(3828)

கூக்குரல்கேட்டும் நங்கண்ணன்மாயன் வெளிப்படான்

மெற்கிளைகொள்ளேன்மின் நீருஞ்சேவலுங்கோழிகாள்!

வாக்கும்மனமுங் கருமமும்நமக்காங்கநே

ஆக்கையுமாலியும் அந்தரம்நின்றுழலுமே

 

பதவுரை

கோழிகாள்

மயில்களே!

கூக்குரல் கேட்டும்

நீங்கள் பாஸ்பரம் அழைத்துக் கொள்ளுகிற தொனியைக் கேட்டும்

நம் மாயன் கண்ணன்

நமது மாயக்கண்ணன்

வெளிப்படான்

வந்து தோன்றுகின்றவன்

நீரும் சேவலும் மேல் கிளை கொள்ளேன் மின்

நீங்கள் ஆணும் பெண்ணுமாயிருந்து உயரக் கூவ வேண்டா

நமக்கு

என்னுடைய

வாக்கும் மனமும் கருமமும்

காணத்ரய வ்ருத்தியும்

ஆங்கதே

அப்பெருமான் பக்கலிலே யாயிற்று

ஆக்கையும் ஆவியும்

உடலும் உயிரும்

அந்தரம் நின்று உழலும்

நடுவே நின்று தத்தளிக்கின்றன

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– சில மயில்களை குறித்து, நீங்கள் உயரக்கூவி என்னுயிரை முடிக்கப் பார்க்கிறீர்களே!  இது நீதியோ வென்கிறாள்.  கூக்குரல் கேட்டும் நங்கண்ணன் மாயன் வெளிப்படான்= உங்களுடைய கூச்சல் கேளாதவிடமுண்டோ? எங்குங் கேட்குமே; திரு நாட்டிலுள் கேட்குமே; அது கேட்டு இங்கு நான் படுகிற பாட்டை அங்கு அவனும் பட நேருமே;  அப்படியிருந்தும் அவன் பதறியோடி வாராதே கிடக்கிறானே! இஃது என்னோவென்கிறாள்.  இத்தால் தன்னுடைய ஆற்றாமைமிகுதியைக் காட்டினாளாயிற்று.  இங்ஙனே சொல்லச் செய்தேயும் அவை முன்னிலும் உயர்ந்த தொனியைச் செய்தன;  செய்யவே, மேற்கிளைக் கொள்ளேன்மின் நீருஞ் சேவலும் கோழிகாள் என்கிறாள்.  இங்கு கோழியென்றது மயிலை. கிளையாது தொனி;  மேலான கிளை–உச்சத்வநி, உங்கள் ஜாதிக்குத் தக்கதாய் ப்ரணயப்ரயுக்தமான உச்சத்வநியைப் பண்ணவேண்டா வென்றபடி.

இங்ஙனே சொல்லச் செய்தேயும் அவை உச்சத்வனியையே

செய்ய;  என்னுடைய ஸர்வகரணங்களையும் முடித்தே விடுவதாக ஸங்கல்பித்து வந்தன்றோ நீங்கள் இப்படி உச்சத்வனியைப் பண்ணா நின்றீர்கள்;  என்னுடைய கரணக்ராமங்களில் ஒன்றும் இங்கில்லையே;  (வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே) என்னுடைய ஸகலகாரணங்களும் அவன் பக்கலிலே சென்று சேர்ந்தனவே;  அங்கே சென்று கத்துங்கோள் என்றாளாயிற்று.  'உம்முடைய வாக்கும் மனமும் கருமமும் அங்கே சென்றற்றவனவாசில் இங்கே நீர் பேசுகிறபடி எங்ஙனே?' என்று அவை கேட்பதாகக் கொண்டு, ஆக்கையுமாலியும் அந்தரம் நின்றுழலுமே என்கிறாள்; உடலும் உயிரும் ஏதோ நடுவே நின்று அனர்த்தப் படுகின்றன வத்தனை; தரித்து நிற்பதாக நினைக்க வேண்டா என்றபடி.

 

English Translation

O Peahen-and peacock!  The trickster Krishna does not heed your calls, pray do not take to the upper register.  My heart and speech and deeds are all these with him, my soul and body flounder somewhere between!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain