(3825)

இன்னுயிர்ச்சேவலும் நீருங்கூவிக்கொண்டிங்கெத்தனை

என்னுயிர்நோவமிழற்றேன்மின் குயிற்பேடைகாள்

என்னுயிர்க்கண்ணபிரானை நீர்வரக்கூவகிலீர்

என்னுயிர்கூலிக்கொடுப்பார்க்கும் இத்தனைவேண்டுமோ.

 

பதவுரை

குயில் பேடைகாள்

பெண் குயில்களே!

இன் உயிர்சேலும் நீரும்

உங்களுடைய உயிர் போன்ற சேவல்களும் நீங்களும்

கூவிக் கொண்டு

(கலவிக்காகப்)பரஸ்வரம் கூவிக்கொண்டு

இங்கு

என் கண் வட்டத்திலே

எத்தனை

மிகவும்

என் உயிர் நோவ

என் பிராணன் நோவுபடும்படி

மிழற்றேல்மின்

தொனியைச் செய்யவேண்டா:

என் உயிர் கண்ண பிரானை வர

எனக்கு உயிரான கண்ண பிரான் இங்கு வந்துசேரும்படி

நீர் கூவ கிலீர்

நீங்கள் அழைக்க மாட்டீர்கள்

என் உயிர் கூலி கொடுப்பார்க்கு

என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க நினைத்திருக்கு முங்களுக்கு

இத்தனையும் வேண்டுமோ

இவ்வளவு பாரிப்புக் தான் வேணுமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– சில குயிற் பேடைகளை நோக்கி நீங்கள் என்னை முடிக்க வேண்டினால் அதற்கு இத்தனை பாரிப்பு வேணுமோ? கோழி வெண் முட்டைக்கு என் செய்வதெந்தாய் குறுந்தடி (கோழி முட்டையை யடிப்பதற்குச் சிறு தடிதான் வோணுமோ?) என்றாப்போலே, அபலையாய் அற்றுக்கிடக்கிற வென்னை முடிக்கைக்கு இவ்வளவு ஸம்பிரமங்கள் வேண்டியிருந்த தோவுங்களுக்கு? என்கிறாள்.  இன்னுயிர்ச் சேவலும் நீரும் = குயிற் பேடைகளே! உங்களுக்கு நற்சீவனான சேவலும், சேவலுக்கு நற்சீவனான நீங்களுமாய்க் கூடியிருந்து, இப்படி சேர்த்தியைக் காட்டி நலிகிறதுக்கு மேலே;  கூலிக்கொண்டு–பேச்சாலும் கவிய வேண்டுமோ? விரணிகளுக்குக் கூடியிருப்பாரைக் காண்பதும் அஸஹயம்;  அவர்கள் பரஸ்பரம் பேசும் பேச்சுக்களைக் கேட்பதும் அஸஹயம்.  இவ்விரண்டையும் காட்டுகிறது இங்கு.

இங்கு எத்தனை எண்ணுயிர் நோவ மிழற்றேல்மின்= ஏற்கெனவே அற்றுக்கிடக்கிற என்னுயிர் இன்னமும் படுகொலைப்படும்படி உங்களுடைய கூக்குரலை வெளிப்படுத்த வேண்டாவென்கிறாள்.  பிரிவிலே தளர்ந்திருக்கிற என்னுயிர் சிதிலமாம்படி மிகவும் ப்ரணய கூஜிதத்தைப் பண்ணுதே ருங்களென்கிறாள்.  'என்னுயிர் நோவ' என்கிற விதில் ஒரு விசேஷப் பொருள் கூவுங்கோள்;  என்னருகே கூவினால் என்னுயிர் அங்ஙனம் தளிர்க்காது, சிதிலமாகும் ;  ஆகவே இங்கு மிழற்றேல்மின் என்பதாக.

இங்ஙனம் சொல்லக்கேட்ட குயிற் பேடைகள் 'எங்களுடைய ஜாதிக்குக் கூவுகை தானே இயல்வு; அதனைத் தவிர்ந்திருக்க முடியுமோ?' என்ன:  அதற்குச் சொல்லுகிறான் என்னுயிர் கண்பிரானை நீர்வரக் கூவகிலீர் என்று, உங்களுக்கு கூவுகையே பண்யானால், என்னுயிரான கண்ணபிரான் இங்கே வந்து சேருமாறு அவனைக் கூவலாகாதோ?–அது செய்யாதே யிருக்கிறீர்களே யென்கிறாள். என்னுயிரை மாய்ப்பதற்காகவே நீங்கள் கூவுகிறீர்கள்;  அந்தோ இதற்கு இத்தனை ஸம்பிரமம் வேண்டியிருந்ததோ? என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க நினைத்த வுங்களுக்கு இத்தனை முயற்சி வேணுமோ? என்னுயிரை நானே கூவிக் கொடுக்க ஸித்தமாயிருக்க, உங்களுக்கு இத்தனை பாரிப்பு வேணுமோ? என்றுமாம்.

 

English Translation

O Lady Cuckoo! What have you against me?  Must you and your mate come here to coo sweetly? Alas, you do not call my Krishna to come, need you try so hard to take my life?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain