(3830)

நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளிப்பைதலே!

இன்குரல்நீமிழற்றேல் என்னாருயிர்க்காகுத்தன்

நின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன்கைகாவினன்

நின்பசுஞ்சாமநிற்ததன் கூட்டுண்டுநீங்கினான்.

 

பதவுரை

நன்கு எண்ணி

எனக்கு ஆபத்திலே உதவுவாயென்று நன்மையை நினைத்து

நான் வளர்த்த

நான் போஷித்து வந்த

சிறு கிளி பை தலே

சிறிய கிளிக் குட்டியே!

இன் குரல் நீ மிழற்றேல்

இனிய குரலைக் கொண்டு நீ தொனி செய்யாதே (ஏனென்னில்)

நின் செய்ய வாய் ஒக்கும் வாயுன்

உனது சிவந்த வாயையொத்த வாயையுடையவனும்

கண்ணன் கை காலினன்

(உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும்

நின் பசும் சாமம் நிறத்தன்

உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும்

என் ஆர் உயிர்

என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான

காகுத்தன்

இராமபிரான்

கூட்டுண்டு நீங்கினான்

என்னோடே கலந்துப் பிரிந்தான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– இந்த நிலைமையில் நாம் திருநாமத்தைச் சொல்லலாகாது என்றறியாதே திருநாமத்தைச் சொல்லி நவிகிற கிளிப் பிள்ளையைக் குறித்து எனக்கு அஸஹயமான தசையிலே இப்படிச் சொல்லி நலியவே உன்னை நான் வளர்த்தது!  என்று சொல்லி அத்தை நிவர்த்திப்பிக்கிறாள்.  நன்கெண்ணி நான் வளர்த்த–வளர்த்தலாவது திருநாமங்க கற்பித்தல்;  எந்த மையத்தில் திருநாமம் சொன்னால் ஸாத்மிக்கும்;  எந்த ஸமயத்தில் அது சொன்னால் பாதகமாகும்–என்பதை யறிந்து மையம் பார்த்துச் சொல்லுமாயென்று உனக்கு நான் கற்பித்து வைத்திருக்க, இங்ஙனே பாதகமான நிலைமையிலே திருநாமத்தைச் சொல்லிக் கொலை பண்ணுவது முண்டோ!  என்று கிளிப் பிள்ளையை நோக்கி நோகிறான்.  இன் குரல் நீ மிழற்றேல்–இன் குரல் என்றது கூரியவேல் என்னுமாபோலே யென்பர் நம்பிள்ளை. கிளியே!  உன்னுடைய குரலாகிற கூர்வேல யிட்டுக் கொலை பண்ணாதே யென்றபடி. "நிரம்பரமென் சொல்லால் என்னை முடியாதேகொள்;  மாத்ருவதத்திலேயும் ப்ரவர்த்திப்ருண்டோ?" என்பது ஈடு.

இப்போது எம்பெருமான் என்னோடு கூடியிருந்தானாகில், நீ திருநாமஞ் சொல்லுவது எனக்குப் பரம போக்யமாகவேயிருக்கும்;  அவனோ பிரிந்து போயினான்.  ஆன பின்பு, அவன் வடிவுபோலே யிருக்கும் உன் வடிவைக் காட்டி, அதற்கு மேலும் அவன் திருநாமங்களையுஞ் சொல்லி என்னை நோவு படுத்தாதே யென்றாளாயிற்று.

 

English Translation

O Puerile parrot!  I have brought you up well.  Now do not start your sweet prattle. Your beak and feathers take my mind to my Lord Rama again. He enjoyed union with me then, and deserted me!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain