்குந்தழைக்கலே.

 

பதவுரை

யழனம் முதல் தாரை குழாய்கள்தான்

நீர்நிலங்களிலே திரிகிற நல்ல நாரைத் திரள்களே!

தாமும் எழ நண்ணி

நாம் இவ்விபூகியை விட்டெழுந்து

நம் வானநாடனோடு ஒன்றினோம்

நம்பரம பத நாதனோடே சேர்ந்து பொருந்தி விட்டோம்

இனி பயின்று என்

(இனி நீங்கள் என்னை முடிக்கத் திரளவிருந்து) ஆலோசிப்பதில் என்ன லாபம்?

இழை நல்ல ஆக்கையும்

ஆபரணாபிராமநான சரீரமும்

பையவே

நாளடைவிலே

புயக்கற்றது

வசையற்றதாயிற்று

எங்கும்

உலகமெல்லாம்

தழை நல்ல இன்பம் தலைப்பெய்து

விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று

தழைக்க

வாழ்ந்திடுக

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– சில நாரைக் குழாங்கள் அருகே யிருந்து மந்த்ராலோசனை செய்யுமாபோலே தென்பட்டன;  தன்னை முடிப்பதற்கு அவை ஆலோசிப்பதாகக் கொண்டு அந்தோ! நான் முடிந்தேன் ; இனி நீங்கள் திரண்டு பயனென்கொல்? என்கிறாள்.  பழன நன்னாரைக் குழாங்கள்காள்  ! இனி பயின்று என்?=பழனமாவது நீர்நிலம்;  நீர் நிலங்களிலே உலாவுகின்று நல்ல நாரைக் கூட்டங்களே !  நீங்கள் ஒன்று கூடி ஆலோசிப்பதில் இனி என்ன பயன்? இதற்கு முன்பு ஏதேனும் பயனிருந்தாலும் இருக்கக்கூடும்;  இது நாறும் ஜீவித்திருக்க நசைமயிருந்தபடியாலே உங்களுடைய உத்யோகத்திற்கு ஏதேனும் பயன் ஸம்பாவிதமாகலாம்;  இனி ஜீவித்திருக்குமாசையில்லை;  நாமும் எழநண்ணி நம் வான நாடனொடு ஒன்றினோம்=நாமும் போக்கிலே யொருப்பட்டு அயர்வறு மமரர்களதிபதியோடே ஒன்று சேர்ந்தோமானோம்;  நாம் ஜீவிக்க வெண்ணி யிருந்தகாலம்போய் முடிகையிலே துணிந்தோம்.  ஆன பின்பு இனி நீங்கள் திரண்டு பிரயோஜனமில்லை.

இப்படி சொல்லக் கேட்ட நாரைகள் "நீர் இங்கேயே

திருப்புயாழ்வாரடியிலேயே எழுந்தருளி யிருப்பது காண்கிறோமே;  எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடொன்றினோ மென்றது பொய்யுரையாகவன்றோ வுள்ளது என்று சொல்ல; அதற்கு மறுமொழி கூறுவது மூன்றாமடி; [இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது] உடல் ஒன்றே இங்குள்ளது  அதுவும் இதோ போய்க்கொண்டே யிருக்கிறது என்றபடி.  இழை நல்ல ஆக்கை =இழை யென்று ஆபரணத்திற்குப் பெயராதலால், ஆபரணங்களினாலே அழகியதான சரீரம் என்றபடி,.   அன்றியே, அவனுக்கு ஆபரணம்போலே ஸ்ப்ருஹணீயமான சரீரம் என்றுமாம்.  பையவே என்றது இன்று நாளையிலே யென்றபடி.  புயக்கற்றது–பசையற்றது, தொலையப்போகிறது என்பது கருத்து.

தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்குத் தழைக்கவே= இதற்கு மூன்று ஆசிரியர்கள் மூன்று வகையாகக் கருத்துக் கூறினராம்;  பெரியவர்களாயிருப்பார் பரமபத மெழுந்தருளும் பேரது லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸீகிநோ பவந்து என்றும் 'நாடு வாழ்க' வென்றும் மங்களாசாஸனம் செய்துகொண்டு போவார்களாதலால் ஆழ்வாரும் அப்படியே மங்களாசாஸனம் செய்து போவதாக ஆளவந்தார் நிர்வஹிப்பராம்.  அங்ஙனன்றிக்கே எம்பெருமானார் நிர்லஹிப்பதாது, 'நான் பிறந்து பகவத் விஷயத்திலிடுபட்டுப் படாதபாடுகளும் பட்டேன்; இதோ நான் முடிகிறேன்; நான் பட்டபாடு பிறரொருவரும் பட வேண்டா ' என்பதாக. இதிற் காட்டிலும் மவிலக்ஷணமாக பட்டர் நிர்வஹிப்பராம்–இது வரையில் ஆழ்வார் படும்பாடுகளைக் கண்டு, ஐயோ!  இவர் இவ்வளவு ஆத்திகளை யடைந்து வருந்துகிறாரே!  நமக்கும் கண்டு பொறுக்க முடியாத ஆர்த்தியாயிருக்கிறதே!  இவரை எம்பபெருமான் விரைவாக திருவடி சேர்த்துக் கொள்ளலாகாதா? என்று பலர் நினைத்திருந்தார்களாம்;  அப்படிப்பட்டவர்களை நோக்கி, இதோ நான் என் ஆர்த்தியெல்லாம் தீர்ந்து முடிந்து போகின்றேன்;  என் ஆர்த்தி கண்டு நோவுபட வேண்டாவினி நீங்கள்;  ஆனந்தமாக இருங்கள் என்கிறார்–என்பதால்.

 

English Translation

O Good water-egrets! I desired union with the Vaikunta Lord knowingly.  This jewel body has learnt to slip away bit by bit.  Now what use flocking around me?  May joy descend and reign everywhere!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain