(3827)

அவன்கையதேயெனதாருயிர் அன்றிற்பேடைகாள்

எவஞ்சொல்லிநீர் குடைந்தாடுதிர் புடைசுழவே

தவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர் இங்குண்டோ?

எவஞ்சொல்லிநிற்றும் நும்மேங்குகூக்குரல் கேட்டுமே.

 

பதவுரை

அன்றில் பேடைகாள்

பெண்ணன்றில் பறவைகளே

எனது ஆர் உயிர் அவன் கையுதே

எனது அருமையானவுயீர் அவன் கைப்பட்டதே

நீர் எவம் சொல்லி

நீங்கள் ஏதேதோ உக்திகளைப் பேசிக் கொண்டு

குடைந்து

ஸம்ச்லேஷித்து

புடை சூழவே ஆடுதிர்

என் கண் வட்டத்திலேயே திரிகின்றீர்கள்;

தவம் செய்தில்லா

அவனைப்போலே பிரிவுக்கு ஆறியிருக்கும்படியான பாக்கியம் பண்ணாத

பினையாட்டியேன் உயிர்

பாவியான என்னுடைய பிராணன்

இங்கு உண்டோ

(அங்கே போனபடியாலே) இங்கு இல்லையே

நும் எங்கு கூக்குரல் கேட்டும்

உங்களுடைய பரேம கனமான தொனியைக் கேட்டும்

எவம் சொல்லி

எத்தைச் சொல்லித் தரிப்பது? நிற்றும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– மீண்டு மிப்பாட்டிலும் அவ்வன்றிற் பேடைகளையே யிரக்கின்றாள்.  அவன் கையதே யெனதாருயிர்–அவனுடைய உயிர் என் கைப்படதாயிருந்த நிலை கழிந்து என்னுடைய உயிர் அவன் கைப்படநாம்படியான நிலையாயிற்று.  கீழ் நாலாம்பத்திய "உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும்" என்றாரே.  ஒரு காலத்தில் இவருடைய உயிர் அவனதாயிருப்பதும், மற்றொரு காலத்தில் அவனுடைய உயிர் இவரதாயிருப்பது முண்டே.  அன்றிற் பேடைகாள்= நீங்கள் இப்போது கூடியிருந்து ரஸமநுபக்கிறீர்கள்.  இந்த ரஸமறிந்த நீங்கள் பிரிந்தார் படும் துயரமும் அறிய வேண்டாவோ? அஃதறிந்தால், பிரிந்த வென்னை இப்படி கூக்குரலாலே நேரவு படுத்துவீர்களோ? எவஞ் சொல்லி நீர் குடைந்தாடுதிர்=நீங்கள் எத்தனை உக்தி விசேஷங்களைச் சொல்லி நிபிட ஸம்ச்லேஷம பண்ணிப் பரிமாறுனிற்றீர்கள்!  உங்களுடைய பேச்சும் காதால் கேட்கப்போகிறதில்லை, உங்களுடைய செயலும் கண்ணால் காண முடிகிறதில்லையே!  என்கிறாள்.  அவ்வன்றிற் பேடைகளின் அநக்ஷரராஸமான பேச்சுக்களைத் தன் வாயால் அநுவாதஞ் செய்யவும் கூசின படியாலே எவஞ் சொல்லி என்கிறாள்.  எத்தெத்தையோ சொல்லுகிறீர்களே !;   உங்களுடைய குசால் உங்கள் பேச்சிலன்றோ தெரிகிறது என்கை.  விரஹிகளுக்கு உத்தீபகமான தொளியன்றோ அது.

புடை சூழவே–தொனி மாத்திமன்றே என்னை யழிக்கிறது;  நீங்கள் உந்தம் சேவலுடனே சுற்றிச்சுற்றி ஸஞ்சரியா நின்றீர்களே! இந்த உங்கள் கொந்தளிப்பைக் கண் கொண்டு காண முடிய வில்லையே; செயைப் புதைத்துப் பிழைப்பேனோ? கண்ணைப் புதைத்துப் பிழைப்பேனோ? என்கிறாள்.

தவஞ்செய்தில்லாவினையாட்டியேனுயிர் இங்குண்டோ?= தவமாவது பாக்கியம், பாக்ய ஹீகையான வினையாட்டியேன் என்று இத்தலைவி தன்னை நிந்தித்துக் கொள்வதற்கு இருவகையான கருத்துக் கூறுவர்கள்; "உயிரை இங்கே வைத்து உபகரிக் கபாக்யம் பண்ணிற்றிலேன்" என்பது ஒரு கருத்து;  அதாவத? என்னுயிர் நீடித்திருந்தாகில் என்னை நீங்களும் நீடித்து நவிய நேரும்; இவ்வழியாலே உங்களுக்கு ஒருபகாரம் பண்ணினேனாவேன்;  உயிர் சென்று கொண்டேயிருக்கையாலே இவ்வுபகாரம் செய்ய பாக்யம் பண்ணாதவளாயினேன் என்பதான்.  மற்றொரு கருத்தாவது="அவனைப் போலே பிரிவுக்குச் சிளையாதபடி பாக்யம் பண்ணப் பெற்றிலேன்" என்று பிள்ளான் பணிப்பராம்.  பிரிவு என்பது வ்யக்தித்வய நிஷ்டமாகையாலே, எம்பெருமானை நான் பிரிந்திருப்பதுபோல என்னை அவன் பிரிந்திருப்பது முண்டே; ஆனால் அவன் இப்பிரிவுக்குச் சிறிதும் வருந்துகிறானல்லன்; நானும் அப்படி வருந்தாதிருக்கலாமே; அதற்கு பாக்யம் பண்ணிற்றிலேன் என்கை.  இப்படிப்பட்ட தௌர்ப்பாக்ய சாவிநியான என்னுடைய, உயிர் இங்கு உண்டோ–=கொள்ளை கொளள் வீட்டினுள்ளே புகுந்தவர்களுக்கு வீட்டுக்குடையார் விளக்கேற்றிக் காட்டி இங்கு ஏதேனும் ஒரு சரக்காவது இருக்கின்றதா பார்த்துக் கொள்ளுங்கள் என்று காட்டுமாபோலே காட்டுகிறளாம் பராங்குச நாயகி.  உயிர் இருந்தாலன்றோ நீங்கள் நலியலாம்; இங்கு உயிரிலையே, நீங்கள் நலிந்து என் பயன்? என்கிறாளாயிற்று. உயிர் இல்லாவிடில் இப்பேச்சு எங்ஙனே பேசுகிறாளென்று கேட்க வேண்டா ; உயிர் போகுந் தருவாயிலிருக்கிறது என்பதே உயிரிங்குண்டோ– என்றதன் கருத்து.

நும் ஏங்கு கூக்குரல் கேட்டும் எவஞ்சொல்லி நிற்றும்–கேட்டாரை முடிக்கவல்லதான உங்கள் தொனியைக் கேட்டுங்ககூட நான் தரித்திருக்க முடியுமோ?

 

English Translation

O Lady herons!  My life is hands, need you go around me with your coquettish walks and jibes?  This sinner-self has done no penance to service; Alas, how can I hear your piteous calls and live?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain