nalaeram_logo.jpg
(3817)

உறுவதிதுவென்று உனக்காட்பட்டு நின்கண்

பெறுவதெதுகொலென்று பெதையேன்நெஞ்சம்

மறுநல்செய்யும் வானவர்தானவர்க்கென்றும்

அறிவதரிய அரியாயவம்மானே.

பதவுரை

வானவர் தானவர்க்கு

அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற

என்றும் அறிவது அரிய

எப்போதும் அறிய வொண்ணாத

அரிய ஆய அம்மானே

நரஸிம்ஹ மூர்த்தியே

இனி உறுவது என்று

'இதுதான் ஸ்வரூபா நுரூபம்' என்றறுதி யிட்டு

உனக்கு ஆள்பட்டு

உனக்கு சேஷ பூதனாகி

நின் கண் பெறுவது எது கொல் என்று

உன் பக்கலில் நான் பெறக் கூடிய பேறு எதுவோவென்று [நித்ய கைங்கரியமோ அல்லது ஸம்ஸார்க்த்தானோ வென்று]

பேதையேன் நெஞ்சம்

அறிவிலியான என்னுடைய நெஞ்சானது

மறுகல் செய்யும்

கலங்கா நின்றது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

**– தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.  'எம்பெருமானுக்கு ஆட்படுவது தான் ஸ்வரூபா நுரூபம்' என்று துணிந்து அவனுக்கு ஆட்பட்ட பின்வு கலங்குவதற்கு நியாயமில்லை; அப்பெருமான் நமக்குநன்மையே செய்தருள்வான்; என்கிற துணிவோ, அல்லது 'அவன் நமக்கு எது செய்தாலும் அது நமக்கு ப்ராப்யமே' என்கிற துணிவோ, இரண்டத்தொன்று இருந்து தீரவேண்டும் செய்த்தலை யெழு நாற்றுப்போல் அவன் செய்வன செய்து கொள்ள என்று துணிந்து கவலையற்றிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அந்தத்துணிவு நமக்கு உண்டாகாமல் 'நித்ய கைங்கர்யம் நேருமோ? அல்லது ஸம்ஸாரத்தில் இன்னமும் கிடந்துழல்வதேயாகுமோ?' என்கிற கலக்கமே உண்டாகியிருப்பதாக விண்ணப்பஞ் செய்கிறார்.

உறுவது இதுவென்று–மேலே 'ஆட்பட்டு' என்றிருக்கையாலே இதுவென்பதற்குப் பொருள் ஆட்படுகையேயாம்.  'உண்டியே உடையே உகந்தோடுவது நமக்கு உற்றதன்று; எம்பிரானுக்கு ஆட்படுகைதான் உற்றதாகும்' என்று கொண்டு=என்றபடி,.

உனக்கு ஆட்பட்டு–அவ்வுறுதி கொண்டவளவோடு நில்லாமல் அவ்வுறுதியை அநுஷ்டான பர்யந்தமாக்கி யென்றபடி. விழிக்குங்கண்ணிலேன் நின்கண்மற்றல்லால் வேறொருவரோ டென்மனம் பற்றாது என்றும், உனக்குப்பணி செய்திருக்குந் தவமுடையேன் இனிப்போயொருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்சாயை யழிவுகண்டாய் என்றும், எற்றைக்கும் மேழேழ்பிறவிக்கு முன்றன்னோடுற்றோமேயாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்றும் கொண்டிருந்து என்றபடி.

இப்போது இதுசொல்லுகிறது எதற்காக வென்னில் ; "நின்கண்பெறுவ தெதுகொலென்று பேதையேன்னெஞ்சம் மறுகல்செய்யும்" என்று மேலே சொல்லப்படுகிற விஷயம் இவ்வுறுதிக்குத் தகுந்ததாக இல்லையே! என்பதற்காகச் சொல்லுகிறது.  இவ்வுறுதி எனக்கு உண்டாகாமலிருந்தால் நான் கவலைப்படலாம் ; இவ்வுறுதியைப் பெற்றுவைத்தும் நான்கலைப்படுறிது தகுதியன்றோ;  தகாதது நேர்ந்திருக்கிறதே ! என்று கிலேசிக்கிறார். நிண்கண் பெறுவது எதுகொல் என்று – செய்கிறோம் செய்கிறோமென்று தலைதுலுக்கிக் கொண்டிருந்து இன்னமும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறக்க வைக்கிறாயோ அல்லது என்னாற்றாமையையறிந்து விரைந்து வந்து முகங்காட்டுகிறாயோவென்று நெஞ்சு தளும்பா நின்றதாம்.

இதுகேட்ட எம்பெருமான் 'ஆழ்வீர்! நீரிப்படி கலங்குவதற்குக் காரணன்?' என்று கேட்க, அக்காரணமுரைக்கும் முகத்தால் எம்பெருமானை விளிக்கிறார் வானவர் தானவர்க்கென்று மறிவதரிய அரியாயவம்மானே ! என்று பிரதிகூலர்களான தானவர்க்குப் போல அநுகூலர்களான வானவர்க்கும் அறியவொண்ணாதவனாயிருந்தாயே, என்னையும் அவர்கள் கோடியிலே யாக்குகிறாயோ வென்று கலங்கா நின்றேனென்றபடி. அரியாயவம்மமோ என்று நரஸிம்ஹனையுங்கூடச் சேர்த்துச் சொன்னதனால் ஒரு சிறுக்கனுக்கு (ப்ரஹலாதனுக்கு) உன்னை உள்ளபடி அறியலாயிற்றே;  அவனுடைய கோடியில் தான் என்னைச் சேர்க்கிறாயோ? என்று கேட்பதாகவும் தெரிகிறது.

English Translation

Lord confounding the gods and Asuras, you came as Narasimhal Fittingly I have surrendered myself, but fear for what lies ahead

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain