(3829)

அந்தரநின்றுழல்கின்ற யானுடைப்பூவைகாள்!

நுந்திறத்தேதுமிடையில்லை குழறேன்மினோ

இந்திரஞாலங்கள்காட்டி யிவ்வேழுலகுங்கொண்ட

நந்திருமார்பன் நம்மாவியுண்ணநன்கெண்ணினான்.

 

பதவுரை

அந்தரம் நின்று

நடுவே வீணாகப் பரிச்சாப்படுகிற உழல்கின்ற

யானுடைய பூனவ காள்

என்னுடைய பூவைகளே !

நும் திறந்து எதும் இடை இல்லை

உங்கள் உத்யோகத்திற்குச் சிறிதும் அவகாசமில்லை

குழறேன்மின

உங்கள் தொனியைக்காட்டி நலி வேண்டா

இந்திர ஞாலங்கள் காட்டி

(பண்டுமாவலியிடத்து) மாயா விநோதங்கள் காட்டி

இவ் எழ் உலரும் கொண்ட

இவ்வேழுலகங்களையும் ஆக்ரமித்து கொண்டாடப் போலே என்னையும் கொள்ளை கொண்ட

நம் திருமார்பன்

நமது திருமால்

நம் ஆவி உண்ண

நம்மூயிரையும் கொள்ளை கொள்ள

நன்கு எண்ணினான்

நன்றாக ஸங்கல்பித்தான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– இப்பாட்டின் முன்னடிகள் பூவைகளை நோக்கிச் சொல்லுவது;  பின்னடிகள் தன்னிலேதான் சொல்லிக் கொள்வது.  அந்தரம் நின்றுழல்கனிற் பூவைகளே!  என்றது–நிஷ்ப்பலமாக நின்று சிரமப்படுகிற பூவைகளே!  என்றபடி. இங்கு ஏதாவது பசை யிருந்தால் நலியலாம்;  அப்படி யொரு பசையின்றிக்கே யிருக்க, வீணாக ஆயாஸப்படுவது எதற்காக? என்றவாறு, யானுடைப் பூவைகாளென்றது என்னுடைப் பூவைகளே!   என்றபடி. நீங்கள் நான் வளர்த்த பூவைகளாயிருந்து வைத்து என்னை இப்படி நலியலாமோ? என்பது கருத்து, என்னுடைய பூவைகளான படியினாலேயே நலிகின்றீர்கள் போலும்;  அவனும் என்னுடைய வனாகையாலேயே யன்றோ நலிகின்றான்.  நலிகைக்கு என்னுடைமையே ஹேது போலும்–என்பதுமொரு கருத்து.

நுந்திறத்து ஏது மிடையில்லை குழறேன்மினோ=என்னைக் கொலை செய்வதற்கு உங்களிடத்தே ஒரவகாச மில்லை;  அநக்ஷரரஸமான பேச்சைக் காட்டி யென்னை ஹிம்ஸிக்க வேண்டா வென்றபடி. என்னைக் கொலை பண்ணுவதற்கென்று கங்கணங் கட்டிக்கொண்டிரா நின்ற எம்பெருமான் தன்னுடைய அக்காரியத்தில் தான் ஜாகரூகனாயிருக்க, உங்களுக்கு எதுக்கு வீண் பரிச்ரமம்? என்னை நலிவதில் அவன் லிகவாங்கினா லன்றோ நீங்கள் அதை நிறைவேற்ற வேண்டும்;  அவன் உங்களுக்கு அவசாகம் வைத்திலனே என்றாளாயிற்று.

இனி, பின்னடிகளுக்கு ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்தி காண்மி;– "பண்டு இந்த லோகத்தைத் தனக்காக்கிக் கொள்ளுகைக்குச் சில பொய் செய்தாப்போலே–என்னோடே கலந்து பரிமாறுகிறானாகத் தோற்றும்படி சில பொய்களைச் செய்து அகன்று போனவது என்னை முடிக்கைக்கு நல்ல விரகு பார்த்தான்; என்ன சதுரனே! என்று தன்னிலை நொந்து சொல்லுகிறாள்." என்று, இந்திர ஜாலங்கள்போலே த்ருஷ்டி சித்தாபஹாரியான வடிவுகையும் சிலத்தையும் சேஷ்டிதத்தையும் காட்டி வாய்மாளப் பண்ணி, ஆஸுரப்ரக்ருதியான மஹாபலி என்னதென்றிருந்த லோகத்தைத் தன்னதாக்கிக் கொண்டாப்போலே, என்னையும் ஸெளந்தர்ய சீலாதிகளைக் காட்டி வாய்மாளப்பண்ணி, நான் என்னதென்றிருந்த ஆத்மாவைத் தன்னதாக்கிக் கொண்டவவன் இப்போது என்னை முடிக்கைக்கு நல்லுபாயம் பார்த்தான் ஸர்வசக்தன் உத்யோகித்த காரியத்திலே குறை கிடக்குமோ?

பின்னடிகளும் பூவைகளை நோக்கியே சொல்லுகிறதெனினும் குறையில்லை.

 

English Translation

O My perching Mynahs!  Do not cajole! I have nothing to do with you anymore.  The Lord of Sri then took the Earth by trick; he has planned to rob my life as well

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain